வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
பாங்க் ஆப் பரோடா
  1. பரோடா கிசான் கடன் அட்டை (பி.கே.சி.சி)
  2. வேளாண் இயந்திரங்கள்
  3. வேளாண் பட்டதாரிகளின் விவசாய மருந்தகம் மற்றம் விவசாய தொழில்துறை நிலையம்
  4. விவசாயிகளுக்கு வாடிக்கையாளர் சேவைகளைச் செய்யும் நிதித்துறை முகவர்கள்
  5. பால் பண்ணை, கோழிப்பண்ணை
  6. வேளாண் இடுபொருள்களுக்கான மொத்த வியாபாரி
  7. வேலையில்லா தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேளாண் சேவை நிலையம் மூலம் வேலை வழங்குதல்.
  8. பண்ணைப் பொருட்களுக்கான வியாபாரக் கடன்
  9. பண்ணையில் கட்டிடம் கட்ட நிதியளித்தல்
  10. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு நிதியளித்தல்
  11. பாசன வளம்
  12. கிராமப்புற கோடோன்களை கட்டுதல் / விரிவாக்கம் / புதுப்பித்தல் / நவீன மயமாக்கல்
  13. தேசிய தோட்டக்கலை வாரியம் நபார்டு வங்கியின் மூலம் முதலீட்டு உதவித் தொகையை நேரத்திற்குத் தகுந்தாற்போல் புதிய திட்டங்கள் மூலம் வழங்குதல்
  14. பழைய / பயன்படுத்திய உழவு உந்து வாங்க நிதியளித்தல்
  15. உழவு உந்து மற்றும் பெரிய வேளாண் இயந்திரங்கள்

01. பரோடா கிசான் கடன் அட்டை (பி.கே.சி.சி)

குறிக்கோள்
விவசாயிகளுக்கு நம்பிக்கையளித்தல்

தேவைகள்
தரமான இடுபொருட்களை கொள்முதல் செய்தல், வேளாண் இயந்திரங்கள் (அ) உழவு உந்து ஆகியவை வாங்க முதலீடு செய்தல், பண்ணை பராமரிக்க செலவிடப்படும் பண்ணைச் செலவுகள், எதிர்பாராத குடும்ப செலவினங்கள் மற்றும் பண்ணை அல்லாதவற்றைப் பராமரித்தல்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

02. வேளாண் இயந்திரங்கள்
இந்தத் திட்டத்தின் முலம் பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு நிதியளித்தல் அதாவது தெளிப்பான்கள், துகல்கள் தெளிப்பான், கை இயந்திரங்களான குர்பி, கத்தரிகள், கதிர் அடிக்கும் இயந்திரம் விதை மற்றும் உரம் இடும், துழைகள் மற்றும் மாட்டு வண்டிகள் போன்ற இயந்திரங்கள் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

03. வேளாண் பட்டதாரிகளின் விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில்துறை நிலையம்

வேளாண் மருந்தகம்
விவசாயிகளுக்கு பயிர் செய்யத் தேவையான முறைகள், தொழில்நுட்பங்களை தெரிவித்தல், பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்து பயிர்களை பாதுகாத்தல், சந்தை நிலவரம், பல்வேறு பயிர்களுக்கான விலைப்பட்டியல் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான மருந்தக சேவைகள் இவை அனைத்திற்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

வேளாண் தொழில் 
இதன் மூலம் மண்வள பரிசோதனை செய்யத் தேவையான உபகரணங்கள் அளித்தல், வேளாண் தொழில்நுட்பத் தகவல்களை அளித்தல் மற்றும் வேளாண் விரிவாக்கச் சேவைகளை விவசாயிகளுக்கு அளித்தல் ஆகியவை.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

04. விவசாயிகளுக்கு வாடிக்கையாளர் சேவைகளைச் செய்யும் நிதித்துறை முகவர்கள்
உழவு உந்து, புள்டோசர், உலங்கு வானூர்தி கொண்டு வானில் இருந்து தெளித்தல், ஆழ்குழாய் போடும் இயந்திரம், ரிக் வண்டி, கிணறு தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மின்தூக்கி பாசனம், அறுவடை இயந்திரம், வாடகைக்கு கதிர் அடிக்க பயன்படுத்தப்படும் இயந்திரம், கோடோன் மற்றும் சேமிப்பு கிடங்குகள் கட்டுதல், விவசாய விளைப்பொருட்களை எடுத்துச் செல்ல டிரக் வாகனம் வாங்க உதவி செய்தல், பால் எடுத்துச் செல்ல பால் §டங்கர்கள் வாங்குதல், புகையிலை பதப்படுத்த கூடாரம் அமைத்தல், முதலீட்டு நிதியை இம்மாதிரி சேவைகள் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

05. பால்பண்ணை, கோழிப்பண்ணை
பால் பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்த்தல், பன்றிப் பண்ணை, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டக வளர்ப்பு மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகிய அனைத்து கால்நடை வளர்க்கத் தேவையான கட்டுமானப் பணிகள், பால் மாடு வாங்குதல், கோழிக்குஞ்சுகள் மற்றும் இதர இயந்திரங்கள், தீவனங்கள் வாங்க, அதை எடுத்துச் ¦சல்ல வாகன வசதி ஆகியவைகளுக்கு முதலீட்டுச் செலவினம் மற்றும் முதலீட்டுப் பணிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

