வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
பாங்க் ஆப் இந்தியா
  1. விவசாய மருந்தகம்  மற்றும் விவசாய தொழில்
  2. குளிர் பதனக் கிடங்கு
  3. ஒன்றிணைந்த கடன் திட்டம்
  4. பயிர் நிதி
  5. பண்ணை இயந்திரமயமாக்கல், உபகரணங்கள்
  6. கால்நடை மற்றும் மாட்டு வண்டிகளுக்கு நிதியுதவி
  7. நில மேம்பாடு
  8. தண்ணீர் பாசனம்
  9. கோழிப் பண்ணை மேம்பாடு
  10. விவசாய தேவைக்காக நிலம் வாங்குதல்
  11. கிராமப்புற கோடோன் திட்டம்
  12. §டாய் சடாப்தி கிரிஷி விகாஸ் அட்டை
  13. கிசான் கடன் அட்டை
  14. கிசான் சமாதான அட்டை
  15. ஸ்டார் பூமிகீன் கிசான் அட்டை
  1. விவசாய மருந்தகம் மற்றும் விவசாயத் தொழில்

குறிக்கோள்

    1. அரசு விரிவாக்கத் துறைக்கு உதவி
    2. வேளாண் இடுபொருட்களை தேவையான விவசாயிகளுக்கு அனுப்பி கிடைக்கச் செய்வது மற்றும் அதன் சேவை.
    3. வேளாண் துறையில் வேளாண் பட்டதாரிகளுக்கு லாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குதல்.

தகுதி
வேளாண் பட்டதாரிகள் மற்றும் அதன் சார்ந்த துறைகளான தோட்டக்கலை, கால்நடை, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, வனவியல், மீன்வளர்ப்பு படிப்பு மற்றும் இதர வேளாண்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு பொருந்தும்.

பண அளவு
ரூ. 5 லட்சம் வரை - இல்லை
ரூ. 5 லட்சத்திற்கு மேல் - 15 - 20 %

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

02. குளிர் பதனக் கிடங்கு

கடன் பெற தகுதியுடையவர்கள் / மறுநிதிக்கான நிறுவனங்கள்

  1. தனி நபர், குழு நபர்கள், கூட்டுறவு சங்கம், தனி / கூட்டு நிறுவனம் அல்லது இணை நிறுவனங்களுக்கு முன்பணமாக சி.பி (C.B) மற்றும் எஸ்.சி.பி (S.C.B) இவர்களிடம் பெற்றிருப்பின் நபார்டு வங்கியிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி. (SCARDB) - யிடம் தனிநபர்கள் முன்பணம் பெற்றிருப்பின் அதுவும் நபார்டு வங்கியிடம் இருந்து பணம் பெற தகுதியுடையவர்.
  2. விவசாயி பயிர் உற்பத்தி செய்ய அந்த பருவத்தில் பயிர் கடன் பெற்றிருப்பின் அவர் விற்பனைக் கடன் திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.

பண அளவு
திட்ட மதிப்பில் இருந்து 15 முதல் 25 சதவிகிதம் வரை பணம் வாங்குபவரின் பொருளாதார சக்திக்கு ஏற்றாற் போல் வசூலிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

03. ஒன்றிணைந்த கடன் திட்டம்
குறிக்கோள்

  1. வங்கியின் கடன் திட்டத்தைப் பெற்று மேம்படுத்தப்பட்ட பயிர் பெருக்க நுட்பங்களை மேற்கொண்டு பயிரின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  2. விவசாயிக்கு ஒரு பருவத்தில் நல்ல வருவாயை ஏற்படுத்த மற்றும் அதே சமயம் விவசாயியின் வீட்டுத் தேவைகளை அந்த சேமிப்பு நாட்களில் ஈடுகட்டத் தேவையான கடனுதவிகளை வழங்கியும் அவருக்கு உதவி செய்தல்.
  3. இந்த ஒன்றிணைந்த கடன் திட்டத்தில் விவசாயி தன் வங்கி கணக்கில் தனது சேமிப்புகளைப் போட்டு அதில் வரும் வட்டியைச் சம்பாதிக்கலாம்.

