பாங்க் ஆப் பஞ்சாப்
- பச்சை உழவு உந்து நிதித் திட்டம்
- கிசான் டோஸ்ட் விவசாய நிதித் திட்டம்
- கிசான் டோஸ்ட் உழவு உந்து நிதித் திட்டம்
- இரண்டாம் தர உழவு உந்து வண்டி வாடகைக்கு விடுவதற்கு நிதியளிக்கும் திட்டம்.
- கிசான் டோஸ்ட் ஆப்ராரி திட்டம்
- கிசான் டோஸ்ட் இயந்திரமயமாக்கல் திட்டம்
- கிசான் டோஸ்ட் பண்ணை போக்குவரத்துத் திட்டம்
- கிசான் டோஸ்ட் எஸ்லாக் - இ - அராசி திட்டம்
- கிசான் டோஸ்ட் கால்நடை மேம்பாட்டுத் திட்டம்
- கிராமப்புற கால்நடை மூலம் கால்நடை இனவிருத்தி மேம்பாடு (VVW)
- கிசான் டோஸ்ட் வணிக வேளாண் சேவை நிதித் திட்டம்
- கிசான் டோஸ்ட் விவசாய மால் நிதித் திட்டம்
- கூட்டுப் பண்ணை நிதித் திட்டம்
- வணிக ரீதியில் வாடகைக்குச் செல்ல உழவு உந்து வண்டிக்கு நிதியளிக்கும் திட்டம்
- கொட்டகை மற்றும் இதர கட்டமைப்பு வேலைகளுக்கு கோரிக்கை நிதி
- தொடர்ச்சியான வாழ்க்கைக்கு நிலமற்ற மக்களுக்கு எருமை மாடுகள் வாங்க நிதியளித்தல்
- கறவை மாடுகள் வாங்குவதற்கு நிதியளித்தல்
- கால்நடை / கோழிப் பண்ணை மற்றும் மீன் பண்ணை நடத்துவதற்கு நிதியளித்தல்
- கிசான் டோஸ்ட் மாதிரி கால்நடை பண்ணை (PDDC)
1. உழவு உந்து வண்டி வாங்குவதற்கு பச்சை உழவு உந்து திட்டத்தின் கீழ் நிதியளித்தல் 2008-2009
தகுதி
- அனைத்து விவசாயிகளும், கணினி வாக்குப் பதிவு மூலம் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்பட்ட அனைவரும் தகுதியுடையவர்.
- விண்ணப்பதாரர் நிரந்தரமாகக் குடியிருப்பவராகவும், சுயமாக குறைந்தபட்சம் 5 ஏக்கர் விவசாய நிலம் எந்த ஆக்கிரமிப்புக்களும் இன்றி இருத்தல் வேண்டும். ஏற்கெனவே பி.ஓ.பி மூலம் வங்கி கடன் பெற்றிருப்போர் நிலம் வைத்திருப்பின், அவர்களும் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்.
- விண்ணப்பதாரர் எந்த நிதி நிறுவனத்திடமும் ஏமாற்றம் செய்தவராக இருத்தல் கூடாது.
உழவு உந்து வண்டியின் விலை
- சந்தையில் உள்ள மதிப்பை விட ரூ. 200000 /- குறைவாகவே விலை இருக்கும். ரூ. 200000 /- மானியமாக, பஞ்சாப் அரசால் நேரடியாக உழவு உந்து வண்டி தயாரிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
உழவு வண்டி தயாரிப்பாளர்
- M/s. மில்லட் டிராக்டர் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் அல்-காசி டிராக்டர் லிமிடெட் ஆகிய உள்ளூர் உழவு உந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பஞ்சாப் அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அங்கீகரித்துள்ளது.
திருப்பிச் செலுத்ததுல்
- 10 முறை, சமமாக அரை வருட தவணையில் ¦சலுத்த §வண்டும் (முதலீடு + வட்டி)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
2. கிசான் டோஸ்ட் அக்ரி நிதித் திட்டம்
தேவை
- விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் விதை, உரம், பூச்சிக் கொல்லி பூஞ்சான் கொல்லி ஆகியவற்றை வாங்குவதற்கு நிதி உதவி அளித்தல்.
