மஹிலா உதயம் நிதி (MUN)
தேவை
சமநிலையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடன் பெற தகுதியுள்ளவர்கள்
பெண் சுயதொழில் முனைவோர், சிறு / குறு அளவிலான திட்டங்கள் அமைப்பது மற்றும் நலிவடைந்த சிறு தொழில் நிறுவனங்களைப் புரணமைத்தல், ஏற்கெனவே இருக்கும் சிறு, குறு அளவிலான தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை துறைகள் (குறு நிறுவனங்களில் அனைத்து தொழில் நிலையங்களும் மற்றும் சேவை தொழிற்சாலைகளும் அடங்கும். (சாலைப் போக்குவரத்து இயக்குநர்களைத் தவிர்த்து) சிறு நிறுவனங்கள் குறிப்பிட்ட முதலீட்டு அளவைச் சேர்த்து) விரிவாக்கம் செய்தல், நவீன தொழில்நுட்ப தரம் உயர்த்துதல் மற்றும் வேறு துறையைத் தேர்ந்தெடுப்பதும் அடங்கும்.
விதி முறைகள்
SFC / இருசெயற்கூறுகள் கொண்ட SIDC / வணிக வங்கிகள் / தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் திட்டச் செலவு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் அதிகரித்தல் கூடாது.
சேவைக் கட்டணம் - மென் கடனுக்கு 1 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு
ஆதாரம் : http://www.sidbi.in |