தகுதி

  1. தனிநபர் விவசாயி, பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனம், நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய கூட்டுறவு சங்கங்கள் அதன் நிலங்கள், பதிவு செய்யப்பட்ட நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், பங்கீடு செய்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உரிமையுள்ளவர்கள் ஆகிய அனைவரும் பயிர் நிதியை பெறத் தகுதியுடையவர்கள்.
  2. பயிர் உற்பத்தி செய்து அதன் பொருட்களை குளிர்ப்பதன கிடங்குகளில் / கேடோன்களில் / ஒருங்கிணைந்த சந்தை களத்தில் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதன் பாதுகாப்பு இரசீது வைத்திருப்பின் இதற்குத் தகுதியானவர்கள்.

மேலும் தகவல்களுக்கு அழுத்தவும்.

04. பயிர் நிதி 
குறிக்கோள் மற்றும் தேவை

  1. குறுகிய கால விவசாய பயிர்க்கடன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிர் செய்யவும் அதை நவீன முறையில் கையாளவும் மற்றும் இதனால் பண்ணை உற்பத்தியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கவும் வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
  2. நிதியைக் கீழ்க்கண்ட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
      1. கலப்பின விதைகள், உரங்கள், எரு, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ஆகியவைகளை வாங்குதல்.

      ii) உழவு உந்து மற்றும் விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், வேலையாட்களுக்கான கூலி, பாசன செலவு, எண்ணெய் மற்றும் பம்பு செட்டுகள் இயக்கச் செலவிடப்படும் பெறுவது.

    1. அறுவடை செய்யப்பட்ட பொருட்களுக்கு சேமித்து வைக்க முன்பணம் பெறுவது.
  1. தோட்டக்கலை, மலைப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்ய முன்பணம்.
  2. வீரிய இரக / அதிக மகசூல் தரும் விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு நிதி வழங்குதல்.

தகுதி

  1. தனிநபர் விவசாயி, பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனம், நிறுவனங்கள், பதிவு செய்யபட்ட விவசாய கூட்டுறவு சங்கங்கள் அதன் நிலங்கள், பதிவு செய்யப்ட்ட நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், பயிர் செய்து பங்கீடு செய்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உரிமையுள்ளவர்கள் அனைவரும் பயிர் நிதியை பெறத் தகுதியுடையவர்கள்.
  2. முற்போக்குச் சிந்தனை உள்ளவராகவும் நவீன விவசாய முறைகளைப் பின்பற்றக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
  3. விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக இருப்பின் அவர்களுக்கு, பயிர் உற்பத்திக்கு சங்கங்கள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.
  4. விதை பெருக்க திட்டத்தில், விவசாயி தனது நிலத்திற்கு நல்ல நீர்ப்பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். அவருடைய தகுதிகள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் அவருக்கு ஆதார விதை கொடுக்கும் விற்பனையாளரிடமும் மற்றும் அவரிடம் வர்த்தக விதையை வாங்குபவரிடம் இருந்தும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

05. பண்ணை இயந்திரமயமாக்கல், உபகரணங்கள்
குறிக்கோள்

  1. விவசாயிகளுக்கு விவசாய வேலைகளில் நவீன யுத்திகளைக் கையாள தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்குக் கடன் உதவி வழங்குதல்.

தேவைகள்

  1. புதிய அல்லது இரண்டாம் தர உழவு உந்து இயந்திரம் மற்றும் அதன் இணை இயந்திரங்கள் வாங்குதல்.
  2. புதிய பவர் டில்லர்கள் அதற்கான உபகரணங்கள் வாங்குதல்.
  3. மின் தெளிப்பான்கள், துகள்கள் பரப்புதல், கால்நடை தீவனம் வெட்டும் இயந்திரம் வாங்குதல்.
  4. சிறிய டிரக்குகள், ஜீப் வண்டி, இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் ஆகியவை §வளாண் இடுபொருட்கள் மற்றும் பண்ணை பொருட்கள் எடுத்துச் செல்ல உதவியாக இருப்பவை அனைத்தும் வாங்குதல்.
  5. இரண்டாம் தர உழவு உந்து, பவர் டில்லர், ஜீப் வண்டி, சிறிய டிரக்குகள் மற்றும் இதர இயந்திரங்கள் பழுதுபட்டிருந்தாலோ அல்லது புரணமைத்தல் ஆகியவற்றிற்கு நிதியுதவி அளித்தல்.

