வங்கி மற்றும் கடன் ::தனியார் வங்கிகள்

ராஜஸ்தான் வங்கி

  1. DRS SME திட்டம்
  2. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) கடன் வசதிகள்.
  3. ஏற்றுமதியாளர்களுக்கு தங்க அட்டைத் திட்டம்

1. DRS SME திட்டம்
கடன்  மறுகட்டமைப்பாக்கும் முறை : சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME)  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளடக்கியவை.

  • குறுந்தொழில்கள், சிறு அளவிலான தொழில்கள் (SSI), நடுத்தர தொழில்கள் மற்றும் சிறு சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள்.

தகுதி அடிப்படைகள்
கீழ்க்கண்ட வளமுள்ள சிறு மற்றும்  நடுத்தர நிறுவனங்கள் தகுதியுடையவை. அனைத்து நிறுவனங்கள் அல்லாத சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதன் வங்கி கடன்களைப் பொருட்படுத்தாமல் சேர்ப்பது.

  • அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கடன் வசதிகள் ஒரே வங்கியிடம் இருந்து பெற்றுக் கொண்டு மற்றும் அதன் வங்கி கடன் அளவுகளைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கும் நிறுவனங்கள் தகுதியுடையவை.
  • பலவகை / கூட்டமைப்பு வங்கியியல் ஏற்பாடுகளில் அதன் அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி அல்லது நிதி வழங்காத நிலுவைகள் ரூ. 10 கோடிகள். கணக்குகளில் மோசடி / தவறுகள் அனைத்தும் சொத்துக்கள் இழப்பீடு ஆகியவை மறு கட்டமைப்பு வசதிகளுக்கு இதன் வழிகாட்டுதல் தகுதி உடையவை அல்ல.

தாங்கும் திறன்

  • செயலகம் 7 வருடங்களில் தகுதியுடனும் லாபம் அடைந்திருத்தல் வேண்டும். கடன் பாக்கியை திருப்பிச் செலுத்துவதற்கு 10 வருடத்திற்கு மேல் செல்லக் கூடாது.
  • அசல் மற்றும் சிறு வட்டிகளை எந்த வகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை

குறிப்பு

  • நிறுவனத்தின் செயல்பாடுகள் மறு ஆய்வு செய்யும் பொழுது அதன் வட்டி விகிதம் தற்போது நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் ஆகியவற்றைப் பார்த்து ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறையும் மாறுதல் அடைந்து கொண்டே வரும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SNE) கடன் வசதிகள் அளித்தல்

குறுந்தொழில்கள்
இதில் இயந்திரங்கள் மற்றும் செயல்கலன் அமைப்பதற்கு ரூ. 2.5 லட்சம் வரை முதலீடுகள் தேவைப்படும்.

சிறு அளவிலான தொழில்கள்

  • இதில் இயந்திரங்கள் மற்றும் செயல்கலன் அமைப்பதற்கு ரூ. 100 லட்சம் முதல் ரூ. 500 லட்சம் வரை முதலீடுகள் தேவைப்படும். அதில் குறிப்பிட்ட சில பொருட்களான கை, கால்களுக்கு அணியும் ஆபரணங்கள், கை கருவிகள், மருந்துகள், மருந்துக் கடைகள், உபயோகப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப்  பொருட்கள் அல்லது இதர பொருட்கள் மத்திய அரசு மூலம் அவ்வப்பொழுது தகுதிகளை குறிப்பிடுவர்.

நடுத்தர நிறுவனங்கள்
முதலீட்டு அளவுகள் சிறு அளவிலான தொழில்களுக்கான அளவுகளுக்கு மேல் (அதாவது ரூ. 100 அல்லது ரூ. 500 லட்சத்திற்கும் மேல்) மற்றும் இயந்திரங்கள் ஆகியவை அமைப்பதற்கு ரூ. 1000 லட்சம் வரை வழங்கப்படும்.

சிறு சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள்

  • தொழில் தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ரூ. 100 லட்சம் வரை முதலீடுகள் நிலையான சொத்தில் செய்யப்படும். இதில் நிலம் மற்றும் கட்டிடம் அனைத்தும் சிறு தொழில் துறைகள் மூலம் பெறத் தகுதியானவை.

கூட்டுப் பாதுகாப்பு
கூட்டுப் பாதுகாப்பு இன்றி ரூ. 5.00 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படும். ஆனால் அந்த நாள் பதிவுகளும் மற்றும் நிதி நிலைமையும் பெற்றிருக்க வேண்டும்.
இணையான கடன்
இதன் மூலம் ரூ. 100 லட்சம் வரை சிறு அளவிலான தொழில் துறை செயலகங்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பு : வட்டி விகிதம் நேரத்திற்கு தகுந்தது போல் மாறுபடும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

3. ஏற்றுமதியாளர்களுக்கு தங்க அட்டைத் திட்டம்
ராஜ் வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கான தங்க அட்டைத் திட்டம்
திட்டத்தின் குறிக்கோள்

  • ஏற்றுமதியை ஊக்குவிக்க, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் நல்ல பதிவுகளை வைத்திருப்போர்களுக்கு ஏற்றுமதி கடன்களை சில விதிமுறைகளும் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறப்பான சேவைகளை செய்ய இத்திட்டம் உதவுகிறது.

தகுதியின்  அடிப்படைகள்
ஏற்றுமதியாளர்கள், கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியுடையோர் மற்றும் நல்ல பதிவுகளை பெற்றிருப்போர். ஏற்றுமதியாளர்கள் தங்களது கணக்கில் தரமானவை என்று கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பெற்றிருப்பின் மற்றும் எந்தத் தவறுகள் / வேறு மாதிரியான செயல்கள் அந்த கணக்குகளில் இல்லாமல் இருப்பின், அவர்கள் தகுதியுடையவர்கள்.
சிறு மற்றும் நடுத்தர துறைகள் உள்ள ஏற்றுமதியாளர்கள், மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்தி செய்வோர் அனைவரும் தகுதியுடைவர்களாவர்.
ஏற்றுமதியாளர்கள் ECGC இந்தியா லிமிடெட் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளோர் அல்லது ஆர்.பி.ஐ (RBI) யின் தவறு செய்தோர் பட்டியலில் இருப்போர் / எச்சரிக்கை பட்டியலில் உள்ளோர் கடந்த மூன்று வருடங்களாக நஷ்டத்தை ஏற்படுத்துவோர் அல்லது நடப்பு ஆண்டு கணக்கில் 10 சதவிகிதம் ஏற்றுமதிக் கட்டணத்தில் பாக்கி இருப்பின் அவர்கள் இந்த தங்க அட்டைத் திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியில்லாதவர் ஆவர்.
கூட்டு சலுகைகள்

  • தரகர் கட்டணத்தில் சலுகைகள், அன்னியச் செலாவணியில் மாற்றம், இதரக் கட்டணங்களில் சலுகைகள் ஆகியவை.
  • சர்வதேச பற்று அட்டை / வரவு (ATM) அட்டை, எங்கிருந்து வேண்டுமானாலும் வங்கியை பயன்படுத்தும் விதிகள், டீமேட் கணக்குகள், பயனிப்போர் காசோலை விற்பதில் கிடைக்கும் முகவர் சேவைக் கட்டணத்தை தள்ளுபடி செய்தல் ஆகியவை.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.bankofrajasthan.com/bor/wcms/en/home/index.html

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013