வங்கி மற்றும் கடன் ::தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) :: கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

1. அத்தியாயம்
1995 -96 ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்ட அறிவிப்பில், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்படி, “பொதுத்துறை முதலீடுகளில், வேளாண்மைக்கு முதலீடு பற்றாக்குறை என்பதே தற்போது மிகப்பெரிய கவலை” என்று குறிப்பிட்டார். இந்தப் பகுதி ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பு. ஆனால் நிறைய மாநிலங்கள் விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதலீடு செய்வதைத் தவிர்த்து விடுகின்றது. நிறைய கிராம உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டது,
போதுமான நிதி இல்லாததால், பாதியிலேயே நிற்கின்றது. இதனால் நிறைய வருவாய் இழப்புகளையும் மற்றும் §வலைவாய்ப்பின்மையையும் கிராம மக்களுக்கு இல்லாமல் நஷ்டம் அடைகின்றது.

நபார்டு வங்கியின் கீழ் வரும் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, மாநில அரசுகளுக்கான கிராமப்புற உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் பாசன திட்டங்கள், நீர் பிடிப்புப்பகுதி மேம்பாடு மற்றும் மண் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நிதி அளித்தல். கிராம அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் திட்டத்தை விரிவு செய்து கிராம பஞ்சாயத்து, சுய உதவிக்குழு மற்றும் இதர தகுதியுள்ள அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றது.

விவசாயத் தேவைகளுக்கு வழங்குவதை வணிக வங்கிகள் மூலமாகவே அதிகபட்சம் நிதியைப் பெறவேண்டும். நிதி தொடர்ந்தும், மற்றும் முதலீட்டு நிதி வரவு செலவுத் திட்டத்தின் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படும். முதல் கட்டத்தில் நீர்த் திட்டங்களுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், கிராம சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாடு அதிக வரவேற்பை இரண்டாம் கட்ட கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் (RIDF II) இடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து, நிறைய செயல்கள் சிறிது சிறிதாக தகுதியுள்ள தொகுப்பை கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (RIDF) கீழ் சேர்க்கப்பட்டது.

2. குறிக்கோள்
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் கீழ் கடன் பெறத் தகுதியுள்ளவை என அறிவிக்கப்பட்டவை கிராம சாலைகள், பாலங்கள், பாசன திட்டங்கள், சிறு நீர்மின் திட்டங்கள், சமுதாய பாசன கிணறுகள், மண் பாதுகாப்பு, நீர்வளப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் தேங்குதல் பகுதிகளை சீரமைத்தல், வெள்ளத்தைப் பாதுகாத்தல், வடிகால், வன மேம்பாடு, சந்தை வளாகம், கோடோன்கள், கிராமப்புற குடிசைகள் மற்றும் இதர சந்தை உள்கட்டமைப்புகள், குளிர்ப்பதன சேமிப்புகள், விதை / விவசாயம் / தோட்டக்கலை பண்ணை, மலைப்பயிர்கள், தோட்டக்கலை, தரம் பிரித்தல், அங்கீகரித்தல் முறைகளான சோதனை செய்தல், அங்கீகரிக்கும் அய்வுக்கூடங்கள், மீன் பிடி துறைமுகம், ஆற்றோர மீன் பிடிகள், கால்நடை, நவீன கசாப்பு களம், குடிநீர் வழங்குதல், கிராம கல்வி நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்புகள், பொது சுகாதார நிறுவனங்கள், பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கட்டமைப்பு மற்றும் கிராமப் பகுதிகளில பணம் செலுத்தி உபயோகப்படுத்தும் கழிப்பறைகள், கிராம அறிவு நிலையங்கள், கடற்கரையோரப் பகுதிகளில் உப்பு பிரித்தெடுக்கும் களம், கிராமப்புற தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், அங்கன் வாடி நிலையங்கள் கட்டமைப்பு.