தகுதி
தனிப்பட்ட விவசாயிகளுக்கான நிதியுதவிகள்

  1. கடன் வாங்குபவர் விவசாயிகளாகவும் மற்றும் சொந்த நிலமோ அல்லது குத்தகைக்கு எடுத்திருப்பின் அது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  2. உழவு உந்து வாகனம் வாங்க குறைந்தபட்சம் 8 ஏக்கர் நிலம் விவசாயி வைத்திருக்க வேண்டும். மேலும் 5 ஏக்கர் இருந்தால் சில விதிகளுக்குட்பட்டு அந்தப் பகுதியின் மேலாளர் அல்லது துணை மேலாளரைப் பொருத்து வழங்கப்படும்.
  3. உழவு உந்து வண்டி குறைந்தபட்சம் 1000 மணி நேரம் மற்றும் பவர் டில்லர்கள் 600 மணி நேரம் ஒரு வருடத்திற்கு உபயோகப்படுத்துவதற்கு உத்திரவாதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  4. மேலும் 25 குதிரை திறனுக்கு மேல் கொண்ட உழவு உந்து வாகனம் வாங்க வேண்டுமானால், விவசாயிக்கு ஒவ்வொரு 2 முதல் 2.5  குதிரைத் திறன் ¦காண்ட உழவு உந்துக்கும் ஒரு ஏக்கர் வருடம் முழுவதும் நீர் பாசனம் உள்ள நிலம் பெற்றிருக்கவேண்டும்.
  5. விவசாய இயந்திரங்கள் பெற மாநில அரசின் கீழ் நிதி பெறும் விவசாயிகள்
  6. விவசாயிகளுக்கு சேவைகள் செய்யும் மாநில அரசு கழகங்கள்
  7. விவசாய சேவை நிலையங்களை நடத்தி வரும் தொழில்நுட்பத் தகுதி பெற்ற சுயதொழில் முனைவோருக்கு வேளாண் இயந்திரங்கள் பெற நிதியளித்தல்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

06. கால்நடை மற்றும் மாட்டு வண்டிகளுக்கு நிதியுதவி
குறிக்கோள்

  1. வறட்சி நிறைந்த பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கவும் அதன் மூலம் விவசாயப் பண்ணை வேலைகள் செய்து கொள்ளவும் மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி வாடகைக்குச் சென்று அதன் மூலம் வருவாயை ஈட்டிக்  கொள்ளவும் இத்திட்டம் உதவுகிறது.

தேவைகள்
வறட்சி நிறைந்த பகுதிகளில் வளரும் கால்நடைகளான எருதுகள், எருமை மாடு, ஒட்டகம், குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் வாங்குவதற்கும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
தகுதிகள்

  1. விவசாயிகள் சொந்த நிலம் அல்லது பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம் இதில் ஏதேனும் ஒன்று பெற்றிருப்பின் 2 கால்நடைகளும் அல்லது அதற்கு மேல் தேவைக்கு ஏற்றாற் போல் வழங்கப்படும்.
  2. விவசாயி ஏற்கெனவே ஒரு கால்நடையோ அல்லது ஒன்றிற்கு மேல் அவரால் பாதுகாக்க இயலாது எனில் அவர் ஒரு கால்நடை வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
  3. விவசாயிகளோ அல்லது நிலமில்லாத கூலி வேலை செய்பவர்களோ, வாடகைக்குச் செல்ல போதுமான வாய்ப்பு இருப்பின் அவர்களுக்கும் இரண்டு மாடு மற்றும் ஒரு மாட்டு வண்டி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

07. நில மேம்பாடு 
தேவைகள் 
நிலத்தை சமன் செய்தல், மண் சரிசெய்தல் மற்றும் பலவிதமான மண்வள பாதுகாப்புத் திட்டங்கள்.

தகுதி
சொந்த விவசாய நிலம் அல்லது பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம்.

கடன் அளவு
திட்டத்தின் செலவு மதிப்பைப் பொருத்து கடன் அளவு வேறுபடும். தேவையான பொருட்கள் மற்றும் சரிசெய்யும் விதம் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசுத் துறையை அணுகி பெற வேண்டும்.

நிர்ணயம் விகிதம்
ரூ. 50,000 வரை - இல்லை
ரூ. 50,000 மேல் - 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

08. நுண்ணீர் பாசனம்
விவசாய பாசன வசதிகளை நுண்ணீர் பாசன முறை மூலம் மேம்படுத்தி, பயிரின் தொகுப்பு சதவீதம் அதிகரித்தல், அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் ஆகியவற்றிற்கு இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதி வழங்கப்படுகிறது.

