வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
  1. கிசான் கடன் அட்டை
  2. யுனைடெட் கிரிஷிஜா லாகு பரிபாஹான் யோஜனா
  3. யுனைடெட் கிரி„ி சகாயக் யோஜனா
  4. யுனைடெட் கிராம்ய‚ யோஜனா
  5. சுய உதவிக்குழு
  6. கிராமின் பந்தரன் யோஜனா
  7. பொன் விழா ஆண்டு கிராமப்புற வீட்டுக் கடன்  திட்டம்
  8. யுனைடெட் பூமிஹீன் கிசான் கடன் அட்டை
  9. யுனைடெட் கிராமின் சகாஜ் கடன் அட்டை
  10. யுனைடெட் சகாஜ் ரின் யோஜனா (வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும்)

1. கிசான் கடன் அட்டை
குறிக்கோள் 
இத்திட்டம் குறிப்பிட்ட கடன் தேவைகளை விவசாயிகளுக்கு ஒரு குடையின் கீழ் எளிதாக்கப்பட்ட செயல்முறையின் மூலம் முழு பண்ணை எதிர்நோக்குதல் மூலம் சிறு கடன் தவணை தேவைகள், நுகர்வுத் தேவைகள் மற்றும் விவசாயிகள் கடன் தவணைகளை நிறுவனம் அல்லாதோரிடம் திருப்பிச் செலுத்துவதற்கு கிசான் அட்டை உதவுகிறது.
செய்பணி செயல் பகுதி

  • கிராமப்புற மற்றும் நகராட்சி கிளைகள் மூலம் வழங்கப்படும்.

தகுதி

  • சொந்த நிலம் / நிலத்தில் வரும் வருவாயை பங்கீடு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு சிறுதவணை கடன் திட்டம்.
  • சிறு தவணை உற்பத்தி தேவை / முதலீட்டுப் பண தேவைகளான கோழிப் பண்ணை, கால்நடை, மலரியல், தோட்டக்கலை, மீன்வளர்ப்பு, பால் பண்ணை ஆகியவற்றிற்கு கே.சி.சி மூலம் வழங்கப்படும்.
  • கே.சி.சி திட்டம் மூலம் தவணை கடன்கள் வேளாண்மை மற்றும்  இதர தேவைகளுக்கு வழங்கப்படும்.
  • கே.சி.சி திட்டம் தனிப்பட்ட நபருக்கு தகுதி முறை மூலம் மட்டுமே வழங்கப்படும்.
  • கூட்டு நிறுவன சங்கம், கூட்டமைப்பு, சங்கம், குழு ஆகியவற்றிற்கு இத்திட்டம் மூலம் கடன் பெற தகுதி  இல்லை.
  • படிப்பறிவு இல்லாதவர் மற்றும் பார்வையற்றோர் இத்திட்டத்தின் மூலம் வசதிகள் பெற விரும்பினால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பின்பே வழங்கப்படும்.

தேவை
சிறு தவணை / முதலீட்டுக் கடன் வசதிகள் இரண்டும் ஒரே கிசான் கடன் அட்டை மூலமாகவே வழங்கப்படும். வங்கிக் கணக்கு புத்தகத்தில் 3 பகுதிகளாக கே.சி.சி அட்டை வைத்திருப்போருக்கு பிரித்து வழங்கப்படும்.

  1. சிறு தவணை கடன் / பயிர் கடன்
  2. வேளாண்மை சார்ந்த வேலைகளுக்கு முதலீட்டுக் கடன் தேவைகளுக்கு
  3. தவணை கடன் (12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்)

வங்கி கடன் வசதிகளில் பரிவர்த்தனை பதிவேடுகள் தனித்தனியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. யுனைடெட் கிரிஷிகா லாகு பரிபாஹான் யோஜனா
குறிக்கோள்
விவசாய இடுபொருள் / பண்ணைப் பொருட்களை எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு வாகனங்கள் வாங்க நிதியளித்தல்.
செய்பணி செயல் பகுதி

  • கிராமப்புற மற்றும் நகராட்சி கிளைகள் மூலம் வழங்கப்படும்.

தகுதி

  • ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள சொந்த நிலம் உள்ள விவசாயிகள் இதற்கு தகுதியானவர்கள்.

