ஆந்திரா வங்கி
- ஏபி மகிலா செளபாக்கியா
- ஏபி கிசான் ரக்சக்
- ஏபி கிசான் விகாஸ் அட்டை
- ஏபி பட்டாபி அக்ரி அட்டை
- ஏபி கிசான் சக்ரா
- ஏபி கிராமப்புற கோடோன்
- ஏபி கிசான் சம்பதி
- ஏபி விவசாய மருந்தகம் / விவசாய சேவை நிலையம்
- ஏபி கிசான் பந்து - உழவு உந்து நிதி
- ஏபி சுயஉதவிக்குழு - வங்கி தொடர்பு நிகழ்ச்சி
- ஏபி ஆந்திரா வங்கி கிசான் பச்சை அட்டை
மற்ற திட்டங்கள்
- ஏபி விவசாயத்திற்காக நிலம் வாங்குவதற்கான நிதி
- ஏபி பால் முகவருக்கான நிதி
- ஏபி மகிலா சவுபாக்யா
காப்புறுதி
- அனைத்து சுய உதவிக் குழுக்கள்
- வெளியில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்துதல்
தகுதி அடிப்படைகள்
- முதல் முறை - குறைந்தபட்சம் ரூ. 25,000 / (அ) கடன் எல்லை இதில் எது அதிகமோ.
- இரண்டாம் முறை - குறைந்தபட்சம் ரூ. 50,0000 கிராமப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு மற்றும் ரூ. 75,000 நகர்ப்புறங்களுக்கு (அ) 50 சதவிகிதம் கடன் எல்லை இதில் எது அதிகமோ.
- மூன்றாம் முறை - சிறிய கடன் திட்டத்தில் 40 சதவிகிதம் கடன் கொடுப்பதில் எது குறைவோ அதாவது அதிகபட்சமாக ரூ. 2,00,000.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
குறிக்கோள்
விவசாய கடனாளிகளுக்கு வங்கிக்கடன் கொடுத்து அவர்கள் வாங்கிய கடன்களை தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்து வட்டிகாரர்களுக்கு திருப்பிச் செலுத்துதல்.
காப்புறுதி
- இந்த நிவாரணப் பணிகள் சென்றடையும் பயனாளிகள்
- விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கியிருப்போர் மற்றும் கடன்களை சரியான நேரத்தில் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் மற்றும் அவர்களால் ஏதேனும் ஒரு தவிர்க்க முடியாத காரணங்களால் திருப்பி செலுத்த முடியாமல் போனால் அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
- வங்கி அலுவலக ஏரியாவிற்குள் கடனாளியல்லாத விவசாயிகள்.
- கடன் வாங்காத விவசாயிகள் அந்த வங்கி நிதிக்காக அணுகும் போது, அந்த நபர் விவசாயப் பயிர் கடன் திட்டமான ‘பட்டாபி அக்ரி கார்டு’ மூலம் சோதித்து விட்டு பின் தகுதியின் அடிப்படையில் திருப்பி செலுத்துபவரா எனப் பார்த்து பின் வழங்கப்படும்.
தகுதி அடிப்படைகள்
நிலுவையில் உள்ள கடன்காரர்கள்
- விவசாயப் பயிர் கடன்களுடன், 50 சதவிகிதம் பயிர்க்கடன் (பட்டாபி அக்ரி கார்டு) அதிகபட்சமாக ரூ. 50,000 வழங்கப்படும். (அ) கடன்காரர்களுக்கு வழங்கவேண்டிய தொகையில் எது குறைவோ மற்றும் கூடுதலான வங்கி கடன்கள் மூலம் நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
கடன் வாங்காத விவசாயிகள் (புதிய கடன் வாங்குபவர்கள்)
- கடன் வாங்காத விவசாயிகளும் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். பட்டாபி அக்ரி கார்டு திட்டத்தின் வரையறையைக் கொண்டு மற்றும் பயிர் சுழற்சியின் படி நிதியின் அளவுகளை முதலில் கொண்டுவரப்படும்.