தேவைகள்
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ்க்கண்ட செயல்களை மேற்கொள்ளலாம்.

  1. இறைப்பு முறை பாசனம்
  2. கிணற்றுப் பாசனம்
  3. மின் விசைப்பொறி மற்றும் பம்பு  செட் பாசனம்
  4. எண்ணெய் விசைப்பொறி
  5. பம்பு செட் அறை அமைத்தல் / பாசன நீர் வாய்க்கால் அமைத்தல்
  6. தமிழ்நாடு மின்வாரியத்திற்குச் செலுத்தப்படும் இருப்பு தொகையும் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  7. விவசாய நிலத்தின் தன்மை மற்றும் தேவைக்கேற்ற வசதிகளைச் செய்து கொள்ள கடன் வசதி செய்து தரப்படும்.

தகுதி

  1. தனிப்பட்ட விவசாயிகள்
  2. விவசாயிகள் குழு அல்லது விவசாய கூட்டுறவு சங்கம்
  3. மாநில அரசின் அத்தாட்சி அளிக்கும் மாநில பாசனக் கழகம்
  4. தனி விவசாயிகள் அல்லது குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கம் அனைத்தும் விவசாயிகள் சொந்த நிலமோ அல்லது பதிவு செய்யப்பட்ட குத்தகை விவசாய நிலம் மற்றும் நவீன வேளாண் யுக்திகள் மற்றும் விவசாய முறைகளைச் செய்யும் நபர்களாக இருத்தல் வேண்டும்.
  5. இறைப்பு முறைப் பாசனம் செய்வோர் மாநில அரசின் பொதுத்துறை அதிகாரியிடம் ஆறு / ஏரியில் இருந்து எடுப்பதற்காக அத்தாட்சியை வழங்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

09. கோழிப் பண்ணை மேம்பாடு 
குறிக்கோள் 
இதன் முக்கிய குறிக்கோள் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தி அதன் மூலம் தொழில் தொடங்க முனைவோர் மற்றும் மானிய உதவி பெற்று தொடங்குவோர் ஆகியோருக்கு நிதியுதவி அளித்தல்.

தேவைகள்
கீழ்வரும் கோழிப் பண்ணைத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

        1. 200 முதல் 500 பறவைகள் வரை சிறிய கோழிப் பண்ணை அமைத்து அதன் மூலம் மானியத் தொகையில் விவசாயிகள் மற்றும் விவசாய வேலையாட்களுக்கு தொழில் தொடங்க உதவியளித்தல்.
        2. தனிநபர், பதிவு செய்யப்பட்ட கூட்டுமுறை நிறுவனம், லிமிடெட் குழுமம், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம் ஆகியவற்றிற்குத் தேவையான பயிற்சி பெற்ற தொழில் நுட்ப வல்லுநர்கள், மேலாண்மை திறன் கொண்ட நபர்கள் ஆகி§யார் வணிக ரீதியான கோழிப் பண்ணையை உருவாக்கத் தேவையானவை.
        3. முட்டை கோழிப்பண்ணை, கறிக்கோழிப்பண்ணை, குஞ்சு கோழிப்பண்ணை மற்றும் உற்பத்தி பின் செய் நேர்த்தி ஆகியவற்றை அமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல்.
        1. வளர்ப்பு வீடுகள், தீவன கோடோன்கள், மின் இணைப்பு, நீர் அனுப்புதல், கூண்டு வாங்குதல், தீவனம் வாங்குதல், முட்டை / தீவன டிராலிகள், தடுப்பூசி உபகரணங்கள்.
        2. கோழிப் பண்ணை கூட்டுறவுகளுக்குத் தேவையான தீவன அறைக்கும் உபகரணம், தீவன கலவைகள் மற்றும் அதை சேமித்து வைத்தல் இவை அனைத்திற்கும் நிதி உதவி அளித்தல்.
        3. ஒருங்கிணைந்த முட்டை பண்ணைக்குத் தேவையான இயந்திரங்கள், முட்டையிடும் வீடுகள், முட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான குளிர்ப்பதன வசதிகள் அனைத்திற்கும் நிதி உதவி அளித்தல்.
        4. பெரிய கோழிப்பண்ணைகளுக்குத் தேவையான குளிர் சாதனங்கள், ஜெனரேட்டர்கள் ஆகியவை வாங்க தேவையான நிதியை வழங்குதல்.