கடன் அளவு
அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

3. யுனைடெட் கிரி„ி சகாயக் யோஜனா 
தேவை

  1. உழுவதற்கு உழவு உந்து மற்றும் பவர் டில்லர் வண்டிகள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படுகின்றது மற்றும் இடுபொருள் விளைபொருட்கள், வாடகைக்குச் செல்ல போன்ற தேவைகளுக்கு பயன்படுகிறது.
  2. கிராமப்புற இளைஞர்கள் வாடகைக்கு சென்று உழவு செய்தல் மற்றும் சொந்த நிலத்தில் உழவு வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் சுய வேலைவாய்ப்பை பெறமுடியும்.
  3. விவசாயத்திற்கு நேரடியாக கொடுப்பதற்கு அதிகரித்தல்.

செய்பணி செய்தல்

  • கிராமப்புற மற்றும் சிறு நகர பகுதியில் உள்ள கிளைகள் மூலமாகவும் மற்றும் சேவை பகுதிக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.
  • இவ்வகை கடன்களுக்கு சேவைப் பகுதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • மறுப்பில்லா சான்றிதழ் வழங்குவது மற்றும் விவசாயி அதன் பகுதியில் உள்ள வேறு வங்கிக் கிளைகளில் கடனாளியாக உள்ளாரா என்பதை ஆய்வு செய்தபின் வழங்கப்படும்.

தகுதி
உழவு உந்து வண்டி வாங்குவதற்கு 2.5 ஏக்கர் பாசன நிலம் மற்றும் பவர் டில்லர் வாங்குவதற்கு 1.5 ஏக்கர் பாசன நிலம் பெற்றருத்தல் வேண்டும் மற்றும் எப்.டி, என்.எஸ்.சி போன்ற 100 சதவிகிதம் பாதுகாப்பு பத்திரம் மூலம் பெறும் உழவு உந்து வண்டிக்கு  நில அளவு கிடையாது, ஆனால் விண்ணப்பதாரர் விவசாயியாக இருத்தல் §வண்டும்.
உழவு உந்து வண்டி வாங்குவதற்கு 35 வயதிற்குக் கீழே உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும் மற்றும் பவர் டில்லருக்கு 0.50 ஏக்கர் பாசன நிலம் வைத்திருக்க வேண்டும். அவர் கடனாளியாக இருத்தல் கூடாது மற்றும் DRDA / DRDC / பஞ்சாயத்து மற்றும் அஞ்சல் பிரதான மூலம் பரிந்துரைக்கப் பட்டிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

4. யுனைடெட் கிராம்ய ‚ யோஜனா
குறிக்கோள்

  • இடையுறாத, விரைவாக மற்றும் தொந்திரவுகள் இன்றி வழங்குதல் மற்றும் கடன் பெற்று ஒழுங்காகவும் சரியாகவும் திருப்பி செலுத்துவோர் / வைப்புத் தொகை ஆகியோருக்கு வழங்கப்படும்.

செய்பணிசெயல்

    • அனைத்து கிராமப்புற மற்றும் சிறுநகர கிளைகள்

தேவைகள்

    • அனைத்து விவசாய வேலைகள் மற்றும் அதன் சார்ந்தவை, சிறு பானங்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், தோட்டக்கலை, மலைப்பயிர்கள், பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, சாண எரிவாயு கலன், நவீன வேளாண்மை, வேளாண் வணிகம் / விவசாய மருந்தகம் அமைத்தல், விவசாயத் தேவைகளுக்கு நிலம் வாங்குதல்.

தகுதி

    • கடந்த 3 வருடங்களாக நல்ல பதிவுகள் வைத்திருக்கும் மிதமான தவணை கடன் வாங்குவோர் மற்றும் கடன் வாங்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள்.
    • வைப்புக் கணக்கு இருக்கும் நபர்கள் ரூ. 25,000 / இருப்பு வைத்திருத்தல் அல்லது அதற்கு மேல் 3 வருடங்களாக இருப்பின், அவர்கள் தானாகவே விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
5. சுய உதவிக்குழு
சுய உதவிக்குழு என்பது சிறிய ஒரே வகையான பொருளாதார நிலை மற்றும்  கிராமப்புற ஏழைகள் ஒரே தேவையின் கீழ் மற்றும் கூட்டு நடவடிக்கை, மனமுவந்து ஒரு குழுவாக நிதியை சேமித்து பின் அதை குழு முடிவின் கீழ் உறுப்பினர்களுக்கு அவசரம் மற்றும் நுகர்வு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் மற்றும் அவர்களின் வருவாய், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்துதல்.
குறிக்கோள்

