வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

ஆக்ஸிஸ் வங்கி (யு.டி.ஐ வங்கி)

  1. கிசான் சக்தி
  2. சக்தி டிராக்
  3. வர்த்தகப் பொருளின் சக்தி
  4. கூட்டுப் பண்ணையம்
  5. சக்தியுள்ள தங்கம்
  6. ஆர்தியா சக்தி
  7. கிராமப்புற கோடோன்
  8. கால்நடை சக்தி
  9. தோட்டக்கலை திட்டங்கள்

1. கிசான் சக்தி

  • இத்திட்டத்தின் நோக்கம் தேவையான மற்றும் தகுந்த நேரத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி செலவுகளான இடுபொருட்கள் வாங்குவது போன்றவற்றிற்கு கடன் வசதி வழங்குகிறது.

தகுதி

  • விவசாயி, நிலம் சொந்தமாக வைத்திருப்பவர், வாடகைக்கு நிலம் எடுத்து சாகுபடி செய்வோர் மற்றும் நிலத்தில் வரும் வருவாயைப் பாதியாக பங்கீடு செய்து கொள்ளும் விவசாயிகள் ஆகியோர் இந்த கடன் திட்டத்திற்கு தகுதியானோர்.
  • குறைந்தபட்சம் 2 ஏக்கர் சாகுபடி செய்யும் நிலமாக வைத்திருத்தல் வேண்டும்.

கடன் தொகை
குறைந்தபட்சம்          :      ரூ. 25,001
அதிகபட்சம்              :      ரூ. 25,00,000

திருப்பிச் செலுத்துதல்

  1. கடன் தொகையை திருப்பிச் செலுத்துதல், வேளாண் பொருட்களை அறுவடை செய்த  பின்பு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியை சந்தைப்படுத்துவதற்கு விடுத்து திருப்பிச் செலுத்தவேண்டும். பணக்கடன் முறையில் அதிகபட்சமாக 1 வருடம்  மற்றும் தவணை கடனுக்கு 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. பவர் டிராக்
தேவை

  1. இதன் கீழ், பண்ணை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (உழவு உந்து மற்றும் அதன் பயன்பாடுகள்) ஆகிய வேளாண் தேவைகளுக்கானவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

தகுதி

  1. விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டிருப்பவர்
  2. அத்தாட்சிக்கு ஒருவர் தேவைப்படுவர்.

கடன் தொகை
உழவு உந்து தொகையில் 85 சதவிகிதம் மதிப்பும், டிரெய்லர் தொகையில் 75 சதவிகிதம்  மற்றும் அதன் உபகரணங்கள் தொகையில் 60 சதவிகிதம் அதிகபட்சமாக கடனாக வழங்கப்படும்.

காலம் மற்றும் திருப்பிச் செலுத்துதல்

  1. 7 ஆண்டுகள் வரை
  2. திருப்பிச் செலுத்துதல் காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது  வருடாந்திர தவணைகள் மூலம் திருப்பிச் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

3. வர்த்தகப் பொருளின் சக்தி
வர்த்தகக் கடன்கள் (சிறு தவணை கடன்) பொருட்களை கோடோனில் அதன் இரசீது வைத்து அதன் மீது கடன் பெறுவது

  • மத்திய அரசின் கோடோன் (CWC) அல்லது மாநில அரசின் (SWC) சேமிப்பு கோடோன்கள்
  • இதர கோடோன் உரிமம், சேமிப்பு குளிர்பதன கிடங்குகள்.

தகுதி
விவசாயி, வர்த்தகர், விவசாய இடுபொருள் முகவர்

  • பொருட்களை உண்மையாக சேமிப்பு வைத்திருப்பவர்
  • இதர வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு மோசடி செய்யாமல் இருப்பவர்.