தகுதி

  1. தகுதியுள்ள தனிநபர் விவசாயி / விவசாய வேலையாட்கள் கோழிப் பண்ணையை மானியம் பெற்று தொழில் செய்து வருவோர்.
  2. தனிநபர், பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனம், லிமிடெட் நிறுவனங்கள் அனைவரும் வங்கிக் கடன் பெற்று பெரிய கோழிப் பண்ணை தொடங்க தகுதியானவர்கள், இதில் தகுதியுள்ள பயிற்சி / தொழில்நுட்பத் திறன் கொண்டவர்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

10. விவசாய தேவைக்காக நிலம் வாங்குதல்
குறிக்கோள்

  1. சிறு மற்றும் குறு விவசாய நிலங்களை வைத்திருப்போர் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைதல்.
  2. தரிசு மற்றும் வீண் நிலங்களை விவசாய நிலமாக மாற்றுதல்
  3. விவசாய உற்பத்தி மற்றம் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
  4. நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் ஆகியோர்க்கு நிலத்தை சுயமாக வாங்க நிதி உதவியளித்தல்.

தகுதிகள்

  1. அதிகபட்சமாக 5 ஏக்கர் தரிசு நிலம் அல்லது 2.5 ஏக்கர் பாசன நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்கலாம். நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகளும் இத்திட்டத்தில் இடம் பெறுவர்.

தேவை

  1. தரிசு மற்றும் வீண் நிலங்களை விவசாயிகள் வாங்கி, அதை முன்னேற்றி பயிர் செய்து விவசாய நிலமாக மாற்ற நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். விவசாயி நிலத்தை வாங்கி விவசாயம் சார்ந்த தொழில் செய்யவும் மற்றும் கடன் வாங்கும் போது திட்ட மாதிரியை வங்கியிடம் கொடுக்க வேண்டும்.
  2. விவசாயிகள் விவசாய நிலங்கள் வாங்கும் பொழுது ஒரே இடத்தில் இருக்கும் படி இருத்தல் வேண்டும். அப்படி இருப்பின் உற்பத்திச் செலவு குறையும் மற்றும் விவசாய நிலம் கிராமத்தின் வரைவு எல்லைக்குள் 3 முதல் 5 கிலோ மீட்டருக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

11. கிராமப்புற கோடோன் திட்டம்
தகுதி 
இந்த திட்டத்திற்கு தனிநபர், குழு விவசாயிகள் / உற்பத்தியாளர்கள், கூட்டு அல்லது தனிப்பட்ட நிறுவனம், நிறவனங்கள், கழகங்கள், கூட்டுறவுகள், தொண்டு நிறுவனங்கள், சுயதொழில் புரிவோர், வேளாண் பின்செய் நேர்த்தி, கூட்டுறவு சங்கங்கள், வேளாண் பொருள் விற்பனைச் செயற்குழு, விற்பனை வாரியம், நாடு முழுவதும் வேளாண் பின்செய் நேர்த்தி, கூட்டுறவு கோடோன்களுக்கு மட்டும் சீரமைத்தல் / விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இடம்
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் புனைய விரும்பும் நபர் கோடோனை விருப்ப அளவிற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அதோடு அதன் அமைவிடம் நகராட்சிக்கு வெளியிலும் மற்றும் 100 மெட்ரிக் கடன் கொள்ளளவு உடையதாக இருத்தல்வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

12. §டாய் சடாப்தி கிரிஷி விகாஸ் அட்டை 
குறிக்கோள்
விசா அட்டை அதாவது §டாய் சடாப்தி கிரிஷி விகாஸ் அட்டையின் முக்கிய சிறப்பம்சங்கள்

தகுதி
விவசாயி பயிர் கடன் கணக்கின் கீழ் கடன் வாங்கி ரூ. 50,0000 அதற்கு மேல் திருப்திகரமாக செயல்பட்டிருப்பின் அவர்கள் தகுதியுடையவர்.

செலவு செய்யும் அளவு
பயிர் கடன் வழங்க அனுமதிக்கப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக ரூ. 50,0000 மற்றும் குறைந்தபட்சம் ரூ. 25,000.