  • கிராமப்புற ஏழைகளுக்கு கடன் தேவைகளை குறிப்பிட்ட கடன் செயல் திட்டம் மூலம் வழங்கச் செய்தல்.
  • சிக்கனம் மற்றும் கடன் துறைகள் போன்ற வங்கி வேலைகள் ஊக்கப்படுத்துதல்.
  • வங்கியினர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஒரு நல்ல தன்னம்பிக்கையும் இரு தரப்பு நம்பிக்கையும் ஏற்படுத்துதல்.

உறுப்பினராதல்
குழு உறுப்பினர் எண்ணிக்கை 10 முதல் 20 க்குள் குடும்பத்தில் ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு குழுவினர் ஒரே மாதிரியான சமூக பொருளாதார நிலையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மக்கள் மற்றும் இரண்டும் கலந்தவர்களும் அடங்குவர்.
ஒரு சில உறுப்பினர்கள் மற்றும் அதன் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு மொத்த சுய உதவிக்குழுவும் தவறு செய்ததாக வங்கி எடுத்துக் கொள்ளாது. ஆனால் அந்த குழுவில் உள்ளவர் கடனாளியாக இருப்பின் வங்கிக் கடனை அந்தக் குழு உபயோகப்படுத்த முடியாது.
சேமிப்புக் கணக்கு தொடங்குதல்
பதிவு / பதிவு செய்யப்படாத சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்படும். அதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன்,

  1. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட வரை  தீர்மான நகலை வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு 3 உறுப்பினர் நபர்கள் கூட்டு செய்பணிச் செயல் செய்வதற்கான உரிமையுடன் கொண்ட ஒரு நகல், மற்றும்
  2. முதலில் கணக்கு தொடங்குவதற்கு ரூ. 50 வைப்பு நிதியாக பெற்றுக் கொள்ளப்படும் மற்றும் வங்கிக் கணக்கு மற்றும் அதன் புத்தகத்தில் சுய உதவிக் குழுவின் பெயரில் பெற்றிருக்க வேண்டும்.

சுய உதவிக் குழுக்களுக்குள் கொடுத்தல்
குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ. 50 /- குழு உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பின் அதன் அசல் மற்றும் வட்டி திருப்பி செலுத்தும் போது அதன் கணக்கில் போட்டு பின் அதன் சுழற்சி அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்.
சுய உதவிக்குழுவை சுய மதிப்பீடு செய்தல்
கடன் வழங்குவதற்கு முன் சரிபார்க்கும் பட்டியலை வைத்துக் கொண்டு வங்கியின் கிளை அந்த குழுவை மதிப்பீடு செய்யும். (நகல் இணைக்கப்பட்டது)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

6. கிராமின்  பந்தாரன் யோஜனா
குறிக்கோள்

  1. கிராமப்புறங்களில் விவசாயிகளின் விளைபொருள், நுகர்பொருள்கள், வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் பாதுகாக்க வசதிகளை ஏற்படுத்துதல்.
  2. வேளாண் விளைப்பொருட்களை தரம் பிரித்தல், தரப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றைச் செய்து சந்தை படுத்துதலில் மற்றும் குறைவான விலையில் விற்பதைத் தடுக்கவும் வழிவகை செய்கிறது.
  3. அடமானம் வைத்து நிதி பெறுதல், சந்தை படுத்துதலுக்கான கடன், §வளாண் வணிக உள்கட்டமைப்புகளை வலிமை பெறச் செய்தல் போன்றவற்றை செய்து தேசிய முறையில் கோடோன்களில் விவசாயப் பொருட்களை அவ்வகை கோடோன்களில் வைத்து ரசீதுகளைப் பெறும் முறைகளைச் செய்தல்.