3. திட்டத்தை அனுமதித்தல்
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு துறையின் திட்டங்கள் மாநில அரசின் மூலமாக அதன் நிதித் துறை வழியாக நபார்டு மண்டல அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும். திட்ட வரைவுகள் அனைத்தும் ஆராய்ந்து அதை மண்டல அலுவலகம் ஆலோசனைகள் மூலம் களம் மற்றும் மேஜை மதிப்பீடுகள் மூலம் வரைவு செய்யப்படும். மண்டல அலுவலகம் மதிப்பீடு செய்த அறிக்கைகளை சமர்ப்பித்த பின் மாநில திட்டத் துறையிடம் தலைமை அலுவலகத்தில் மதிப்பீடு செய்து பின் அது அனுமதியளிக்கும் குழுவிடம் (SC) சமர்ப்பிக்கப்படும்.

 கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் முதலீடுகளில் இருந்து கடன் பெற பொதுவாக 6 முதல் 8 கலந்தாய்வுகள் வருடத்திற்கு நடைபெறும். RIDF XIII (2007-08)- ன் நிதி அனுமதி மதிப்பீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. RIDF XIV நிதி அளிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. திட்ட அனுமதி அளிக்கப்பட்டதை மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் அதன் பொதுவான விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு விதிமுறைகளும் / அதன் கருத்துக்களும் திட்டத்திற்கும் குறிப்பாக இருப்பவைகளை தெரிவிக்கப்படும்.

4. கடன் பெறும் நிறுவனங்கள்
முதலில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - யின் கீழ் திட்டத்தின் மதிப்பில் மாநில அரசுகள் மட்டுமே நிதி பெறும் தகுதி இருந்தது. ஆனால் ஏப்ரல் 1999 முதல் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (PRI), அரசு சாரா நிறுவன அமைப்புகள் (NGO), சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றிற்கும் தகுதி அளிக்கபட்டுள்ளது.

5. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் கீழ் நிதி பெறும் துறைகள் / செயல்கள்
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் கீழ் கடைசி மைல் அணுகுமுறை மூலம் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களான பாசனம், வெள்ளப் பாதுகாப்பு, நீர்பிடிப்புப்பகுதி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தும் பணம் காரணமாக நாட்கள் விரயம் ஆகாமல் முடிப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.
கிராமப்புற சாலை மற்றும் பாலம் கட்டும் திட்டத்திற்கு நிதியளிப்பது RIDF - II  ன் கீழ் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 31 செயல்கள் அதாவது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமக்கூரைகள், கூட்டு வன மேம்பாடு, கிராமச் சந்தை / கோடோன்கள், மழை நீர் சேமிப்பு, நீர்ப்பிடிப்பு பகுதி மேம்பாடு, வெள்ளப் பாதுகாப்பு, வடிகால், குளிர் சாதன சேமிப்பு, ஆற்று மீன்பிடிப்பு, மீன் துறைமுகம், மின் துறையில் சிறு / குறு நீர் மின் திட்டம் (10 மெகாவாட் வரை), கிராம குடிநீர் வினியோகத்திட்டம், கிராம அறிவு நிலையம், நவீன கசாப்புக் களம், விதை/விவசாயம்/தோட்டக்கலைப் பண்ணை, அங்கன்வாடி நிலையம், கிராமத் தொழில் பேட்டை நிலையங்கள் (KVIC) ஆகியவற்றிற்கு நிதி வழங்கப்படுகின்றது.

6. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) கடன் கீழ் உள்ள வட்டி விகிதம்
வெளியில் உள்ள நிலுவைத் தொகைக்கான வட்டி விகிதம் பின் வருமாறு வழங்கப்படுகிறது.

