தனலட்சுமி வங்கி
- தனம் கிசான் வாகனா
- தனம் கிசான் அட்டை
1. தனம் கிசான் வாகனா
தேவை
- விவசாயிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு நிதியளித்தல்.
- போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தி, நேரத்தை சேமித்து, போக்குவரத்து செலவுகளை குறைத்தல்.
- வேளாண் இடுபொருட்களை தகுந்த நேரத்தில் வகைப்படுத்தி வைப்பதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்.
- போக்குவரத்து வசதிகள் மேம்படுத்துவதன் மூலம் அழுகும் பொருட்கள் வீணாவதைக் குறைத்தல்.
- பண்ணையில் விற்பதை விட சந்தையில் கொண்டு சென்று விற்பனை ¦சய்வதன் மூலம் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
- விவசாய வேலைகளை நன்றாகக் கவனிக்க உறுதுணை செய்கிறது.
தகுதி
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
- பால் பண்ணை வைத்து குறைந்த பட்சம் 10 மாடுகள் / எருமைகள் வைத்திருத்தல் வேண்டும்.
- குடும்பத்தில் விவசாயம் / அதன் மூலம் வரும் நிகர வருவாய் ஆண்டுக்கு ரூ. 50,000 - க்கு மேல் இருத்தல் வேண்டும். இதில் அந்த குடும்பத்தில் கணவன் / மனைவி பெயர் பெற்ற நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராக அல்லது / அமைப்பு / அரசு / கல்வி நிறுவனம் மற்றும் அந்த நபர் கடனுக்கு கூட்டாளியாக இருத்தல் வேண்டும்.
கடன் தொகை
- குறைந்தபட்ச தொகை - ரூ. 20,000
- அதிகபட்ச தொகை - ரூ. 40,000
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
2. தனம் கிசான் அட்டை
தேவை
- விவசாயிகளுக்குத் தேவையான மொத்த கடன் தேவைகளை தகுந்த நேரத்தில் தேவையான அளவில் அனைத்து பண்ணை அணுகுமுறைகளுக்கும் சிறு தவணை கடன் தேவைகள் மற்றும் இதர கடன் தேவைகள் அனைத்திற்கும் ஒரு குடையின் கீழ் வழங்கப்படும்.
தகுதி
இத்திட்டத்தின் கீழ் உள்ள கடன் வசதிகள் தவணை கடன் மற்றும் சுழல் கடன் நிதியாக விவசாய மற்றும் தேவைகளுக்கு வழங்கப்பட்டன. தனம் கிசான் அட்டை வழங்குவதற்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் கீழ்க்கண்ட முறைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- தனிப்பட்ட விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்திருப்போர் மற்றும் வாடகைக்கு நிலத்தை உழுவோர் ஆகியோர்க்கு கடன் தேவைகள் ரூ. 5000 -க்கு மேல் தேவைப்பட்டால் மற்றும் வங்கியுடன் நல்ல பதிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பின், அவர்களுக்கு வழங்கப்படும்.
- நபர் எந்த நிதி நிறுவனத்திடமும் மோசடிகள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
- கடன் பெறுபவர் சேவைப் பகுதிக்குள் வருபவராகவும் மற்றும் குறிப்பிட்ட விலக்குகளில் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடு பொருட்கள், சிறுபான்மையோர், பி.ஓ.ஏ உள்ளவர்கள், மோசடி செய்தோர் ஆகியோர்க்கு தனம் கிசான் அட்டை வழங்கப்பட மாட்டாது.
- கடன்கள் விவசாய உற்பத்தி தேவைக் கடன், முதலீட்டுப் பண தேவைகள் மற்றும் இதர செயல்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் திருப்பிச் செலுத்தும் தகுதியைப் பொருத்து வழங்கப்படும்.
- புதிதாகக் கடன் பெறுவோர் வங்கிக் கிளை மேலாளர்களின் அறிவுக்கு ஏற்றவாறு அனைத்தையும் பார்த்து பின் வழங்கப்படும்.
அட்டை வழங்குதல்
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவோர்க்கு கடன் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம், தனியாக இத்தேவைக்காக வடிவமைக்கப்பட்டது. பெயர், முகவரி, நில அளவுகள், கடன் பெற்ற அளவுகள் செல்லுபடியாகும் கால அளவு இவை அனைத்தும் அனைத்தையும் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப்படும். இந்த அட்டை மற்றவரிடத்தில், கடவுசீட்டு அளவு புகைப்படம் வைத்திருப்பவரைப் போன்று காணப்படும். கடன் வாங்குபவர் அவரது கணக்கை இயக்கும் பொழுது அதன் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும்.
கடன் தொகை
- குறைந்தபட்ச கடன் அளவு ரூ. 5,000
- அதிகபட்ச தொகைக்கு எந்த அளவும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.dhanbank.com
|