தகுதி
விவசாய நிலம் குறைந்தபட்சம் 5 ஏக்கர், அதிகபட்சமாக 50 ஏக்கர் மற்றும் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்தல் வேண்டும். விண்ணப்பதாரர் வேறு வங்கியில் கடன் பெற்றருத்தல் கூடாது மற்றும் எந்த வில்லங்கமும் இருத்தல் கூடாது.
தொகை
அதிகபட்சமாக ரூ. 500000 ஒரு ஏக்கர் அளவு மற்றும் பயிரைப் பொருத்து.
திருப்பிச் செலுத்துதல்
- வருடத்திற்கு ஒரு முறை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
3. கிசான் டோஸ்ட் உழவு உந்து நிதித் திட்டம்
தேவை
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோருக்கும் (உழவு உந்து வண்டி வாடகைக்கு ஓட்டுபவர்கள் மற்றும் உழவு உந்து சம்மந்தமான வேலைகளுக்கு பயன்படுத்துவோர்) உழவு உந்து வண்டியை வாடகைக்கு நிதி அளவில் வழங்கப்படும்.
தகுதி
சொந்தமாக விவசாய நிலம் குறைந்தபட்சம் 5 ஏக்கர் மற்றும் அதிகபட்சமாக 50 ஏக்கர் வைத்திருப்போர்.
(அல்லது)
உழவு உந்து சம்பந்தமான விவசாய வேலைகள் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் ஈடுபடுவோர் அனைவரும் தகுதியுடையவர்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 750000
திருப்பிச் செலுத்துதல்
10 முறை சமமாக, அரை வருடத்திற்கு ஒரு முறை தவணை முறையில் செலுத்துதல் (5 வருடத்திற்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
4. இரண்டாம் தர உழவு உந்து வண்டி வாடகைக்கு விடுவதற்கு நிதியளிக்கும் திட்டம்
தேவை
உபயோகப்படுத்திய / இரண்டாம் தர உழவு உந்து வண்டி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கு வாங்குதல். உழவு உந்து வண்டி எந்தப் பிரச்சனையும் இன்றியும் மற்றும் அதன் வயது 3 வருடத்திற்கு மேலாகவும் இருத்தல் கூடாது மற்றும் நல்ல முறையில் நிர்வாகப்படுத்தி வருதல் வேண்டும்.
தகுதி
சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்போர் குறைந்தபட்சம் 5 ஏக்கர் மற்றும் அதிகபட்சம் 50 ஏக்கர் வைத்திருப்போர்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 400000
திருப்பிச் செலுத்துதல்
அரை வருட தவணை முறை (குறைந்தது இரண்டு மற்றும் அதிகபட்சம் ஆறு அரை வருடத் தவணைகள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
5. கிசான் டோஸ்ட் ஆப்ராசி திட்டம்
தேவை
ஆழ்குழாய் கிணறு அமைத்தல், விசைப்பொறி அமைத்தல்.
தகுதி
சொந்தமாக விவசாய நிலம் குறைந்த பட்சம் 5 ஏக்கர் மற்றும் அதிகபட்சமாக 50 ஏக்கர் வைத்திருப்போர்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 500000
சமநிலை தொகை
திட்டத் தொகையில் 20 சதவிகித தொகை கடன் வாங்கியவருக்கு வழங்கப்படும்.
திருப்பிச் செலுத்துதல்
8-10 தவணைகள் சமமாக அரை வருடத்திற்கு ஒரு முறை (4 முதல் 5 வருடங்களுக்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
6. கிசான் டோஸ்ட் இயந்திரமயமாக்கல் திட்டம்
தேவை
வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு (எ.கா) தள்ளுவண்டி, கதிர் அடிக்கும் இயந்திரம் ஆகியவை.