நடைமுறைப்படுத்துதல்

  1. இத்திட்டம் வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறையுடன் இணைந்து வர்த்தக மற்றும் ஆய்வு இயக்ககத்தின் மூலம் நடைமுறை படுத்தப்படுகிறது. இத்திட்டம் 31.3.2007 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
  2. கோடோன் கட்டமைப்புகள் மத்திய / மாநில / பொதுத் துறையின் கீழ் கொடுக்கப்படும் புள்ளி விவரங்களை வைத்து நடைமுறை படுத்தப்படும்.
  3. கோடோன் நல்ல சாலை வசதி, உள் சாலைகள், சரியான வடிகால் மற்றும் களவுகளில் இருந்து பாதுகாக்க சரியான முறைகள் எளிதாக சரக்குகளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்குத் தேவையான வசதிகள்.
  4. சுயதொழில் முனைவோர் கோடோனை சரியான உரிமத்தை மாநில சேமிப்பு கோடோன்கள் வரைவுகளின் கீழ் அல்லது அதன் சம்மந்தப்பட்ட சட்டத்தின் கீழ் வரும்படி பெற்றிருக்க வேண்டும்.
  5. கடன் வாங்குபவர் திட்டத்தைத் தயாரித்து வங்கிக்கு கொடுக்கும் பொழுது அங்கீீகரிக்கப்படும் திட்ட வரைவும் மற்றும் மதிப்பான செலவுகளை அங்கீகரிக்க பொறியாளரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  6. சராசரி DSCR 1.5 கீழாகவும் மற்றும் எந்த வருடத்திலும் 1.33 கீழாகவும் இருத்தல் கூடாது.
  7. இது மானியம் சார்ந்த திட்டமாக இருப்பதால், 50 சதவிகிதம் முண்பண மானியத்தைப் பெற்ற பிறகே நிதி வழங்கப்படும்.

தகுதி
கிராமப்புற கோடோன்கள் கட்டமைப்பு திட்டங்களை கீழ்கண்டவர்கள் நடத்த தகுதியானவர்கள்

  1. தனிநபர்
  2. விவசாயிகள்
  3. விவசாயிகள் குழு
  4. தொண்டு நிறுவனம்
  5. சுய உதவிக்குழுக்கள்
  6. கூட்டு நிறுவனம் / தனி ஒருவரால் நடத்தப்படும் வணிகம்
  7. நிறுவனங்கள்
  8. கழகங்கள்
  9. கூட்டுறவு சங்கங்கள்
  10. விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் / வணிகம்
  11. வணிக வாரியம்
  12. விவசாய செயலக கழகங்கள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
7. பொன் விழா ஆண்டு கிராமப்புற வீட்டுக் கடன் திட்டம்
குறிக்கோள்

  1. கிராமப்புற வீடுகள் கட்டுவதற்கு மேம்படுத்துவதற்கு, வீடு / பிளாட்கள், வாங்குவதற்கு கடன், கட்டிய அல்லது கட்டிக் கொண்டிருக்கும் வீடுகள் / பிளாட்கள் / பழுது பார்த்தல் / விரிவுப்படுத்துதல் / சீரமைத்தல்

தகுதி

  1. தனி வாடிக்கையாளர், கூட்டு கடன் வாங்குபவர், மாதச் சம்பளம் வாங்குபவர் தொழில்நுட்ப  மற்றும் சுய வேலை / தொழில் நடத்துவோர், விவசாயிகள் ஆகியோர் தகுதியானவர்கள். ஊக்குவிப்பாளர் / கூட்டுறவு சங்கங்கள் / கூட்டமைப்பு / சேலை செய்வோர் இதற்குத் தகுதியில்லை.

கடன் அளவு
இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கு எந்த அளவுகளும் இல்லை. கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வழங்கப்பட்டிருப்பின் அது ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ்  கொடுக்கப்படும். என்.எச்.பி (NHB) கீழ் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை திரும்ப செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

8. யுனைடெட் பூமிகீன் கிசான் கடன் அட்டை

குறிக்கோள்
உற்பத்திக் கடன்  மற்றும் நுகர்வு கடன் பிற துறைகளில் இருந்து பெறப்படும் கடன் விவசாயிகளின் உண்மையான தேவைகளுக்கும் மற்றும் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் நிலத்தில் வரும் வருவாயில் பாதியை பங்கீடு செய்து கொள்ளும் விவசாயிகள் போன்றோருக்கு விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களான பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, தோட்டக்கலை, நாற்றாங்கால், அழகு மீன்கள் வளர்ப்பு, காய்கறித் தோட்டம் மற்றும் தேனீ வளர்ப்பு போன்றவற்றிற்கு முதலீட்டுக் கடன்கள் வழங்குவது.