 

டிரான்ச்

வட்டி விகிதம்
(ஒரு வருடத்திற்கு)

RIDF I

13.00

RIDF II

12.00

RIDF III

12.00

RIDF IV

8.50@

7.00*

RIDF V

8.50@

7.00*

RIDF VI

8.50@

7.00*

RIDF VII

8.50@

   7.00*

RIDF VIII

6.50

RIDF IX

6.50

RIDF X

6.50

RIDF XI

6.50

RIDF XII

6.50

@ 16 ஏப்ரல் முதல் 31 அக்டோபர் 2003 அன்று அல்லது அதற்கு முன்பாக வழங்கப்பட்ட கடன்.
* 01, நவம்பர் 2003 முதல் வழங்கப்பட்ட கடன்கள்.

7. வங்கிகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதம்
வங்கிகளில் இருந்து வைப்பு நிதிக்கு டிரான்ச் I முதல் VII வரை உள்ள பிரிவிற்குப் பெறப்படும் வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் நபார்டு வங்கி வசூலிக்கும் RIDF கடன்களை மாநில அரசுக்கு வழங்கும் நிதியை விட குறைவானது. வணிக வங்கிகளுக்கு நேரடியாக வேளாண்மைக்கு கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு, வங்கியின் வட்டித் தொகையை கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF)- க்கு டிரான்ச்- VII மூலம் கொடுப்பதாக பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இது §வளாண்மைக்குக் கொடுப்பதை அதன்  இலக்கை வைத்து முடிவு செய்யப்படுகிறது. வணிக வங்கிகளுக்கு வழங்கும் அதன் தலைகீழான விகித சமன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு வழங்கும் நிதியில் குறைவு சதவீகித நிகர் வங்கிக் கடன்

தற்போதைய தொகை (சதவிகிதம்) RIDF VIII & IX - ன் 01.11.2003 மற்றும் RIDF X, XI, XII

2 %குறைவான புள்ளிகள்

6 (தற்போதைய வங்கி விகிதம்)

2 % முதல் 4.99 % புள்ளிகள் வரை

5 (தற்போதைய வங்கி விகிதம் கழித்தல் 1 %)

5 % முதல் 8.99 % புள்ளிகள் வரை

4 (தற்போதைய வங்கி விகிதம்   கழித்தல் 2 %)

9 % மேல் உள்ள புள்ளிகள்

3 (தற்போதைய வங்கி விகிதம் கழித்தல் 3%)

            பாரத ரிசர்வ் வங்கி / இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி, நபார்டு வங்கி கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) நிர்வகிப்பதற்கான செலவைப் பொருத்து 0.5 சதவிகிதம் வைத்திருக்கிறது. மாறுபட்ட வட்டி விகிதம் நபார்டு வங்கி பராமரித்து வரும் மலை மேம்பாட்டு நிதி கடனுக்கு வழங்கப்படும்.

8. கடன் கால அளவு
கடன் திருப்பிச் செலுத்தும் 5 ஆண்டு காலம் (இதில் 2 ஆண்டுகள் கருணைக் காலமும் அடங்கியது) RIDF - I முதல் RIDF- V கீழ் வழங்கப்படும். RIDF-VI முதல் திருப்பிச் செலுத்தும் காலம் 7 வருடமாக மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கருணைக் காலத்துடன் §சர்த்து இதே முறை தொடர்கிறது.

9. பொதுவான ஒதுக்கீடு
உச்சநீதிமன்றத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற முறையின்படி அனைத்து மாநிலங்களுக்கும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள விதிகள் கிராம மக்கள் தொகை (20 %), மாநிலத்தின் புவியியல் பகுதி (20%), உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்ளடக்கத்தின் தலைகீழ் (20%), கிராமப்புற சி.டி (CD) விகிதத்தின் தலைகீழ் (15 %), அனுமதி பெறும் அளவு (5 %), கடந்த கால வெளியீடுகள் (20%). ஒரு சில மாநில அரசுகளால் ஒதுக்கீடுகளை முழுவதுமாக உபயோகிக்க முடிவதில்லை மற்றும் மாநில வாரியான ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் திறனாய்வு செய்து பின் சரியான அளவு மறு ஒதுக்கீடுகளைச் செய்யும்.

10. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) - ன் முதன்மைத் துறை
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) இயக்குவதற்கு மாநில அரசின் நிதித்துறை முதன்மைத் துறையாக செயல்படும். திட்ட வடிவத்தை மாநில அரசின் நிதித் துறை மூலமாக மட்டுமே கொடுக்கப்படவேண்டும். ஏனைய துறைகள் மூலமாக கொடுக்கப்பட்டால், அது நிராகரிக்கப்படும். அது தொடர்பான வேறுவேலைகளான அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து பணம் எடுத்தல், கடன் அனுமதித்தல், ஆதாரங்களை வெளியிடுதல், கடன் திருப்பி அளித்தல் போன்ற அனைத்தும் மாநில அரசின் நிதித் துறை மூலம் மட்டுமே செய்யப்படவேண்டும்.

11. திட்டங்களை மதிப்பீடு செய்தல்
நபார்டு வங்கியின் மண்டல அலுவலகத்திற்கு மாநில அரசின் திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவை கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF)  முடிவெடுத்துள்ளதன் மூலம் இறுதி செய்யப்படும். விரிவான திட்ட அறிக்கையை துறையின் கீழ் பண்ணை மற்றும் மேசை மதிப்பீடுகளை நபார்டு அதிகாரிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குபவர், மூத்த ஓய்வு பெற்ற அதிகாரிகள், மாநில / மத்திய அரசுகளின் துறைகளில் இருந்தவர்களாக இருப்பர்.

12.பதிவு செய்தல்
இயல்பான ஆவணங்கள் போக, பொது மற்றும் சிறப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனுமதி, §நர உறுதி குறிப்பு (TPN) ஆகியவற்றிற்கு மாநில அரசு பாரத ரிசர்வ் வங்கியுடன் இணைந்து முன்னுரை ஏற்படுத்தி, பின் அசல் தொகை மற்றும் வட்டிகளை அந்த குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பிச் செலுத்தப்படாமல் இருப்பின் நபார்டு வங்கிக்கு பணம் செலுத்தவேண்டும். மாநில அரசு தகுந்த சான்றிதழை முன்பணம் பெற்றதற்கும் அவை மாநில சட்டப்பேரவை 293(1)-ன் படி குறிப்பிட்ட கடன் வாங்கும் அளவிற்குள் உள்ளதாகவும் மற்றும் இந்திய அரசின் அரசியல் சாசனம் 293(3)-ன் படி அதன் படிவம் ஒன்றின் கீழ் இருப்பதாகவும் உள்ளதா என்று பார்த்து பெறவேண்டும்.

13. கடன் அளவு
தேவையான கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட விதிமுறைக்குள் ஒவ்வொரு துறைக்கும் RIDF XIV கீழ் வழங்கப்பட்டுள்ளது.

வ.எண்

துறை / செயல்கள்

RIDF கடன் வழங்க சதவிகித அடிப்படையில் திட்ட செலவு ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர்,உத்திரகாண்ட் மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம் உட்பட அனைத்தும்

RIDF கடன் வழங்க உதவி திட்டச் செலவுகளை திட்டங்கள் 3வது நெடு வரிசையில் குறிப்பிடப்படாத மாநிலங்கள் தவில அனைத்தும் மற்ற மாநிலங்களும் அடங்கும்.

(1)

(2)

(3)

(4)

1.

வேளாண் சார்ந்த ¦சயல்களான பாசனம், மண் பாதுகாப்பு, வெள்ள பாதுகாப்பு

95 %

95 %

2.

சமூக துறை திட்டங்கள்

90 %

85 %

3.