கடன் தொகை
பொருளின் மதிப்பு கழித்தில் குறிப்பிட்ட பொருளின் லாப அளவுத் தொகை (25 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் பொருளின் வேறுபடும் தன்மையைப் பொருத்து)

  1. விவசாயிகள்                    :      ரூ. 10 லட்சம்
  2. விவசாய இடுபொருள் முகவர்கள்  :      ரூ. 1 கோடி
  3. வர்த்தகர்                       :      ரூ. 5 கோடிகள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

4. ஒப்பந்த பண்ணையம்
ஆக்ஸிஸ் வங்கி விவசாயிகளுக்கு ஒப்பந்த பண்ணையம் முறையை நிறுவனத்துடன் வைத்திருப்போர்க்கு நிதி வழங்குகிறது.

தகுதி
விவசாயிகள் 8 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் விவசாய சாகுபடி நிலம் வைத்திருப்போர்.

கடன் தொகை
மாவட்ட அளவில் உள்ள முண்ணனி வங்கி கடன் வழங்கும் குழு அளிக்கும் முடிவைப் பொருத்து, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்திருத்தல் அல்லது வங்கி மற்றும் நிதி வழங்கும் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் முறை செய்து கொள்வது.

காலம்
பயிரின் காலம்      + 2 மாதங்கள்
பாதுகாப்பு

  • பயிரின் மீது கடன் பெறுதல்
  • நிறுவன உத்திரவாதம் / உதவியளிக்கும் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு கடிதம் பெற வேண்டும் (நிறுவன உத்திரவாதம் இல்லாத பொழுது)

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

5. சக்தியுள்ள தங்கம்

  1. விவசாயிகளுக்கு தங்க ஆபரணங்களை வைத்து அதன் மீது கடன் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் கவர்ச்சியான வட்டி விகிதம், குறைந்தபட்ச பதிவுபடுத்துதல், எளிதாகக் கடன் வழங்குதல், குறைந்தபட்ச அளவு மற்றும் எளிதாக திருப்பிச் செலுத்தும் பட்டியல்கள்.

தேவை

  1. விவசாயம் மற்றும் அதன் சார்ந்த செயல்களுக்கு உதவி அளித்தல்.

தகுதி

  1. தனிநபர் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் அல்லது அதன் சார்ந்த தொழில்கள்

கடன் தொகை
குறைந்தபட்சம்      :      ரூ. 10,000
அதிகபட்சம்        :      ரூ. 5,00,000

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

6. ஆர்தியா சக்தி
தேவை

  1. கடன் வசதிகள் முகவர் சேவை கட்டணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், முதலீட்டுப் பணத் தேவைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வாங்குவதற்கு வழங்குதல்.

தகுதி

  1. முகவர்கள் சந்தை வளாகம் / வாரியம் ஆகியவற்றில் தகுதியான உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. முகவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டிருப்போர்
  3. முகவர்கள் விவசாயிகளிடம் இருந்து பணம் பெறுதல், மண்டிகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்குவதற்கு கடனுதவி அளித்தல்.
  4. முகவர்கள் தங்களது வருமான வரித் தாக்கல் செய்துள்ளோர் அல்லது வரவு செலவுக் கணக்கை தணிக்கை செய்துள்ளோர்.

கடன் தொகை
குறைந்தபட்சம்      :      ரூ. 50,000
அதிகபட்சம்        :      ரூ. 40 லட்சங்கள்

திருப்பிச் செலுத்துதல்

  • திருப்பிச் செலுத்துதல் என்பது தேவையின் அடிப்படையில் வருடாந்திர மறு ஆய்வுக்கு உட்பட்டது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

7. கிராமப்புற கோடோன்கள்

  • நாங்கள் கோடோன் கட்டமைப்பு, மறு சீரமைப்பு மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றை கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளில் கவர்ச்சியான விகிதத்தில் கடன் வழங்குகிறோம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

8. கால்நடை சக்தி
கால்நடை கடன்களை விவசாயிகளுக்கு பால் பண்ணை மற்றும் கூட்டுறவு மூலம் கடன் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

  • பால் மாடுகள் வாங்குதல்
  • கால்நடைகளை வைப்பதற்கு கொட்டகை அமைத்தல்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

9. தோட்டக்கலை திட்டங்கள்
தோட்டக்கலை திட்டங்களுக்கு கடன்களை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் அங்கீகாரம் மூலம் மானியம் பெற்று வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.axisbank.com

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013