06. வேளாண் இடுபொருட்களுக்கான மொத்த வியாபாரி
வேளாண் இடுபொருள்களான விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கால்நடைத் தீவனங்கள், மீன்பிடி வளைகள், தெளிப்பான்கள், சொட்டு நீர்ப்பாசன இயந்திரங்கள், பாசன இயந்திரங்கள், எண்ணெய் விசைப்பொறி / உழவு உந்து / மீன் பிடி படகுகளுக்கான உதிரி பாகங்கள், தோட்டக்கலை மற்றும் கோழிப்பண்ணைகளுக்கான உபகரணங்கள் அனைத்தும் மொத்த வியாபாரிகள் மூலம் வழங்கப்படுவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

07. வேலையில்லா தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேளாண் சேவை நிலையம் மூலம் வேலை வழங்குதல்
வாடிக்கையாளர் சேவைகளான உழவு, வட்டு உழவு, வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை வாடகைக்கு எடுத்தல், பம்பு செட்டுகள் (நீர் இறைஞ்சிகள்), விதைகள், உரங்கள், எண்ணெய், கிணறு தோண்டுதல், உதிரி பாகங்கள் விற்பனை, வேளாண் உபகரணங்கள், இயந்திரங்களைப் பழுது பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

08. பண்ணை பொருட்களுக்கான வியாபாரக் கடன்
விவசாய விளைபொருட்களை மாநில அல்லது மத்திய சேமிப்புக் கிடங்குகள், அல்லது தனியார் §கா§டான், கிடங்குகள் மற்றும் குளிர்ப்பதன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றில் இருப்பதற்கான அடையாளத்தை இரசீது மூலம் பெற்று வந்தால், நிதியுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

குறிக்கோள்

  1. விவசாயிகளுக்கு விளைபொருட்கள் மீது பணம் அளித்தல்
  2. விளைபொருட்கள் சந்தையில் விலை குறைவாக இருப்பின் அதை சேமித்து வைத்துப் பின் விலையேறும் பொழுது விற்பனை செய்ய வழிவகை செய்தல்.
  3. விவசாய விளைபொருட்களுக்கு இடைப்பருவங்களில் நல்ல விலையைப் பெற்றதர வழி வகை செய்தல்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

09. பண்ணையில் கட்டிடம் கட்ட நிதி அளித்தல்
பண்ணையில் கட்டிடம் கட்ட மற்றும் பழுதுபார்க்க மற்றும் கட்டிட அமைப்புகளான மாட்டு கொட்டகை, உழவு உந்து மற்றும் டிரக் கொட்டகை, பண்ணைக் கிடங்கு, கோடோன், பண்ணைக்கழிவுகள், காயவைப்பதற்கான களம், பால் பண்ணைக் கட்டிடம், குளிர்பதன முறையில் சேமிப்பதற்கான கட்டிடம் ஆகியவை ஏற்படுத்த இத்திட்டம் உதவி செய்கின்றது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

10. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு நதி அளித்தல்
பண்ணைக் கருவிகள் வாங்குவதற்கும், ஜோடி எருதுகள் வாங்க, பாசன வசதிகள் ஏற்படுத்துதல், கிணறு வெட்டுதல், பம்பு செட்டுகள் நிறுவுதல்.
விவசாய நிலம் இல்லாதோர்க்கும், மானியத் தொழில்களான பால் மாடு வளர்ப்பு, கோழிப்பண்ணை, ஆடு, செம்மறியாடு, பன்றிப்பண்ணை, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

11. பாசன வளம்
மேல் கிணறு வெட்டுதல், ஆழம் செய்தல், இருக்கும் கிணறுகளை சீரமைத்தல், எண்ணெய் விசைப்பொறி மற்றும் மின் முகட்டி, பம்பு செட்டு வாங்குதல், மேல் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் கட்டுதல், பாசனத்திற்காக நிலத்தை சமன் செய்தல், தெளிப்பு முறை பாசனம், சொட்டு நீர்ப்பாசனம் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

12. கிராமப்புற கோடோன்கள் கட்டுதல் / விரிவாக்கம் / புதுப்பித்தல் / நவீன மயமாக்குதல்
கூட்டுறவு சங்கங்கள், வியாபார குழுக்கள், மாநில சேமிப்பு கழகம், உணவுக் கழகம் / மாநில சேமிப்புக் கழகத்திடம் தனிநபர் ஒப்பந்தத்தின் கீழ் 200 மெட்ரிக் டன்களுக்கு மேல் திறன் கொண்ட கோடோன்கள் கட்டுதல் மற்றும் அதை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

13. தோட்டக்கலை வளர்ச்சி
உயரமான சமபூமி, சமன்படுத்துதல், வடிகால் அமைத்தல், உவர், களர் நிலங்களை சரிசெய்தல்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

14. பழைய / பயன்படுத்திய உழவு உந்து வாங்க நிதியளித்தல் 
சிறு விவசாயிகள் மற்றும் தரிசு நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகள் புதிய உழவு உந்து வண்டியை வாங்க இயலாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பயன்படுத்திய / இரண்டாம் தர வண்டி நிதி வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படுகின்றது.
இதன் மதிப்பை 80 சதவிகிதம் அளவிற்கு ஆராய்ந்து பின் அதே வண்டி சந்தையில் தற்போது புது உழவு உந்து வண்டியின் தரம் ஆகியவற்றை பார்த்து, அதிலிருந்து 12 சதவிகிதம் தேய்மானத்திற்கான மதிப்பை போட்டு பின் வழங்கப்படும். அதோடு பழுது பார்ப்பதற்கு ரூ. 50,000 மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

15. உழவு உந்து மற்றும் பெரிய வேளாண் இயந்திரங்கள்
நிதியுதவி வழகுவதற்கான வரையறைகள்

  1. புதிய அல்லது இரண்டாம் தர உழவு உந்து வாங்குதல்
  2. உழவு உந்துவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்
  3. பவர் டில்லர் மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http:// www.bankofbaroda.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015