வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

தரமான மற்றும் சுத்தமான பால் உற்பத்திக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல்
இந்திய அரசு தரமான மற்றும் சுத்தமான பால் உற்பத்திக்கு உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தவும் கிராம அளவில் தூய பால் உற்பத்தியை கிடைக்க உறுதி செய்து கொள்ளவும் இத்திட்டத்தை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் காலம் இரண்டு மற்றும் மூன்று வருடங்கள்.

இத்திட்டத்தின் குறிக்கோள் விவசாயிகளுக்கு சுத்தமான பால் உற்பத்திச் செயல்கள், பால் கறவை செய்வோர்க்கு இராசயனம் மற்றும் பாத்திரங்கள் வழங்குதல், மாவட்ட பால் பண்ணை சங்கங்கள் / குளிர்விக்கும் நிலைய சோதனைக் கூடத்தை வலுப்படுத்துதல் மற்றும் சங்கத்தில் மொத்த பால் குளிர்விப்பான்கள் நிறுவச் செய்து பாலின் தரத்தை முதலில் இருந்து மேம்படுத்தச் செய்தல் ஆகியவை செய்து தரப்படுகிறது.

இந்திய அரசு முழு தொகையும் ஒரு தவணையாக பயிற்சி, கிருமி நாசினி கரைப்பான்கள், கரைபடியா பாத்திரங்கள் வழங்குதல், பால் பண்ணை / குளிர்விக்கும் நிலையங்களில் தரக்கட்டுப்பாடு சோதனைக் கூடங்களை நவீனமயமாக்குதல் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. இந்திய அரசு 75 சதவிகி தொகையை மொத்த பால் குளிர்விப்பான் நிறுவுதல் மற்றும் மீதமுள்ள 25 சதவிகிதம் தொகையை சம்மந்தப்பட்ட உதவி பெறும் மாவட்ட சங்கங்களுக்கு வழங்கும்.

ஆதாரம்: http://www.aavinmilk.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016