தகுதி
சொந்தமாக விவசாய நிலம் குறைந்தபட்சம் 5 ஏக்கர் மற்றும் அதிகபட்சமாக 50 ஏக்கர் வைத்திருப்போர்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 500000
திருப்பிச் செலுத்துதல்
தவணைகள் சமமாக அரையாண்டுக்கு ஒரு முறை ( 4 வருடத்திற்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
7. கிசான் டோஸ்ட் பண்ணை போக்குவரத்து திட்டம்
தேவை
விவசாயிகளுக்கு பண்ணை போக்குவரத்து இயந்திரங்கள் வாங்குவதற்கு நித உதவி அளித்தல். (எ.கா) சிறிய பிக் அப் வண்டிகள், குளிர் சாதன வசதியுடன் கூடிய வேன்கள்.
தொகை
அதிகபட்சமான ரூ. 500000
சமநிலை தொகை
வாகனத்தின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதம் வாங்குபவரால் செலுத்தப்படும்.
திருப்பிச் செலுத்துதல்
10 முறை சமமாக அரை வருடத்திற்கு ஒரு முறை தவணையாக செலுத்தவேண்டும். (5 வருடத்திற்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
- கிசான் டோஸ்ட் எஸ்லாக் – இ - அராசி திட்டம்
தேவை
விவசாயிகளுக்கு உபயோகமற்ற நிலத்தை பண்ணை வேலைகளுக்காக உபயோகம் உள்ளதாக மாற்றி, நிலத்தை சமன் செய்து, ஒளிக்கதிர் கொண்டு சமன் செய்தல், நிலத்தை மேம்படுத்துதல், காடுகளை சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தை சீரமைத்தல்.
தகுதி
சொந்தமாக நிலம் குறைந்தபட்சம் 5 ஏக்கர் மற்றும் அதிகபட்சமாக 50 ஏக்கர் வைத்திருப்போர்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 500000
திருப்பிச் செலுத்துதல்
8-10 முறை சமமாக அரையாண்டுக்கு ஒரு முறை தவணைகளில் செலுத்துதல் (4 முதல் 5 வருடத்திற்குள்)
9. கிசான் டோஸ்ட் கால்நடை மேம்பாட்டுத் திட்டம்
தேவை
கால்நடைகள் (பால், இறைச்சி உற்பத்தி, கால்நடை பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை) வாங்குவதற்கு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் (சுயமாக கால்நடைப் பண்ணை / மீன் பண்ணை வணிக ரீதியில் வைத்திருப்போர்) ஆகியோருக்கு நிதி உதவி வசதிகள் செய்து தருதல்.
தகுதி
கால்நடை பண்ணை, பால் பண்ணை, ஆட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை ஆகியவற்றை நடத்துவதற்கு போதுமான முன் அனுபவம் பெற்றிருத்தல். பால் உற்பத்திக்கு வணிக ரீதியில் பால் பண்ணை சுயமாக நடத்தும் நபர்களுக்கு கடன் வழங்கப்படும். விண்ணப்பதாரர், அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தேவையான தகுந்த முன் ஏற்பாடுகள் செய்திருத்தல் வேண்டும்.
(எ.கா) பால் பதப்படுத்தும் நிறுவனத்துடன் பால் கொடுப்பதற்கான ஒப்பந்தம்.
தொகை
கால்நடைகளின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் வழங்கப்படும். (50 சதவிகிதம் வரை அதிகப்படியான வசதிகள் சொத்து மதிப்பின் செலவில் இருந்து வழங்கப்படும்).
