வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

கார்ப்பரேசன் வங்கி

1. கார்ப் கிசான் பண்ணை இயந்திரமயமாக்கல் (CKM) 
தேவை

  1. குறிப்பிட்ட அளவு விவசாயம் செய்யும் விவசாயிகள்.
  2. வங்கியின் குறிப்பிட்ட கடன் வரையறைகளை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதிகள்

  1. உழவு உந்து / பவர் டில்லர், பெட்டிகள், டில்லர், அறுவடை இயந்திரம், தெளிப்பான்கள், கூட்டு அறுவடை இயந்திரம், கல்டிவேட்டர்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தல்.
  2. ஜெனரேட்டர் செட், பம்பு செட்கள் அமைத்தல், இழு பாசன வசதிகள், சொட்டு நீர் / தெளிப்பான்கள் முறை பாசன வசதிகள்.

2. கார்ப் கிசான் வாகன கடன் யோஜனா (CKVLY)

குறிக்கோள்
ஜீப் வண்டி, பிக் - அப் வேன், மினி டிரக், டிரக், டெம்பொ மகிழ்வுந்து / வேன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றிற்கு நிதியுதவி அளித்தல்

தகுதிகள்
புதிய வாகனக் கடன் : வாகனத்தின் 90 சதவிகிதம் மதிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள், பதிவு, காப்பீடு ஆகிய அனைத்தும்.
பழைய வாகனக் கடன்  : வாகன மதிப்பில் 75 சதவிகிதம் வழங்கப்படும்.

3. கார்ப் விவசாய விளைபொருள் கடன் (CAPL)
குறிக்கோள்

  • குறைந்த விலைக்கு விற்பதை தடுப்பதற்கு விவசாயிகளுக்காக கடன் வசதி
  • வியாபாரிகளுக்குத் தேவையான நிதியை கடன் வசதி ஏற்படுத்தித்  தருவது

தகுதி

  1. நமது வங்கியில் விவசாய பயிர் கடன் பெற்றருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  2. வேறு எந்த வங்கியிலாவது பயிர் கடன் / கடன் பெற்றிருப்பின் மற்றும் கணக்குள் சரிவர செய்து வந்தால் அந்த விவசாயிக்கு வழங்கப்படும்.
  3. வர்த்தகர்கள் தகுதியான உரிமம் மற்றும் வர்த்தகம் செய்வதற்கான குறைந்தபட்ச ஒரு வருடத்திற்கான ஆதாரம்.

4. விவசாயிகளுக்கு நிலம் வாங்குவதற்கான திட்டம்

குறிக்கோள்
சிறு விவசாயிகளுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தவணை முறையில் நிதியளித்தல் மற்றும் தரிசு வீண் நிலம் வாங்கி அதை மேம்படுத்தி, பயிர் செய்து அதில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை ஆகியவற்றை அதிகப்படுத்துதல்.

தகுதி
நபார்டு வங்கியின் வழிகாட்டுதல் படி சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

5. விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையம்
தகுதி
வேளாண் பட்டதாரிகள் மற்றும் அதனைச் சார்ந்த பட்டதாரிகள்.

திட்ட மதிப்பு
தனிநபருக்கு ரூ. 10 லட்சம் வரைக்கும் மற்றும் ரூ. 50 லட்சம் வரை குழுக்களுக்கு (இதில் ஐந்தில் ஒருவர் மட்டும் மேலாண்மை பட்டதாரியாக இருக்க வேண்டும்).

6. கார்ப் ஆர்தியாஸ் லோன் யோஜனா (CALY)
தகுதி
கமிஷன் ஏஜெண்டுகள் / ஆர்தியாஸ் இவர்கள் தகுதியான அத்தாட்சியை சந்தை வளாகம் / கமிட்டியிடம் பெற்றிருத்தல் வேண்டும். அதோடு இதே தொழிலில் கடந்த 8 ஆண்டுகளாக இருத்தல் வேண்டும்.

வசதிகள்
பணி கடன்

7. நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் / பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகளுக்கான திட்டம்
தகுதி

  1. கடன்பெறும் நபர் அந்த கிராமத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராகவும் அந்த வங்கி கிளையின் செயல்பாடுகள் உள்ள பகுதிக்குள் வருமாறு இருக்க வேண்டும்.
  2. சுயஉதவிக்குழுக்களாக இருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கடன் தொகை

  1. தேவைக்கேற்ற உற்பத்தியும் மற்றும் முதலீட்டுக் கடனும் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும்.

8. குழுக்களாக இணைந்து நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் திட்டம்
தேவை

  1. இத்திட்டத்தின் மூலம் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் குறு விவசாயிகள் ஆகியோருக்கு சரியான தலைப்பு செய்கைகள் இல்லையெனில், இக்குழுவின் மூலம் வழங்கப்படும்.

தகுதி
இத்திட்டத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தகுதியுடையவர்கள்.

