அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்

1. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? 
SIDBI - வங்கி ஏப்ரல் 2, 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற விதியின் கீழ் தொடங்கப்பட்டது.

2. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) வர்த்தக நோக்கம் என்ன?
இதன் வர்த்தக நோக்கம் சிறு அளவிலான தொழல் துறைகள் (அலுவலகத்தின் முதலீடு மற்றும் இயந்திரங்கள் ரூ. 10 மில்லியன்களுக்கு அதிகமாக இருத்தல் கூடாது). SIDBI உதவிகள் போக்குவரத்து, உடல் நலம் பேணல், உணவகம் மற்றும் சுற்றுலா துறை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர், சுய தொழில் முனைவோர் சிறு அளவிலான வேலையில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு நிதி உதவி அளித்தல்.

3. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) குறிக்கோள் என்ன ?
சிறு தொழில் மேம்பாட்டு வங்கி விதி, 1989 - ன் முன்னுரை, SIDBI- யின் நோக்கத்தை விவரிக்கிறது.
முதன்மை நிதி நிறுவனமான SIDBI வங்கி, ஊக்குவிப்பு, நிதியளிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சிறு தொழிற்சாலைகளுக்கு வழங்கி, ஊக்குவிப்பு மற்றும் நிதியளிப்புகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் செயற்கூறுகளை ஒருங்கிணைத்தல் அல்லது தொழிலை சிறு அளவில் மேம்படுத்துதல் மற்றும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்தல்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) 4 முக்கிய நோக்கங்கள்

  1. நிதியகம்
  2. ஊக்குவிப்பு
  3. மேம்பாடு
  4. ஒருங்கிணைப்பு

ஆகியவை சிறு அளவிலான துறைகள் சரியான வளர்ச்சிக்காகத் தேவையான நோக்கங்கள்.

4. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) பல்வேறு  திட்டங்கள் யாவை ?
SIDBI - யின் திட்டங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மறுநிதியளிப்புத் திட்டம்
  2. கட்டண நிதித் திட்டம்
  3. திட்டம் சம்பந்தமான நேரடி நிதித் திட்டம்
  4. ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

இத்திட்டத்தைப் பற்றிய கீழ்க்கண்ட பிரிவுகளைப் பற்றி அறிய, எங்களது இணையதளத்தின் பொருட்கள் மற்றும் சேவை பிரிவுகளைப் பார்க்கவும்.

5. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமுற்றோருக்கான சிறப்புத் திட்டங்கள்
SIDBI வங்கி தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமுற்றோருக்கு மறுநிதியளிப்புக்களை வழங்குகிறது. இத்திட்டம் தொடக்கநிலை வழங்கும் நிறுவனங்களான மாநில நிதிக்கழகம் மற்றும் வணிக வங்கிகள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நீங்கள் திட்டத்தைப் பற்றி அறிய அருகில் உள்ள SFC அல்லது உங்கள் பகுதியில் உள்ள வங்கியை அணுகவும்.

6. ஐ.எஸ்.ஓ 9000 சான்றிதழ் நிதி உதவி திட்டம் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் ?
ஐ.எஸ்.ஓ 9000 சான்றிதழ் பெற SIDBI யின் உதவி பெற தொடக்க நிலை நிறுவனங்களான மாநில நிதி கழகங்கள், வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் உதவிகள் பெறத் திட்டத்தின் விரிவானவற்றை வைத்துக் கொண்டு அணுகவும். நேரடியாக உதவிகள் பெற அருகில் உள்ள SIDBI - யின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெறலாம்.

7. தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு SIDBI யின் திட்டங்கள் யாவை ?
SIDBI யின் நிதி உதவி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வணிக வங்கிகள், மாநில நிதிக்கழகங்கள், மாநில முதலீட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் பெறலாம். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வங்கியாளர், SFC, SIDC ஆகியோரை சந்தித்து உதவி திட்டம் குறித்து மேலும தகவல் பெறலாம்.

8. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) பொது மறுநிதியளிப்பு திட்டத்தைப் பற்றி கூறவும் ?
வணிக வங்கிகள், மாநில நிதி கழகங்கள், மாநில தொழில் மேம்பாட்டுக் கழகங்கள் ஆகியவை தொடக்கநிலை, நிதி வழங்கும் நிறுவனத்தின் மூலம் SIDBI வங்கி மறுநிதியளிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. சிறு மற்றும் குறு அளவிலான துறைகளுக்கான உதவிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளை தொடக்கநிலை நிதி வழங்கும் நிறுவனங்கள் பூர்த்தி செய்தல், SIDBI வங்கி இதற்குப் பதிலாக அந்நிறுவனங்களுக்கு மறு நிதியளிப்பு உதவிகளை வழங்குகின்றது.

9. விரிவடையும் திட்டம் பற்றி கூறவும் ?
நல்ல லாபம் பெற்றுக் கொண்டிருக்கும் சிறு தொழில் துறைகள் விரிவாக்கம் செய்ய மேற்கொண்டிருப்போர், தொழில்நுட்ப தர உயர்வு, நவீனமயமாக்கல் ஆகியவை SIDBI யின் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவி பெறுபவை (மறுநிதியளிப்பு திட்டத்தின் கீழ்) நீங்கள் எங்களது உபகரண நிதித்திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் நிதித் திட்டம் ஆகியவற்றை நேரடி நிதித் திட்டம் மூலமும் மற்றும் அதே போன்ற திட்டங்கள் மறுநிதியளிப்பு திட்டங்கள் மூலமும் மேற்கண்ட விவரங்களுக்கு அணுகலாம்.