கிராம இணைப்பு

90 %

80 %

14. திட்டத்தின் பகுதிகள்
திட்டத்தின் பகுதிகள் பொதுவாக (திட்ட நடைமுறைப்படுத்தும் காலம்)   கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி RIDF - XIII வரை 3 வருடங்கள். RIDF  XIV பகுதி திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது கீழ்க்கண்ட முறைகள் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
(i) மற்ற மாநிலங்களில் இருந்து வரும் திட்டங்கள்

  1. பெரிய மற்றும் மிதமான பாசனம் சார்ந்த திட்டங்கள் அதிகபட்சமாக பகுதிகளின் காலம் 5 வருடங்கள் மற்றும் இதர திட்டங்கள் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) அடங்கியவற்றிற்கு ரூ. 50 கோடி மற்றும் அதற்கும் மேலும்.
  2. மற்ற திட்டங்களுக்கு அதிகபட்ச பகுதிகளின் காலம் 3 வருடங்கள்
  3. திட்டங்களைப் பகுதிகளாக்கி நிதி ஆண்டின் இரண்டாம் பகுதியில் அதாவது அக்டோபர் 1 மற்றும் 31 மார்ச் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகும். மாநில அரசு வேலைகளை முன்கூட்டியே செய்ய ஆரம்பித்தால், அதற்கேற்றாற் போல் நிதியும் வழங்கப்படும். இருப்பினும், இதில் கடினங்கள் தென்பட்டால், டிரான்சிக்காக பகுதிகளாக§வா, முழுவதுமாகவோ அல்லது குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டுமோ மாநில அரசுகளுக்கு திட்டங்களை முடிக்க உதவி செய்கின்றது.

15. நிதியை அனுமதித்தல்
அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆகும் செலவுகளுக்கு கடன்களை வெளியிட்டு அதை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.   கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) கடன்கள், மாநில அரசுகளுக்கு நபார்டு வங்கியின் மண்டல அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும்.

16. செலவு அதிகரித்தல்
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள், அனுமதிக்கப்பட்ட செலவு தொகைக்குள் முடிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். செலவு அதிகரிப்பதற்கான திட்ட வரைவு தகுந்த காரணங்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

17. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) திட்டங்களைக் கண்காணித்தல்
திட்டத்தைக் கண்காணிப்பது மாநில அரசின் பொறுப்பு. இருந்த போதிலும் நபார்டு வங்கியின் மூலம் சரியானதொரு கண்காணிப்பு முறைதான் RIDF திட்டம். 9000 -10000 திட்டங்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டத்தில் 9 சதவிகிதம் அளவு ஒவ்வொரு ஆண்டு முழுவதும் மாவட்ட மேம்பாட்டு மேலாளர்கள், மண்டல அலுவலகங்களில் உள்ள இதர அலுவலர்கள், ஆலோசகர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைவாரியான கண்காணிப்பு, தலைமை அலுவலகம் மூலமும் இதர வெளிப்புற அலுவலகங்கள் மூலம் செய்யப்படுகின்றது.

18. கண்காணிப்புக்குழு
கள கண்காணிப்புடன் கூடிய, நிறுவன முறைகள் ஏற்படுத்தி துறை மற்றும் திட்டவாரியாக திறனாய்வுகள், ஆய்வக பொறியாளர்கள், முதன்மை பொறியாளர்கள், துறைத் தலைவர்கள், நிர்வாக செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் மூலமாக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) திட்டங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவதற்கு உறுதுணையாக இந்த முறைகள் ஒரு நிலையானதாகவும் மற்றும் திருப்தி அடையும் வகையிலும் நடைபெறுகிறது. நபார்டு வங்கியும் திறன் வளர்க்கும் பயிலரங்குகளை அரசுத் துறையில் இருக்கும் வெவ்வேறு அலுவலர்கள் RIDF திட்டத்தை ஒட்டி இருக்கும்படி பார்த்து நடத்துகிறது.