9. நிறுவனம் அல்லாதோரிடம் விவசாயிகளின் கடன்கள ஏற்று நடத்தும் திட்டம்

தேவை
தனி நபரிடம் கடன் பெற்றிருக்கும் விவசாயிகளின் துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு கடன் உதவி அளித்தல்.

தகுதி

  1. ஏற்கெனவே வங்கியில் கடன் பெற்றிருப்போர் மற்றும் கடனை சரியான தவணையில் திருப்பிச் செலுத்துபவர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
  2. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயி கடன் பெறாமல் இருப்பின் மற்றும் அந்த வங்கியின் சேவைப் பகுதிக்குள் வரும் போது அவர்களுக்கு வழங்கப்படும்.
  3. நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினராக இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும்.

10. கார்ப் லாகு உதையாமி கடன் அட்டை திட்டம் (CLUCC)
தேவை

  1. தவணை கடன் மற்றும் வேலை செய்வதற்குத் தேவையான நிதியை சிறு தொழில் செய்யும் நிறுவனத்திற்கு புதியதாகவோ அல்லது ஏற்கெனவே கடன் வாங்கியிருக்கும் நபருக்கோ வழங்கப்படும்.
  2. சில்லரை வர்த்தகம், தொழில் நிபுணர்கள், கிராமப்புற தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டவர்.

கடன் தொகை - அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம்.

11. கார்ப் தொழில் நிபுணர்கள் கடன் அட்டை திட்டம் (CACC)
தகுதி

  1. அனைத்து தொழில் நிபுணர்கள் மற்றும் மேம்பாட்டு ஆணையர் (கைவினைப்பொருள்) அவர்களிடம் பதிவு பெற்றிருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்.
  2. தொழில் நிபுணர்கள் தொடங்கிய சுய உதவிக் குழுக்கள் இதில் முக்கிய இடம். அரசு மானிய பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் இதற்குத் தகுதி இல்லை.

கடன் தொகை -  அதிகபட்சமாக 2 இலட்சம்.

12. கார்ப் சுவரோஜ்கார் கடன் அட்டை திட்டம் (CSCCS)
குறிக்கோள்

  1. சிறிய தொழில் நிபுணர்கள் கைத்தறி நெசவாளர்கள் ஆகியோர்க்கு தேவையான அதே சமயம் தகுந்த நேரத்தில் நிதி உதவி வழங்கப்படும்.
  2. சேவைத் துறையில் உள்ள நபர்களான சிறிய வர்த்தகர்கள், மீனவர்கள், சுயதொழில் முனைவோர், ரிக்க்ஷா ஓட்டுபவர் மற்றும் சிறிய தொழில் முனைவோர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

வசதிகள்

  1. தவணை கடன் 5 வருடத்தில் திருப்பிச் செலுத்தவேண்டும். முதலீட்டுப் பண்ணை சுழலும் கடனாக எடுத்துக் கொள்ளப்படும்.
  2. ஒண்றிணைந்த கடன் (தவணை கடன் மற்றும் முதலீட்டுப் பணி)

13. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) நேஷனல் ஈக்விடி பண்ட் திட்டம் (NEF)
தகுதி

  1. சிறிய அளவிலான புதிய திட்டம். இருக்கின்ற சிறிய அளவிலான துறையை விரிவாக்கம் செய்தல் / நவீனமயமாக்கல் / தரம் உயர்த்துதல்/
  2. நலிவடைந்த துறையை புறணமைத்தல். உதவி ஈக்விட்டி முறையின் மூலம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் உதவியின் கீழ் கடன் வழங்குதல்.
  3. திட்டத்தின் மதிப்பு - அதிகபட்சமாக ரூ. 50 இலட்சம்

14. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கார்ப் வோகேஷனல் கடன் திட்டம் (CVLS)
குறிக்கோள்

  1. கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்வோர்க்கு தகுதியின் அடிப்படையில் மேம்பாடு அடையச் செய்தல்.
  2. குறுகிய கால பட்டயப் படிப்புகளுக்கு முன் உள்ள பாடங்களில் 6 மாதங்களுக்கு மேல் அல்லாமல் CIDC / IGNOU மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.

தகுதி

    1. வேலை செய்பவர்கள் ஐ.டி.ஐ அளித்த வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வைப்பு நிதியின் கீழ் வரவேண்டும்.
    2. குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 45 முதல் 50 வயதுக்கு மேல் போகாமல் இருத்தல் வேண்டும்.

15. கார்ப் பொது கடன் அட்டை (CGCC)
வசதிகள்

  1. கடன் வசதி முறையை உபயோகிப்பதில் எந்த ஒரு இறுதி கட்ட வரையறையும் இல்லை.
  2. கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளின் அனைத்துக் கிளைகளிலும் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

தகுதி

  1. வங்கியின் CPSB கணக்கு உள்ளவர்கள்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.corpbank.com/ 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015