திருப்பிச் செலுத்துதல்
16 முறை சமமாக காலாண்டுக்கு ஒரு முறை தவணை முறையில் 4 வருடங்களில் செலுத்த வேண்டும். இதில் ஒரு வருட வறட்சி காலமும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
10. கால்நடைத் திட்டம்
கிராம கால்நடை மூலம் கால்நடை இனவிருத்தி மேம்பாட்டுக்கு நிதி உதவி (VVW)
தேவை
கிராம கால்நடை வேலையில் ஈடுபட்டிருப்§பார் (கால்நடை மற்றும் பால் வள மேம்பாட்டுத் துறை மூலம் பயிற்சி பெற்றோர்), செயற்கை கருவூட்டல் முறைக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி ஆகியவற்றிற்கு கடன் உதவி அளித்தல்.
தகுதி
அதிகபட்சமாக ரூ. 45,000/- அல்லது சைக்கிள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் விலையில் 90 சதவிகிதம் தொகை.
திருப்பிச் செலுத்துதல்
மாதத் தவணை சமமாக அல்லது காலாண்டு தவணை மூலம் செலுத்த வேண்டும். (5 ஆண்டுக்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
- கிசான் டோஸ்ட் வணிக வேளாண் சேவை நிதித் திட்டம்
தேவை
வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களான உழவு உந்து இழுவை வண்டி அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியவை விவசாயிகளுக்கு வேளாண் சேவை வழங்குகின்றது.
தகுதி
வங்கி கடன் மற்றும் இதர நிதி நிறுவனங்களுடன் நல்ல பதிவுகள் வணிக ரீதியில் வைத்திருப்போர் இதற்குத் தகுதியுடையவர்கள்.
தொகை
உபகரணங்கள் / இயந்திரங்களின் மதிப்பில் 80 சதவிகிதம் மேல் செல்லக்கூடாது.
திருப்பிச் செலுத்துதல்
சமமாக காலாண்டு தவணைகளில் செலுத்த வேண்டும் ( 5 வருடத்திற்குள்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
12. கிசான் டோஸ்ட் விவசாய மால் நிதித் திட்டம்
நிதியின் தேவை
இந்தியாவில் மிகப் பெரிய புகழ் பெற்ற நிறுவனங்களான M/s அலி அக்பர் குழு, மில்லிட் டிராக்டர்ஸ் பி.எஸ்.ஓ, எக்ரோ சர்வீஸஸ் அனைத்தும் இணைந்து “அக்ரிமால் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் விவசாய சேவைகளை அதன் உரிமத்தை பல்வேறு நபர்களுக்கு அளித்து செய்து வருகிறது.
அந்த உரிமங்களின் பயனாளி விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு உற்பத்திக் கடன்களை வங்கி கிசான் டோஸ்ட் விவசாய நிதித் திட்டம் மூலம் கடன் வழங்கப்படும்.
விதிமுறைகளும் நிபந்தனைகளும்
வசதியின் வகை |
நிதியின் தேவை |
காலம் |
சமபங்கு / லாபம் |
வட்டி |
நிதியின் தேவை அதிகபட்ச அளவு ரூ. 2.5 (மி) |
கட்டிட கட்டுமானம் |
5 வருடங்கள் |
25 சதவிகிதம் |
சராசரி 6 மாதங்கள் KIBOR + 350 bps 8 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு |
வாடகை நிதி அதிகபட்ச அளவு ரூ. 1.5 (மி) |
இயந்திரம் / உபகரணம் வாங்குதல் |
5 வருடங்கள் |
25 சதவிகிதம் |
சராசரி 6 மாதங்கள் KIBOR+350 bps 8.5 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு
சராசரி 6 மாதங்கள்
KIBOR + 450 bps
8.00 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு |
நடந்து கொண்டிருக்கும் அதிகபட்ச நிதி அளவு ரூ. 10 (மி) |
உரம், விதை, பூச்சிக்கொல்லி, டீசல், எண்ணெய் மற்றும் உழவு உந்து பாகங்கள். |
ஒரு வருடம் திரும்பவும் பெறக் கூடியது |
20 சதவிகிதம் |
வங்கியின் கட்டண அட்டவணையைப் பொருத்து. |
ஆதார அளவு அதிகபட்சமாக ரூ. 5.0 (மி) |
தாய் நிறுவனங்களிடம் இருந்து பங்குகளை கடன் வாங்குவதற்கு L/G வழங்குதல் |
1 வருடம் திரும்பவும் பெறக் கூடியது. |
25 சதவிகிதம் |
|
13. கூட்டு பண்ணை நிதித் திட்டம்
I - நிதி சார்ந்த வசதிகள்
கீழ்க்கண்ட நிதி சார்ந்த வசதிகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
- விவசாய நிதி வசதி (பயிர் இடுபொருட்களுக்கான விதை, உரம், பூச்சிக் கொல்லி, பூஞ்சாண் கொல்லி ஆகியவை வாங்குதல்).