10. நான் சிறு தொழில் மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் எந்த மாதிரியான திட்டங்கள் நிதியளிப்பிற்குக் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ள விழைகிறேன் ?
SIDBI வங்கி சிறு தொழில் மையங்களுக்கு நிதி உதவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ¦தாடக்க நிலை நிதி வழங்கும் நிறுவனங்களான வங்கிகள், SFC ஆகியவை மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் எங்களது இணையதள முகவரியில் பொருட்கள் மற்றும் சேவை பிரிவு உள்ள பகுதியில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

12. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியிடம் (SIDBI) இருந்து யா¦ரல்லாம் உதவி பெற தகுதியுடையவர் ?
பொதுவாக அனைத்து வகையான அமைப்புகளும் அதாவது தனிநபர் உள்ள நிறுவனம், கூட்டு நிறுவனம், லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு விதமான உதவிகளை SIDBI யிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். SIDBI யின் உதவிகள் ஏற்றுமதி, தொழிற்சாலை உற்பத்தி, போக்குவரத்து, உடல்நலம் பேணல், சுற்றுலாத்துறை மற்றும் தொழில்வல்லுநர்கள், சுயதொழில்முனைவோர், சிறு அளவிலான தொழில் வைத்திருப்போர் ஆகியோர் பெறத் தகுதியுடையவர்கள்.

13. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) எந்த மாதிரியான முறையில் உதவிகள் பெறலாம் ?
SIDBI குறிப்பாக வழங்கும் உதவி முறைகள்
மறைமுக நிதி (மறுநிதி மற்றும் கட்டணத்திற்கு திரும்பவும் குறைத்தல் (சிறு தொழில்கள் தொடங்கியவர்களுக்கு) தொடக்க நிலை, நிதி வழங்கும் நிறுவனங்கள் (பி.எல்.டி) வங்கிகள் மற்றும் மாநில அளவிலான நிறுவனங்கள் ஒரு சில நிறுவனங்களில் கடன்  வழங்குவது என்பது மறு நிதியளிப்பு மூலம் வழங்கப்படும். நேரடி நிதி என்பது பலவகை கடைசி அளவிலான திட்டங்கள் மூலம் ஒரு சில குறிப்பிட்ட குழுக்கள் மூலம் அல்லது சிறு தொழில் துறைக்கு நன்மை கிடைக்கும் செயல்கள். ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு சேவை கடன்கள், பண உதவிகள் அனைத்தும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழங்கி SIDBI யின் மேம்பாட்டுத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தும் முகவர்களாக நடைபெறுகிறது. கடன் தேவையுள்ளோர்களுக்கு சிறு கடன் நிதியும் வழங்கப்படுகிறது.

15. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் வட்டி விகித அளவுகள் யாவை ?
வட்டி விகித அமைப்பு
வட்டி விகிதம்
பணம் கொடுப்பதற்கான வட்டித்தொகை (பி.எல்.ஆர்) 12.00 %

 

திட்டம் தொடர்பான நிதி

1.

ரூபாய் தவணைக்கடன்

 

பி.சி.ஆர் / பி.எஸ்.சி.ஆர் அனைத்துத் திட்டங்களுக்கும் கீழ் கட்டண குறைப்புத் திட்டங்கள் ஆதார உதவி மற்றும் கூட்டு / அமைப்பு / இது போன்ற ஏற்பாடுகள்

(i)

அனைத்து திட்டங்களும் விற்பனை வாரியாக பெற்றுக் கொள்ளும் 
நிதித் திட்டம் சிறப்புத் திட்டத்தைத்தவிர்த்து அதாவது ஐ.எஸ்.ஓ 9000.

 

பி.எல்.ஆர் கழித்தல் 1.5 முதல் பி.எல்.ஆர் வரை
கூட்டல் 2.5 (அதாவது) 10.5 - 14.5

(ii)

ஐ.எஸ்.ஓ 9000 திட்டம்

பி.எல்.ஆர் 0.5 முதல் பி.எல்.ஆர் வரை

2.

ஆதாரம் உதவி / என்.பிஎப்.சி. - க்கு உதவி

(i)

1 வருட காலத்திற்கு

10.0-12.5

(ii)

 1 வருடத்திற்கு மேல் 2 வருடம் வரை

10-13.5

(iii)

2 வருடத்திற்கு மேல்

11-13.5

3.

அந்நியச் செலாவணிக்கு உதவி

(i)

அந்நிய செலாவணி தவணைக்கடன்

(i) 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை 6 மாத யு.எஸ்.டி லிபர் 
(ii) 3 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வருடத்திற்கு 6 மாதத்திற்கு மேல் யுரோ லிபர்

குறிப்பு

  1. மேற்குறிப்பிட்ட தொகை திட்டத்தின் படி நிதி உதவிக்கு மட்டும் பொருந்தும்.          
  2. மேற்குறிப்பிட்ட விலைக்குள் வட்டி விகிதம் இடர் விகித தரத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : http://www.sidbi.in

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016