வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

பெடரல் வங்கி

  1. விவசாய நடமாடும் கடன் திட்டம்
  2. பெடரல் கிசான் அட்டை
  3. கோடோன் கடன்  திட்டம்

1. விவசாய நடமாடும் கடன் திட்டம்

தகுதி

I - விவசாயிகள்
விவசாயிகள் குறைந்தபட்சம் 1 எக்டர் (2.50 ஏக்கர்) சொந்தமாக மலைப் பயிர்கள் சாகுபடி மற்றும் 1 எக்டர் (2.50 ஏக்கர்) கூட்டாக சேர்ந்து நடத்தி வருபவர்கள். மொத்தமாக 2 எக்டர் (5 ஏக்கர்) மற்றும் சாதகமான டி.எஸ்.சி.ஆர் 1 முதல் 1.50.

II - மற்றவர்கள்
விவசாயம் சார்ந்த இதர செயல்களான உரங்கள் / பூச்சிக்கொல்லி / வேளாண் கருவிகள் முகவர்கள் மற்றும் பாசன உபகரணங்களான சொட்டு நீர் / தெளிப்பு நீர் பாசன முறைகளில் முகவர்கள் வைத்திருப்போர் சாதகமான டி.எஸ்.சி.ஆர் 1 முதல் 1.50.

காலம்
7 ஆண்டுகள் வரை

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. பெடரல் கிசான் அட்டை
பெடரல் வங்கி புதுமையான திட்டத்தை அனைத்து விவசாய கடன் தேவைகளுக்கும் இணக்கமுள்ளவாறு, நல்ல வளமுள்ள திட்டமாக “பெடரல் கிசான் அட்டையை” அறிமுகப்படுத்தியுள்ளது.

தேவை
பெடரல் கிசான் அட்டைகள் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தித் தேவைகள் மற்றும் பண்ணை சாரா தேவைகளான இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் இதர சிறு தவணை தேவைகள், முதலீட்டுப் பணத் தேவைகள், அதன் சார்ந்த செயல்களுக்கு இணக்கமுள்ளவாறும் பணத்திற்குத் தகுந்தது போலும் பெற உதவி செய்துள்ளது.

தகுதி
சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அல்லது விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் பெடரல் கிசான் அட்டை பெற தகுதியுடையோர். அங்கீகரிக்கப்பட்ட குத்தகை நிலத்தில் விவசாயம் செய்வோரும் தகுதியுடையோர்.

காலம்
பெடரல் கிசான் அட்டையின் காலம் 3 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை மறு ஆய்வுக்கு உட்பட்டது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

3. கோடோன் கடன் திட்டம்

தேவை
தொழில் / தனிப்பட்ட முறை / விவசாயம்

தகுதி
கோடோன்களின் ரசீதுகளை வைத்து கடன் பெறலாம்.

காலம்
3 மாதங்கள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.federalbank.co.in

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013