- சீரான பயிர்க்கடன் அளவின்படி, 50 சதவிகிதம் பயிர் (பட்டாபி அக்ரி கார்டு) மூலம் அனுமதிக்கப்படும். (அ) கடன் அளவை பொருத்தும் எது குறைவோ அதில் பார்த்து கந்து வட்டி கடன்காரர்களுக்கு திருப்பிச் செலுத்த வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
3. கிசான் விகாஸ் அட்டை
குறிக்கோள்
- பட்டாபி அக்ரி அட்டை பயிர்க் கடன்களுக்கு கடன் வழங்கும் முறையை ஆந்திரா வங்கி கிசான் விகாஸ் கார்டு மூலம் ஏ.டி.எம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
தகுதி
அனைத்து பட்டாபி அக்ரி கார்டு (பி.ஏ.சி) உடையவர்கள் (பி.ஏ.சி. கார்டுகளுக்கான விதிக்குட்பட்டது).
அட்டைத் தகுதி
கையிருப்பில் உள்ள விவசாய நிலங்களின் அளவை பொருத்தும், பயிர் சுழற்சியை பொருத்தும் மற்றும் நிதியின் அளவுகளை பொருத்தும்.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
4. ஏபி பட்டாபி அக்ரி அட்டை
தகுதி
தனிப்பட்ட விவசாயிகள்
காப்புறுதி
குறைந்தபட்சம் 3 வருடம்
அளவு
- நிதியின் அளவைப் பொருத்தும் கடன்களின் தேவைகளைப் பொருத்தும் சுழல் கடன் நிதி நிர்ணயிக்கப்படும்.
- தகுதியான நிதியில் இருந்து 10 சதவிகிதம் கூடுதல் நிதியை அறுவடை பின் செய் நேர்த்திக்காகவும் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காகவும் வழங்கப்படும்.
- வட்டி மற்றும் இதர செலவுகள்.
- தவணை முறைகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டது. வட்டி விகிதத்தை எஸ்.பி அளவில் குறைந்தபட்ச கடன் நிலுவையில் அவர்களது கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் 10 முதல் கடைசி தேதி வரை செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
5. ஏபி கிசான் சக்ரா
தகுதி
- கடன் பெறுபவர்கள் சொந்தமாக குறைந்த பட்சம் 2 ஏக்கர் இரட்டைப் பயிர் பரப்பளவு அல்லது 5 ஏக்கர் ஒற்றைப் பயிர் பரப்பளவு கொண்டதாக இருக்கவேண்டும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் வயது வரம்பு 55 வயதுக்கு கீழே இருத்தல் வேண்டும்.
- இது பெண் விவசாயிகளுக்கும் பொருந்தும்.
- கடனை விவசாயிகளின் முதிர்ச்சி காரணமாக அவர்களது மகன் / மகள் பெயர்களிலோ பெறலாம்.
தேவை
- 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள்
நிதியின் தொகை
- இரண்டு சக்கர வாகனங்களின் மதிப்பில் 75 சதவிகிதம் (மற்ற விவசாயிகளுக்கு) / 85 சதவிகிதம் (சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு) வழங்கப்படும்.
- நான்கு சக்கர வாகனங்களின் மதிப்பில் 75 சதவிகிதம் (மற்ற விவசாயிகளுக்கு) 85 சதவிகிதம் (சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு) வழங்கப்படும் மற்றும் அதன் வாழ்நாள் வரி மற்றும் காப்பீடு அதிகபட்சமாக ரூ. 3,00,000 நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து வாங்கினால் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
6. ஏபி கிராமப்புற கோடோன்
தகுதி
- விவசாய விளைபொருள்களை விற்பனை செய்வோர் சுயதொழில் செய்வோர் மற்றும் குழுக்களாக இணைந்து பொருட்களை சேமித்து பின் விளைபொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.
- விவசாய விளைபொருட்களை லாப நோக்கில் சேமித்து வைத்து விற்பனை செய்வோர்க்கு இந்தத் திட்டத்தில் அனுமதி இல்லை.
- கடன்களை இந்திய உணவுக்கழகம், மாநில சேமிப்புக் கழகம் மற்றும் பெயர் பெற்ற கழகங்கள் மூலம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் வழங்கப்படும்.
