வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
அலஹாபாத் வங்கி
    1. கிசான் கிரெடிட் கார்டு / விவசாயிகளுக்கான கடன் அட்டை
    2. கிசான் சக்தி யோஜனா

1. கிசான் கிரெடிட் கார்டு / விவசாயிகளுக்கான கடன் அட்டை
இந்த அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கடனை பயிர் பெருக்கத்திற்கு  மற்றும்  சுயதேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான சிறப்புத் திட்டம். இதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதி
விவசாய நிலங்கள் மற்றும் பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் நிலம் கூட்டாக இருப்பின் அட்டையும் கூட்டாகவே வழங்கப்படும்.
கடன் எல்லை
இது நிலத்தின் அளவைப் பொருத்தும் பயிர் செய்வதற்குத் தேவையான செலவினங்களைக் கருத்தில் கொண்டு மற்றும் சுயதேவைகளை நிர்ணயம் செய்யப்படும். கடன் தொகைக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவு கிடையாது.
வரையறை காலம்                              
அட்டை 3 வருடத்திற்குத் தகுதியானவை - வருடத்திற்கு ஒரு முறை திறனாய்வு செய்யப்படும்.
தேவையான விவரங்களுக்கு இங்கு அழுத்தவும்.

2. கிசான் சக்தி யோஜனா
இந்தத் திட்டம் விவசாய முதலீட்டு கடன்களுக்கும் மற்றும் சுய தேவைகளுக்கான கடன்கள் மற்றும் கந்து வட்டி கடன்கள் திருப்பி செலுத்தவும் வழங்கப்படுகிறது.
தகுதி
கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் அதற்கு தகுதியானோர் அனைவரும்.
கடன் எல்லை
கடன் பெற 50 சதவிகிதம் நிலத்தின் மதிப்பு அல்லது விவசாய நிலத்தில் இருந்து வரும் நிகர லாபத்தில் 5 மடங்கு, இதில் எது குறை§வா அதைப் பொருத்து வழங்கப்படும் அல்லது நிலுவையில் உள்ள விவசாய கடன்களில் அதிகபட்சமாக 5 லட்சம். விவசாய கடன்களில் 50 சதவிகிதம் அளவு சுயதேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் http://www.allahabadbank.com/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015