வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

சென்ட்ரல் வங்கி

  1. கிசான் கடன் அட்டை
  2. சென்ட் கல்யாணி

கிசான் கடன் அட்டை

விவசாயிகளுக்குக் கடன் வழங்குதல்

குறிக்கோள்
விவசாய இடுபொருட்கள் மற்றும் பயிர் உற்பத்திக்கான செலவுகளை விவசாய நிலங்கள் வைத்திருப்பதன் அளவைக் கொண்டு கடன் வழங்கப்படும்.
தகுதி

  1. விவசாயிகளுக்கான சிறு தவணை கடன் தேவைகளுக்கு சென்ட்ரல் கிசான் கடன் அட்டை (CKCC) வழங்கப்படும்.
  2. விவசாயிகள் 2 வருடங்கள் வரவு செலவு எங்களது வங்கியில் வைத்திருப்பவராகவும் மற்றும் வேறு நிறுவனத்திற்குக் கடன் ¦சலுத்த வேண்டியவராகவும் இருத்தல் கூடாது.

பாதுகாப்பு அளவு
விவசாய கடன்களின் அளவைப் பொருத்து வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

சென்ட் கல்யாணி

பெண் சுயதொழில் செய்வோரை ஊக்கப்படுத்துதல்
இத்திட்டம் பெண்கள் சுயதொழில் முனைவோருக்கு விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு நிதி உதவி அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி, நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளின் மூலம் பெண் சுயதொழில்  முனைவோர்க்கு நிதி உதவி அளிக்கின்றது.
கீழ்க்கண்ட கடன் வசதிகளை பெண் சுயதொழில் முனைவோர்க்கு வழங்கப்படுகின்றது.

  1. சில்லறை வர்த்தகம்
  2. கிராமப்புற மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்
  3. அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்கள்
  4. சிறு தொழில்கள்
  5. தொழில் நெறிஞர்கள் மற்றம் சுயமாக வேலை செய்வோர்

கடன் அளவு, வட்டி விகிதம், பாதுகாப்பு, திருப்பிச் செலுத்துதல், பதிவு செய்தல் ஆகியவை சென்ட் கல்யாணி திட்டத்தின் மற்ற விதி முறைகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்

ஆதாரம் : http://www.centralbankofindia.co.in

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015