கொள்ளளவு
- சேமிப்புக் கிடங்குகள் அதிகபட்சமாக 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவுகள் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும். கோடோங்களின் கொள்ளளவுகளுக்கு தகுந்தாற்போல் 200, 250, 500, 750, 1000 மெட்ரிக் டன் கொண்ட அளவுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
கடன் தொகை
2/3 பங்கு அளவுக்கான செலவு என்ற கணிப்பில் இருந்து கடன் தொகை வழங்கப்படும். செலவு கணிப்பில் ரூ. 1200 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு திறனுக்கு மேல் செல்லக்கூடாது. செலவு எண் கணிப்பில் நிலத்திற்கான செலவு கணக்கிடக்கூடாது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
7. ஏபி கிசான் சம்பதி
குறிக்கோள்
- இந்த திட்டம் விவசாயிகளுக்கு விவசாய விளைப்பொருட்கள் அறுவடை செய்யப்பட்ட உடன் விலை மிகவும் குறைவாக இருப்பின், அவர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய திட்டம் ஆகும்.
தகுதி
- அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படும். கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் வாங்காதவர்கள் என அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். விவசாய பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் தவணை கடந்து செலுத்துதல் இருக்கக்கூடாது.
திட்டத்திற்குத் தகுதியான பயிர்கள்
- நெல்
- நிலக்கடலை, கடுகு
- கடலைப் பருப்பு, துவரம் பருப்பு
- மஞ்சள்
- காய்ந்த மிளகாய்
- மக்காச்சோளம்
- சிறுதானியங்கள் (கம்பு / ராகி)
- சேனைக் கிழங்கு
- பச்சைப்பயிறு, உளுந்து பயிறு
- வெல்லம்
கடன் தொகை
பொருட்களின் விற்பனை விலையில் 75 சதவிகிதம் தொகை (அ) அதிகபட்சமாக ரூ. 500000.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
8. ஏபி விவசாய மருந்தகம் / விவசாய §சவை நிலையம்
தகுதி
பயிற்சி பெற்ற வேளாண் பட்டதாரிகள் (அ) தேசிய வேளாண்மைக் கல்வி விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் (MANAGE) முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும். கூட்டுக் கடன்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இதில் 5 நபர்கள் கொண்ட குழுவாகவும், அனைவரும் வேளாண் பட்டதாரிகளாகவும் அதில் ஒருவர் மட்டும் மேலாண்மை பட்டதாரியாகவும், கூட அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
கடன் தொகை
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ10 லட்சம் நபர் ஒன்றுக்கு நிதி உதவி அளிக்கப்படும். கூட்டுக் கடன் திட்டமாக இருப்பின், ரூ. 50 லட்சம் வரை பெறலாம்.
கீழ்க்கண்ட திட்டங்கள் நிதி உதவி அளிக்கப்படும்.
- மண், நீர் தரம் பற்றிய சோதனை சேவை நிலையம்
- பயிர்ப் பாதுகாப்பு சோதனை சேவை நிலையம்
- மண்புழு உர செயலகம்
- தோட்டக்கலை மருந்தகம் மற்றும் தொழில் நிலையம்
- வேளாண் சேவை நிலையம், பண்ணை இயந்திரங்கள், தொடக்க நிலை செயலகம்.
- கால்நடை மருந்தகம், பால் பண்ணை மற்றும் செயற்கை கருவூட்டல் சேவை.
- சுற்றுச்சூழல்
இருப்பினும் இடம் வாங்குவதற்கும் மற்றும் கட்டிடம் கட்டுவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் நிதியளிக்க இயலாது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
9. ஏபி கிசான் பந்து - உழவு உந்து நிதி
குறிக்கோள்
- பண்ணை இயந்திரத்தை மேம்படுத்த உழவு உந்துக்கு நிதியளித்தல்.
தகுதி
- 3 ஏக்கர் பாசன (வருடம் முழுவதும்) விவசாய நிலம் (அ) 6 ஏக்கர் (தரிசு நிலம்) விவசாயி சொந்தமாக வைத்திருத்தல்.
நிதி பங்கீட்டளவு
உழவு உந்தின் செயலகத் திறன் கொண்டது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
10. ஏபி சுய உதவிக் குழு - வங்கி தொடர்பு நிகழ்ச்சி
சுய உதவிக் குழுக்கள்
பரந்து விரிந்து கிடக்கும் இந்தியாவில், கடன் வழங்கும் முறை சமுதாய மற்றும் குழு வங்கிகள் இருப்பினும், ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக்காரர்களை சார்ந்து இருக்கும் நிலை பல இடங்களில் தொடர்கிறது. குறிப்பாக அவர்களது அன்றாட தேவைகளுக்காக இந்நிலை நீடிக்கிறது. இச்சூழல் ஏழைகளுக்கு கடனுதவி அளிக்க, சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு இது சிறிய கடனுதவி பணிமனையாக செயல்படுகிறது.