19. 2008-09 க்கான கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) XIV அறிவிப்பு
மத்திய வரவு செலவுக் கணக்கை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்து பேசும் போது RIDF XIV 2008-09 ஆண்டுக்கான நிதி ரூ. 14000 கோடியாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் கீழ்க்கண்ட செயல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

  1. கிராம சாலைகள்
  2. கிராம பாலங்கள்
  3. சிறு பாசன திட்டங்கள் / குறு பாசனம்
  4. மண் பாதுகாப்பு
  5. வெள்ள பாதுகாப்பு
  6. நீர்பிடிப்புப் பகுதி மேம்பாடு / நீர் தேங்கும் பகுதிகளைச் சீரமைத்தல்.
  7. வடிகால்
  8. வெள்ள பாதுகாப்பு
  9. வடிகால்
  10. வன மேம்பாடு
  11. சந்தை வளாகம் / கோடோன், மண்டிகள், கிராம சந்தைகள் மற்றும் இதர சந்தை உள் கட்டமைப்பு
  12. குளிர்பதன சேமிப்பு, பொது / கூட்டு துறை மூலம் வெவ்வேறு இடத்தில் சேமிப்பு கிடங்குகளை அமைத்தல்.
  13. விதை / வேளாண்மை / தோட்டக்கலைப் பண்ணை
  14. மலைப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை
  15. தரம் பிரித்தல் மற்றும் அங்கீகரிக்கும் முறைகளான சோதனை மற்றும் அங்கீகரிக்கும் ஆய்வகம்.
  16. மொத்த கிராம பாசன தேவைக்காக சமூக பாசன கிணறுகளை
  17. மீன்பிடி துறைமுகங்கள்
  18. ஆற்றுப்பகுதி மீன்பிடிப்புகள்
  19. கால்நடை
  20. நவீன கசாப்புக் களம்
  21. நடுத்தரப் பாசனத் திட்டம்
  22. கிராம குடிநீர் திட்டம்
  23. கிராம கல்வி நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு
  24. பொது சுகாதார நிறுவனங்கள் (நடமாடும் சுகாதார மருந்தகம்)
  25. பள்ளிகளுக்கு கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல், குறிப்பாக பெண் மாணவிகளுக்கு அமைத்தல் மற்றும் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்.
  26. கிராமப்புற பகுதிகளில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் கழிவறைகள் அமைத்தல்.
  27. பெரிய அளவிலான பாசன திட்டம் (ஏற்கெனவே அனுமதித்த மற்றும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டம்)
  28. கிராம அறிவு நிலையம்
  29. கடலோரப் பகுதிகளில் உப்பு நீக்கும் கலன்களை அமைத்தல்
  30. சிறு மற்றும் குறு நீர்மின் திட்டம் (10 மெகா வாட் வரை)
  31. கிராம பகுதிகளில் தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பு
  32. அங்கன்வாடி நிலையங்களுக்கு கட்டமைப்பு
  33. கிராம தொழில்பேட்டை/ நிலையங்களை அமைத்தல் (KVK)

மாதிரி மற்றும் புதுமையான திட்டங்கள்

  1. குள்ஸ் பாசன முறைக்கு பாதுகாப்பு
  2. ஆகசி நீரேற்றம் கால்வாய்
  3. கிராம மின்மயமாக்கல்
  4. கூட்டு வன நிர்வகித்தல்
  5. ஒரு லட்ச குழாய் கிணறு திட்டம்
  6. கோகுல் கிராம யோஜனா
  7. தூண்கள் கட்டுதல்
  8. சரஸ்வதி பால் வித்யா சன்கல்ப் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்பப் பள்ளிகள்.
  9. நீர்பிடிப்பு பகுதிகளில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  10. ரப்பர் திட்டம்
  11. கிராம குடிநீர் விநியோகம்
  12. மழை நீர்  அறுவடை கட்டமைப்புகள்
  13. சன்கர்பூர் மீன்பிடி துறைமுகம்

§மலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம்
http://www.nabard.org/ridf/genesisofridf.asp
http://www.tnrd.gov.in/schemes/st_nabard.html
http://www.nabard.org/ridf/mode_rainwater.asp
http://indiabudget.nic.in
http://pib.nic.in/archive/ppinti/ppi99wr.html

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013