தவேப வேளாண் இணைய தளம் :: உயிரி  எருபொருள் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் உயிரி  எருபொருள் நிறுவனங்கள்

          தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த ஆண்டுகளின் வறட்சியைக் கண்டு மாற்றுப் பயிர்களை அறிவித்து சாகுபடிக்கு உபயோகப்படுத்தப்படும் நீரின் அளவை குறைத்தது. மாநில அரசு குறைந்த பயன்பாட்டுப் பயிர்களான காட்டாமணக்கு, சர்க்கரை சோளம் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை ஊக்குவித்து தங்கள் தேவைக்கு எத்தனால் மற்றும் உயிரி எருபொருள் உற்பத்தி செய்கிறது.

முதலமைச்சர் தமிழ்நாட்டில் உயிரி எருபொருள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார். உதாரணமாக, காட்டாமணக்கு உயிரி எருபொருள் தயாரிப்பதற்கும், சர்க்கரை சோளம் மற்றும் கரும்பு எத்தனால் தயாரிக்கவும் விளைவிக்கப்படுகின்றன. இந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு மாநிலத்தில் பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்தது. இருநூற்றி எழுபத்தி ஒன்று (271) நிறுவனங்கள், கார்ப்பரோட் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

முதல் நிகழ்வாக நான்கு நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் எரிபொருளின் செயலாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதாவது, M/s.மோகன் ப்ரேவரிஸ் லிம்டெட், சென்னை, M/s. பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை மற்றும் M/s. சிவா டிஸ்டில்லரிஸ், கோயமுத்தூர், M/s. ரிவர்வே வேளாண் பொருட்கள் (பி) லிமிடெட், திருநெல்வேலி மற்றும் M/s.தாரணி சர்க்கரை ஆலை, அம்பாசமுத்திரம். பின்னர் 18 நிறுவனங்களுக்கு காட்டாமணக்கு சாகுபடி மற்றும் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்ய அரசு உதவி அளித்துள்ளது.

M/s. ரேணுலட்சுமி வேளாண் தொழில்கள் லிமிடெட் விவசாய ஒப்பந்தம் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று டன் திறன் கொண்ட பிழியும் நிறுவனத்தை  திறந்துள்ளது. இவர்கள் காட்டமணக்கு விதைகளை தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு மற்றும் தேனி மாவட்டக் காட்டுப்பகுதியிலிருந்து திரட்டி, எண்ணெயை தெற்கு ரயில்வே, சென்னைக்கு வழங்குகிறது.

M/s.பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை மற்றும் M/s.சிவா டில்டில்லர்ஸ் நிறுவனம் லிமிடெட், காற்றாலை பகுதிகளில் காட்டமணக்குப் பண்ணையை 1546 ஏக்கரில் நிறுவியுள்ளது மற்றும் விதைகள் / நாற்றுகள் வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் விவசாயிகள் மத்தியில் காட்டமணக்குவைப் பிரபலப்படுத்த சில நாட்கள் வயல் ஆய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மூன்று மாநில அமைச்சர்கள், துணை வேந்தர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  கார்ப்பரேட் பிரமுகர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிறுவனம் தற்பொழுது  தங்களது பிராந்திய மையங்களிலிருந்து காட்டாணக்கு மற்றும் கரஞ்சி விதைகளை கொள்முதல் செய்கிறது மற்றும் ஜீலை 2006 முதல் நாள் ஒன்றுக்கு 3000 கிலோ கிராம் உயிரி எரிபொருள் என்ற அளவில் உற்பத்தியை தொடங்கியது. அவர்கள் கொள்முதல் அளவு அறியப்படவில்லை. ஆனால் இந்நிறுவனம் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விதைகள் கொள்முதல் செய்வதாக அறிவித்தது.

M/s.மோகன் ப்ரேவரிஸ் லிமிடெட், சென்னை உயிரி எரிபொருள் உற்பத்தி ஆலை நிறுவ டி1 ஆயில்ஸ் லிமிடெட், இங்கிலாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அவர்கள் காட்டாமணக்கு விதையை கொள்முதல் செய்ய இருக்கிறார்கள். எனினும் வரும் ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

M/s.ரிவர்வே வேளாண் பொருட்கள் (பி) லிமிடெட், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டாமணக்குத் தோட்டத்தை 600 ஏக்கரில் நிறுவியுள்ளது. சமீபத்தில் சதர்ன் புறா பையோஃபியூல்ஸ், மதுரை வேம்பு மற்றும் கரஞ்சி /புங்கம் விதைகளை மதுரையில் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்வதாக அறிவித்தது.

சென்னை தெற்கு ரயில்வே மண்டல பட்டறை நாள் ஒன்றுக்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தமது தேவைகளை பூர்த்தி செய்ய டிரான்செஸ்டிரிஃபிகேஷன் ஆலையை நிறுவியுள்ளது. உயிரி எரிபொருள் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டமாக சென்னை மற்றும் அரக்கோணம் இடையே இயக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில வனத்துறை, தமிழ்நாடு அரசு ஒசூர் மற்றும் தூத்துக்குடி வன பிரிவில் தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைக்கழக மாதிரியின் அடிப்படையில் மூன்று கரஞ்சா   அடிப்படையிலான உயிரி எரிபொருள் எஸ்ட்டராக்குதல் ஆலை நிறுவப்பட்டது.

தமிழ்நாடு அரசு, மாநில வனத்துறை மூலம் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் மாதிரி செயல் விளக்கத் திடலை உருவாக்கி 150 கிராமங்களில் ஒருவருக்கு ஒரு ஏக்கரில் செயல்படுத்த உள்ளது. நடைமுறை மற்றும் பராமரிப்பு செலவை வனத் துறையே ஏற்றுக்கொள்ளும். விவசாயிகள் எந்த ஆரம்பச் செலவும் செய்யத் தேவையில்லை.
இக்குழுவில் முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் _.J.C. கலா I.F.S இவருடன் Dr.M.பரமாத்மா, பேராசிரியர் மற்றும் தலைவர், மரம் வளர்ப்புத் துறை, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் மற்றும் _.S.கல்யாண சுந்தரம் I.F.S, கோட்ட வன அலுவலர், செங்கல்பட்டு ஆகியோர் தரமான காட்டாமணக்கு விதைகளை கொள்முதல் செய்ய ஜிம்பாபே, தான்சேனியா மற்றும் தென் ஆப்பரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். இக்குழு தரமான விதைகளை ஆராய்ந்து ஜிம்பாபேவில் இருந்து 275 கிலோ கிராம் விதைகளை தமிழ்நாட்டில்  கூட்டு வன மேலாண்மை கிராமங்களை நிறுவ கொள்முதல் செய்தது.

மாநில வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு மேலும் தேசிய எண்ணெய் விதைகள் மற்றும் தாவர எண்ணெய் மேம்பாட்டு வாரியத்திடம் நிதியுதவி பெற்று மாதிரி காட்டாமணக்குப் பண்ணையை மாநில விதைப் பண்ணையில் 300 ஹெக்டரில் நிறுவியது மற்றும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 300 ஹெக்டரில் நிறுவியுள்ளது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013