சுய உதவிக்குழுக்களின் குறிக்கோள்
- சேமித்தல் மற்றும் வங்கி பழக்கவழக்கங்களை ஏழைகளுக்கு அளித்தல்.
- நிதி, தொழில்நுட்பம் மற்றும் மனோதத்துவ முறையில் பாதுகாத்தல்.
- வங்கிக்கடன்களைப் பெற்று உபயோகமாக பயன்படுத்தவும் மற்றும் தவணை முறையில் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த வழிவகை செய்தல்
- பொருளாதாரம் செழிக்க வழி வகை செய்தல்.
கடன் தொகை தேவையை மதிப்பிடுதல்
முதல் தவணை முறை
மொத்த தொகையில் 1:4 மடங்கு (அ) 50,000 இதில் எது பெரியதோ, (25,000 பொருளாதார செய்கையில் எது பெரியதோ) ஒரு குழு ரூ. 1 சேமித்தால் ரூ. 4 வங்கிக் கடனாக பெறலாம்.
இரண்டாம் முறை
மொத்தத் தொகையில் 1:6 மடங்கு
மூன்றாம் முறை
மொத்தத் தொகையில் 1:8 மடங்கு
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
11. ஏபி கிசான் பச்சை அட்டை
திட்டம்
இத்திட்டம் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் செய்வதற்கு தவணை முறையில் கடன் செலுத்துவதற்கு ‘பட்டாபி அக்ரி கார்டு’ என்ற திட்த்திற்குக் கீழ் வருகிறது. இதற்கு ஆந்திரா வங்கி கிசான் பச்சை அட்டை என்று பெயர்.
குறிக்கோள்
இத்திட்டத்தின் குறிக்கோள் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் மிகவும் எளிமையாகவும் மற்றும் ஒரு குடையின் கீழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்களை பெறுவதற்கும் மற்றும் சுய தேவையானவற்றைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடன்பெற தகுதிகள்
நமது வங்கியின் பி.ஏ.சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தொடர்ந்து 3 வருடங்களாக நல்ல மதிப்பு இருப்பின் மற்றும் நிலம் சொந்தமாக இருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
நிதி
இத்திட்டத்தின் கீழ் உள்ள கடன்கள் அனைத்தும் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கும் மற்றும் சுழல் நிதியாக குறுகிய காலக் கடன்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
12. ஏபி விவசாயத்திற்காக நிலம் வாங்குவதற்கான நிதி
குறிக்கோள்
- சிறு மற்றும் குறு விவசாயி பொருளாதார அடிப்படையில் மேம்பாடு
- தரிசு மற்றும் வீண் நிலங்களை பயிர் நிலங்களாக மாற்றுதல்
- விவசாய உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துதல்
- நிலம் வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் / பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து, நிலங்களை வாங்கி அவர்களுடைய வருவாயை அதிகரிக்கச் செய்தல்.
தேவை
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாயம் (அ) தரிசு (அ) வீண் நிலங்களை வாங்க நிதி உதவி அளித்தல்.
தகுதி
- சிறு மற்றும் குறு விவசாயிகளின் முந்தைய வளர்ச்சியின் வருவாயைப் பொருத்தது.
- பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் / நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள்.
நிதியின் அளவு
அதிகப்பட்சமாக ரூ. 2,00,000
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
13. பால் முகவருக்கான நிதி
குறிக்கோள்
- விவசாயம் சார்ந்த தொழில் துறையை அதிகரிப்பது
- பால் உற்பத்தியை ஒரு ஒழுங்குமுறைக்கூடம் மூலம் அதிகரிப்பது
- விவசாயிகளின் வருவாய்க்கு உறுதுணையாக இருப்பது.
- கிராமப்புற பொருளாதாரத்தை வேலை வாய்ப்புகளை உருவாக்கி மேம்படச் செய்வது.
பகுதி
- பெயர் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இத்திட்டம் இயக்கப்படுகிறது.
வசதிகளின் குணம்
- விவசாய தவணைக் கடன் திட்டம்.
கடன் தொகை
- 100 லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நபருக்குக் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் மற்றும் 200 லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 லட்ச ரூபாய்.
- நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பரிந்துரையின் பேரில் மட்டுமே அந்த நபருக்கு பணம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : www.andhrabank.in/
|