தகுதி
 1. மேற்குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் வரும் அனைத்து நபர்களும்
2. விவசாயிகளில் சுய உதவிக்குழு / கூட்டு  சொத்துக் குழுவில் வருபவர்கள்.

  1. ஒப்பந்த பண்ணைய முறைகளில் கரும்பு, பழம், காய்கறி, உருளைக் கிழங்கு, தோட்டக்கலைப் பயிர்கள், பதப்படுத்தும் செயலகம் மற்றும் அதன் சார்ந்த வேளாண் தொழில்கள்.

அளவு

    1. அதிகபட்சமாக ரூ. 25,000 / அனைத்து தேவைகளுக்கும் சேர்த்து இதில் ரூ. 5,000/ மட்டும் முதலீட்டுக் கடனுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    2. நுகர்வுக் கடன் ரூ. 2,500 / மேல் செல்லக் கூடாது.
    3. முறைப்படி அல்லாமல் இருக்கும் துறைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 மட்டும் முதலீட்டுக் கடனுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    4. நிதி அளவை மாவட்ட அளவிலான தொழில்நுட்ப செயற்குழு நிர்ணயிக்கும் மற்றும் நபார்டு வங்கி விதிக்கும் நிரந்திர செலவு அலகுகளும் இதற்குப் பொருந்தும்.
    5. பலவகை பயிர்கள் உற்பத்திக்கு பல பிரிவு எல்லைகள் நிலையாக வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

9. யுனைடெட் கிராமின் சகாஜ் கடன் அட்டை
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

குறிக்கோள்

  • கிராமம் மற்றும் சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொதுவான கடன் தேவைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். வருவாய் / பணப்பாய்வு போன்றவற்றில் நுகர்வோருக்குத் தேவையான கடன்களை குறிப்பிட்ட காரணங்களுக்கு என்று இல்லாமல் கடன் எளிதாக கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். இது பொதுக் கடன் அட்டை திட்டம் அமல்படுத்திய வகையிலேயே வழங்கப்படும்.
  • கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புறங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் இத்திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

திட்டத்தின் வகை
சுழல் ஓவர்டிராப்ட் வசதிகள் மூலம் இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி வழங்கப்படும். UGSCC அட்டை உள்ளவர்களுக்கு வங்கிக் கிளையிலிருந்து அதன் அளவைப் பொருத்து எடுத்தக் கொள்ளலாம் மற்றும் கணக்கு புத்தகம் அதன் அளவும் நபரின் புகைப்படம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தகுதி

  • மாத சம்பளம், தொழில், மற்ற பொருளாதார வேலைகள், வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு, பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, போக்குவரத்து, கைவினைக் கலைஞர்கள்.
  • பெண் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

10. யுனைடெட் சகாஜ் ரின் யோஜனா (வட கிழக்கு மாநிலங்களுக்கு மட்டும்)
குறிக்கோள்

  • பண்ணை அல்லது பண்ணை சாரா துறைகளில் எந்த வித வருவாய் ஈட்டும் வசதிக்கும் ஓவர் டிராப்ட் வசதி கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் சமூகத்தில் நலிவடைந்த மக்களான பான் பீடி விற்போர், காய்கறி / மீன் வியாபாரிகள், பழ வியாபாரிகள், தினசரி விற்போர் விரைவு உணவு வைத்திருப்போர்களுக்கு வழங்கப்படுகிறது. இது சிறு வியாபாரிகள் அதிக வட்டி அதாவது தனியார் கந்து வட்டி கொடுப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

தகுதி

  • 18-50 வயது வரை உள்ள அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மற்றும் மேற்கூறிய வேலைகளில் ஈடுபட்டிருப்போர் இவர்கள் கிளையின் 1 முதல் 1.5 கி.மீ தூரத்திற்குள் வீடுகள் இருக்க வேண்டும். கடன் திருப்பி செலுத்தாதவர்கள் இத்திட்டத்தில் இருந்து விளக்கி வைக்கப்பட்டிருப்பர்.

அமல்படுத்துதல்

  • இத்திட்டம் வடமாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.unitedbankofindia.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015