- உழவு உந்து நிதி வசதி (இரண்டு உழவு உந்து வண்டி வாங்க, வாடகைக்கு ¦சல்வதற்கு கடன் வசதி வழங்குதல்)
- பண்ணை இயந்திரமயமாக்கலுக்கு நிதி அளித்தல் (பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் வாங்குவதற்கு கடன் உதவிகள் வழங்குதல்).
- பண்ணை பாசனத்திற்கு நிதி அளித்தல் (ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் மற்றும் நவீன பாசன வசதிகள் அமைக்க நிதி அளித்தல்).
- பண்ணை போக்குவரத்துக்கு நிதி அளித்தல் ( சிறு பிக் அப் வேன்கள் மற்றும் சுமந்து செல்வதற்கு §பாக்குவரத்து வசதிக்கு நிதி அளித்தல்).
- கால்நடை மேம்பாட்டிற்கு நிதி அளித்தல் (பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை அமைக்க கால்நடைகள் வாங்குதல்).
- இஸ்லா - இ - அராசிக்கு நிதி அளித்தல் (நில மேம்படுத்துதல், சீரமைத்தல்)
மேற்கூறிய அனைத்து வசதிகளும் ஒரு தொகுப்பு ஒப்பந்தம் போல் வழங்கப்பட்டுள்ளது.
II - நிதி சாரா வசதிகள்
- கூட்டுப் பண்ணையத்திற்கு பண்ணை சார்ந்த வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடன் கடிதங்களை வெளியிடுதல் (எ.கா) இடுபொருட்கள், இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை.
- பண்ணை சார்ந்த பொருட்கள் வாங்குவதற்கு வங்கி ஆதாரக் கடிதங்களை வாங்குதல் (எ.கா) இடுபொருட்கள், இயந்திரம், உபகரணங்கள் கருவிகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை.
தகுதி
- சொந்த நிலம் வைத்து கூட்டுப் பண்ணையம் குறைந்த பட்சம் 50 ஏக்கருக்கு குறையாமல் விவசாயம் செய்வோர்.
- சொந்த நிலம் அல்லது வாடகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வோர் மொத்த பண்ணை பகுதிகளின் அளவு குறைந்த பட்சம் 50 ஏக்கருக்கு குறைவாக இருத்தல் கூடாது. வாடகைக்கு எடுத்துள்ள நிலத்தின் பகுதிகள் ஒப்பந்தம் செல்லுபடியானதாகவும் மற்றும் காரணங்களுடன் கூடிய காலமாகவும் இருத்தல் வேண்டும்.
- வாடகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வோர் குறிப்பிட்ட ஒப்பந்தம் தகுந்த காரணங்களுடன் கூடிய காலத்தில் குறைந்தபட்சம் 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு குறைவாக இருத்தல் கூடாது.
கீழ் உள்ள நபர்கள் மேற்கூறிய திட்டத்திற்குத் தகுதியில்லாதவர்கள்.
- விண்ணப்பதாரர் உண்மையான விவசாயியாக இல்லாமல் இருப்பின்
- விண்ணப்பதாரரின் பெயர் வருமானப் பதிவுகளில் இடம் பெறாமல் இருப்பின்
- விண்ணப்பதாரர் தகுந்த பாதுகாப்பு ஆவணம் / பதிவு புத்தகம் கொடுக்க இயலாதவராக இருப்பின்.
