வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட்

  1. உழவு உந்து கடன்
  2. வாழை சாகுபடி

1. உழவு உந்து கடன்
உழவு உந்து மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான கடன்கள்.

தகுதி
தனிநபர் / கூட்டு, தனி உரிமையுள்ள நிறுவனம், கூட்டு நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள், லிமிடெட் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சட்ட உட்பொருள்கள்.

நில அளவுகள்
குறைந்தபட்சம் 2 ஏக்கர் பாசன நிலம் / 4 ஏக்கர் வறண்ட நிலம் (முழுவதும் சாகுபடிக்கு ஏற்றவை) அனைத்தும் பொருளதார ரீதியில் லாகபரமாக இருத்தல்வேண்டும்.

திருப்பிச் செலுத்துதல்
திருப்பிச் செலுத்தும் காலம் பயிரின் அமைப்புகள் / சாகுபடி பருவக்காலம் மற்றும் வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 9 வருடங்கள் வரை.

வட்டி விகிதம்

  1. பி.எல்.ஆர் 1.50 சதவிகிதம் (13.50 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு)
  2. தற்போது முக்கியமாக வழங்கும் வட்டி விகிதம் (பி.எல்.ஆர்) 15.00 சதவிகிதம் வருடம் ஒன்றிற்கு.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. வாழை சாகுபடி
தேவை
கூட்டு தவணை கடன்கள் பருவகால வேலைகள் செய்வதற்குத் தேவையான செலவுகள் முதலீடு, மற்றும் அன்றாட செலவுகளான உரங்கள், பூச்சிக்கொல்லி, பாசன செலவுகள், வேலையாட்கள் செலவுகள் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல் மற்றும் இதர முதலீடுகள்.

தகுதி

  • விண்ணப்பதாரர் சொந்த நிலம் வைத்து சாகுபடி செய்பவர் அல்லது வாடகைக்கு நிலத்தை எடுத்து சாகுபடி செய்பவராக இருத்தல் வேண்டும்.
  • கூட்டு தவணை கடன் திட்டங்கள் லாபகரமான சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளுக்கு கடன் வழங்குதல்.
  • விண்ணப்பதாரர் எந்த நிதி நிறுவனத்திற்கும் ஏமாற்றாமல் மற்றும் பொதுவாக வெளிப்புற கடன்கள் இன்றியும் இருத்தல் வேண்டும்.
  • வாடகைக்கு நிலம் எடுத்து சாகுபடி செய்பவர், நிலத்தை வைத்திருப்பதற்கான ஆவணம் மற்றும் சாகுபடி செய்வதற்கான அத்தாட்சியை வருவாய் அதிகாரிகளிடம் பெற்று  மற்றும் அதில் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார் என்பதும் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • நில அளவு வரைவுகள் அரசு குறிப்பிட்ட நில அளவு வரைவு விதிகளின் படி இருத்தல்வேண்டும்.
  • கூட்டு தவணை கடன்கள், பாசனம் மற்றும் மானாவாரிப் பகுதிகள் இரண்டிற்கும் வழங்கப்படும்.
  • கூட்டு தவணை கடன்கள், கடன் இல்லை என்ற சான்றிதழ் இதர வங்கிகளிடம் இருந்து பெறுதல் வேண்டும். இந்த சான்றிதழ் அணுகிய நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு மேல் அதிகமாக இருத்தல் கூடாது.

கடன் அளவு
தவணை கடன் ரூ. 45,000/- ஒரு ஏக்கருக்கு அல்லது வாழை சாகுபடி செலவில் திசு வளர்ப்பு முறை, சொட்டு நீர் உபகரணங்கள் மற்றும் இதர முதலீடுகள் ஆகியவற்றின் செலவுகளில் 60 சதவிகிதம் தொகை வழங்கப்படும்.

அளவு
40 சதவிகிதம்.

திருப்பிச் செலுத்துதல்
3 முறை வருட தவணைகள், இதை அறுவடை மற்றும் பொருட்களை சந்தைப் படுத்துதலுடன் இணைக்க வேண்டும்.

வட்டி விகிதம்

  1. பி.எல்.ஆர் - 4 சதவிகிதம் (11.00 சதவிகிதம் ஒரு ஆண்டுக்கு) ரூ. 50,000 வரை உள்ள கடன்களுக்கு.
  1. பி.எல்.ஆர் -  2.50  சதவிகிதம் (12.50 சதவிகிதம் ஒரு ஆண்டுக்கு) ரூ. 50,000 முதல்
  2. 2 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு
  3. பி.எல்.ஆர் - 1.25 சதவிகிதம் (13.75 சதவிகிதம் ஒரு ஆண்டுக்கு) ரூ. 2 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு
  4. தற்போது முக்கியமாக வழங்கும் வட்டி விகிதம் 15 சதவிகிதம் ஒரு ஆண்டுக்கு

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்

ஆதாரம் http://www.tmb.in

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013