வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

லட்சுமி விலாஸ் வங்கி

  1. லட்சுமி கிசான் கடன் அட்டை
  2. லட்சுமி தனிப்பட்ட வாகனக் கடன்
  3. லட்சுமி தங்க சக்தி

1. லட்சுமி கிசான் கடன் அட்டை
லட்சுமி கிசான் கடன் அட்டை விவசாயிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட திட்டம்.

முக்கிய அம்சங்கள்

  • இது சுழல் கடன் நிதி
  • குறுகிய காலம் / வருட பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிச் செலவுகளை பார்த்துக் கொள்ள கடன் அளவு வழங்கப்படும்.
  • வங்கி கணக்கில் கடன் பாக்கி வைத்திருக்கும் அளவிற்கு வட்டித் தொகை கட்ட வேண்டும்.
  • 3 வருடத்திற்கு உறுதியாக கடன் வசதிகள் வழங்கப்படும்.
  • இணக்கமுள்ள வகையில் திருப்பிச் செலுத்தும் முறைகள்
  • அதிகபட்ச அளவு ரூ. 10 லட்சம்
  • ரூ. 50,000 மற்றும் அதற்கு மேல் உள்ளவற்றிற்கு காசோலைப் புத்தக வசதிகள்.

2. லட்சுமி தனிப்பட்ட வாகனக் கடன்

தேவை
சொந்த தேவைகளுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.

  1. புதிய மகிழ்வுந்து / வேன் / ஜீப்
  2. பயன்படுத்திய மகிழ்வுந்து / வேன் / ஜீப்
  3. புதிய இருசக்கர வாகனங்கள்

தகுதி
விவசாயிகள் (குறைந்தபட்சம் 8 ஏக்கர் பாசன நிலம்)

வருவாய்
மகிழ்வுந்து / வேன் / ஜீப் வாங்குவதற்கு கடன் வசதி
வருடாந்திர வருவாய் ரூ. 1.20 லட்சம் இருத்தல் வேண்டும் (போதுமான ஆதாரங்கள் தேவை)

இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வசதி

  1. குறைந்தபட்சம் நிகர மாத வருவாய் ரூ. 5000 /- உடன் தேவையான ஆதாரங்கள் வழங்கவேண்டும்.

அளவு
மிகழ்வுந்து / வேன் / ஜீப் வாங்குவதற்கு கடன் வசதி

    1. நிகர மாத வருவாயில் 20 மடங்கு அதிகமாக வழங்கப்படும்.

புதிய வாகனம்

  1. வாகனத்தின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் அளவு கடன் வழங்கப்படும். (அதிகபட்சம் ரூ. 10 லட்சம்)

பயன்படுத்திய வாகனம்

  1. வாகனத்தின் மொத்த மதிப்பில் 60 சதவிகிதம் அளவு கடன் வழங்கப்படும். வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட வாகன பொறியாளர் மதிப்பிடல் செய்திருக்க வேண்டும். (அதிகபட்சம் ரூ. 5 லட்சம்)

புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு கடன் வசதி

  1. நிகர மாத வருவாயில் 6 மடங்கிற்கு அதிகமாக செல்லக்கூடாது அல்லது வாகனத்தின் மொத்த மதிப்பில் 75 சதவிகிதம் வைத்து குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் அதிகபட்சமாக ரூ. 50,000/- வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

3. லட்சுமி தங்க சக்தி
வசதியின் வகை

  1. தங்க நகையை அடகு வைத்து பொருட்களை அதிக வரைவு மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

தேவை

  1. தனிப்பட்ட நபர் / விவசாயம் / தொழில் தேவைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பயன்படுகிறது.

அளவு
குறைந்தபட்சம்            :      ரூ. 0.50 லட்சம்
அதிகபட்சம்              :      ரூ. 5 முதல் 50 லட்சம் வரை
ஒரு கிராம் தங்கத்திற்கான முன் பணம் நிர்ணயிக்கும் அளவை நேரத்திற்குத் தகுந்தது போல் மாறுபடும், மற்றும் வங்கியின் நிர்ணயிப்பவரின் அளவைப் பொருத்தும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.lvbank.com

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013