வசதிகளின் தொகை
பாதுகாப்புக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பின் அளவைப் பொருத்தே வசதியின் தொகையும் அமையும் மற்றும் வருங்கால பண அளவுகள் வரும் வாய்ப்புகளைப் பொருத்து அதன் தொகையும் முதலீடு செய்யப்படும்.
எதிர்கால பண அளவுகளை மதிப்பீடு செய்ய கீழ்க்கண்ட முறைகளை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
- விண்ணப்பதாரரின் கடந்த மூன்று ஆண்டில் பண்ணை விவசாயத்தில் இருந்து எடுத்த வெளியீடுகள்.
- பண்ணையில் இருந்து வருங்காலத்தில் எதிர்ப்பார்க்கப்பட்ட குறியீடுகள்.
- திட்டத்தின் முழுமையான சாத்தியக்கூறு அறிக்கை.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
14. வணிக ரீதியில் வாடகைக்குச் செல்ல உழவு உந்து வண்டிக்கு நிதியளிக்கும் திட்டம்
தேவை
- வேளாண் சார்ந்த வேலைகளுக்குப் பயன்படுத்த உழவு உந்து வண்டி வாங்குதல்.
தகுதி
- விவசாயிகள், சுயதொழில் முனைவோர் / நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர்.
நிதியின் தொகை
- நிதி உதவி உழவு உந்து வாங்கும் தொகையில் 80 சதவிகிதம் அளவு வழங்கப்படும் மற்றும் கடன் பெறுபவர் 20 சதவிகிதம் தொகையை அதன் மொத்த விலையில் அளிக்க வேண்டும்.
ஆவணப்படுத்துதல்
விண்ணப்பங்கள் அனைத்தும் விவசாய விண்ணப்ப படிவங்களில் எழுதி வைக்கப்படும். ACO மற்றும் கிளை மேலாளர்கள் அதை மற்ற விவசாய கடன் திட்டத்தில் போல் உள்ளதா என்று சரிபார்த்தல் செய்யவேண்டும். அனைத்து செலவு ஆவணங்களும் ஒப்பந்த நிதி உழவு உந்து திட்டத்தின் படி பெற்று இதனுடன் 60 தேதி குறிப்பிட்ட காசோலைகளையும் பெற்றுக் கொள்வர்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
15. கொட்டகை மற்றும் இதரக் கட்டமைப்பு வேலைகளுக்கு கோரிக்கை நிதி
தேவை
- கால்நடை கொட்டகைகள் மற்றும் இதர கட்டிட வேலைகளுக்குத் தேவையான கடன் வசதிகளுக்கு நிதி பெறுதல்.
தகுதி
- விண்ணப்பதாரர் பால் பண்ணை கட்டுவதற்கு தகுந்த நிலத்தை வைத்திருத்தல் வேண்டும்.
தொகை
- வங்கி மற்றும் PBA அங்கீகரித்த நில ஆய்வாளர்கள் மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மொத்த தொகையில் 70 சதவிகிதம் தொகை வழங்கப்படும்.
திருப்பிச் செலுத்துதல்
- 16 முறை சமமாக காலாண்டு தவணைகள் (அசல் தொகை மற்றும் வட்டி) ஒரு வருட கருணை காலத்திற்குப் பிறகு செலுத்துதல்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
16. தொடர்ச்சியான வாழ்க்கைக்கு நிலமற்ற மக்களுக்கு எருமை மாடுகள் வாங்க நிதியளித்தல்.
தேவை
- நிலமற்ற மக்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வசதி வழங்குதல்.
தகுதி
- விண்ணப்பதாரர் கால்நடைகளை வைத்திருப்பதற்குப் போதுமான இடம் வைத்திருத்தல் வேண்டும்.
தொகை
- அதிகபட்சமாக ரூ. 50,000 வங்கிக்கு தனிப்பட்ட முறையில் ஆதாரம் வழங்கவேண்டும்.