பணம் எடுத்தல்
அதிகபட்சமாக ரூ. 10,000 நாள் ஒன்றுக்கு

13. கிசான் கடன் அட்டை
குறிக்கோள்

  • இத்திட்டம் விவசாயிக்குத் தேவையான கடன்களைப் பயிர் உற்பத்தி செய்வதற்கும் மற்றும் வேறு செலவுகளுக்கும் தேவையின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
  • கடன் பெறுவதில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தி பயன்பெறுதல்.

தகுதி

  • இத்திட்டத்தில், வங்கி கிளை கிசான் கடன் அட்டை சிறு தவணை கடன் பெற தகுதியுள்ளவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வேறு தொழில் முனைவோருக்கும் பொருந்தும்.
  • விவசாயி அந்த வங்கி கிளையின் செயல்திட்ட பரப்பில் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அட்டை வழங்குதல்

  • இத்திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிக்கு கடன் அட்டை மற்றம் கணக்கு புத்தகம் வழங்கப்பட்டு அதில் பெயர், முகவரி, நிலத்தின் அளவு, கடன் வாங்கிய தொகை அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். கணக்கு புத்தகத்தில் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் வைத்து ஒட்டப்பட்டிருக்கும்.
  • கணக்கு செயல்படும் பொழுது கணக்கு புத்தகம் கொடுக்க வேண்டும்.

14. கிசான் சமாதான் அட்டை
குறிக்கோள்

  • இது விவசாயியின் மொத்த கடன் தேவைகளான குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை சேர்த்து 5 வருடங்களுக்குச் செல்லும். இதில் விவசாயம் அதன் சார்ந்த தொழில்கள், இயந்திரங்கள் அதை சரி செய்தல், வீட்டுக் கடன், வாகனக் கடன் அனைத்தும் அடங்கும்.
  • கடன் பெறுவதில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தி கடன் பெறச் செய்வதே  இத்திட்டத்தின் நோக்கம்.

தகுதி

  • கிசான் கடன் அட்டை உள்ள அனைவரும் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
  • உற்பத்திக் கடன் மற்றும் முதலீட்டுக் கடன் ஆகிய இரண்டையும் பெற்றால் தான் இதற்குத் தகுதியுடையவர்.

தேவை

  • உற்பத்திக் கடன்
  • முதலீட்டுக் கடன்

குறிப்பு

  • பெரிய திட்டம் மற்றும் தொகை அதிகமாக இருப்பின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நிலையை ஆராய்ந்து வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

15. ஸ்டார் பூமிகீன் சிசான் அட்டை 
குறிக்கோள்

  • இத்திட்டத்தின் நோக்கம் குறுகிய கால உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் கடன்களை செலுத்துவதற்கு நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் வாய் மொழியாக நஷ்டம் அடைந்ததாகக் கூறும் விவசாயிகளுக்கு விவசாய கடனுதவி அளித்து அவர்களின் உற்பத்தியைப் பெருக்கி வருவாயை பெருக்க வழிவகை செய்தல்.

தகுதி

  • வங்கியின் கிளையில் ஸ்டார் பி.கே.சி (BKC) என்ற இத்திட்டத்தின் கீழ் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் குறுகிய கால பயிர் கடன் பெறுவோர் அனைவருக்கும் வழங்கப்படும்.
  • நபார்டு வங்கியின் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் ஒரு பெயர் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது உழவர் மன்றம் அல்லது சுயதொழில் புரிவோர் அவர்களின் உபயத்தால் வங்கியின் செயல்திட்ட பரப்பிற்குள் அந்த நபர் இருக்க வேண்டும்.
  • வங்கியின் மேலாளர் உழவர் மன்றம் / அரசு சாரா நிறுவனம் / சுயதொழில் முனைவோர் - அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அழைத்து கூட்டம் நடத்தி பின் வழங்க வேண்டும்.
  • இடம் பெயர்ந்தவர்கள் இத்திட்டத்தில் சேர அனுமதியில்லை.

தேவை

  • மேம்படுத்தப்பட்ட விதைகள், உரம், எரு, பயிர் பாதுகாப்பு உபகரணம், உழவு உந்து வாடகை, பாசன கட்டணம், மின் கட்டணம் மற்றும் தேவையான செலவுகள்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015