திருப்பிச் செலுத்துதல்
- 20 முறை சமமான காலாண்டு தவணைகள் (அசல் மற்றும் வட்டி 5 வருடங்களில்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
17. கறவை மாடுகள் வாங்குவதற்கு நிதி அளித்தல்
தேவை
- பால் பண்ணை அமைப்பதற்கு கறவை மாடுகள் வாங்குவதற்கு நிதி உதவி வசதிகள் அளித்தல்.
தகுதி
- விண்ணப்பதாரர் கால்நடை பண்ணை வைப்பதற்கு நல்ல கட்டமைப்பு வசதிகளையும், விந்து உற்பத்தி செயலகம் ஆகியவற்றிற்கு நல்ல அனுபவம் ¦பற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
தொகை
- மொத்த சொத்தின் செலவில் 80 சதவிகிதம் அளவு கடன் வழங்கப்படும் (கால்நடை), உபகரணங்கள் / வாகனங்கள் / இயந்திரங்கள் (அதிகபட்ச வசதிகள் மொத்த சொத்தின் விலையில் 50 சதவிகிதம் அளவு வழங்கப்படும்).
திருப்பிச் செலுத்துதல்
- 20 முறை சமமாக காலாண்டு தவணைகளில் (அசல் மற்றும் வட்டி) 5 வருடங்களில் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
18. கால்நடை / கோழிப் பண்ணை மற்றும் மீன் பண்ணை நடத்துவதற்கு நிதியளித்தல்
தேவை
கால்நடைகள் வாங்குதல், தீவனச் செலவுகள், மருந்துகள் மற்றும் இதர பண்ணை நடத்த தேவையான செலவினங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி வசதிகள் செய்து கொடுத்தல். கீழ்கண்ட கால்நடைகள் மாதிரி போல் நடத்த நிதி வசதிகளை செய்து கொடுக்கப்படும்.
பண்ணைகள்
- கன்றுகள் வளர்க்கும் பண்ணை
- கறி கோழிப் பண்ணை
- முட்டை கோழிப் பண்ணை
- மீன் பண்ணை
- விந்து உற்பத்தி செயலகம்.
தகுதி
- விண்ணப்பதாரர் நல்ல அனுபவம் உள்ளவராகவும் மற்றும் கால்நடை பண்ணை, விந்து உற்பத்தி செயலகம் ஆகியவை நல்ல முறையில் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
தொகை
- நிதித் தேவையில் 70 சதவிகிதம் வரை மொத்த செலவு தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
19. கிசான் டோஸ்ட் மாதிரி கால்நடை பண்ணை (PDDC)
தேவை
பால் பண்ணை இயந்திரம் வாங்குதல் மற்றும் பண்ணை உள்கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றிற்கு கடன் வசதி அளித்தல், கீழ்க்கண்ட பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பண்ணை குளிர்பதன தொட்டிகள்
- தீவனப்பயிர்கள் அறுவடை இயந்திரம்
- வைக்கோல் வேக வைக்கும் இயந்திரம்
- கால்நடைகளை குளிர்விக்கும் முறைகள்
- பண்ணை தரம் உயர்த்துவதற்கு மற்ற இயந்திரங்கள் / கருவிகள் தேவைகளை PDDC யின் அறிவுரை படி வாங்குதல்.
தகுதி
- விண்ணப்பதாரர் சொந்தமாகவோ / வாடகைக்கு பால் பண்ணை வைத்திருக்க வேண்டும்.
- PDDC மூலம் பரிந்துரைக்கப் பட்டிருக்க வேண்டும்.
தொகை
- வங்கி 70 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை அதன் சொத்து மதிப்பைப் பொருத்து கடன் வழங்கும் (வகையைப் பொருத்து).
திருப்பிச் செலுத்துதல்
- சமமாக மாதம் / காலாண்டுக்கு ஒரு முறை தவணைகளில் செலுத்தவேண்டும். (அசல் தொகை மட்டும்)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.bop.com
|