பயிர்ப் பெருக்கத்தில் மூலக்கூறு குறியீடு மரபு வழிப்பயிர் பெருக்கத்தின் மூலம் புதிய இரகத்தினை உருவாக்க 10-15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் “மூலக்கூறு குறியீடு தேர்ந்தெடுத்தல்” மற்றும் “மரபு வழிப் பொறியியல்” தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய இரகத்தினை உருவாக்கும் கால அளவு (7-10 வருடங்கள்) குறைகிறது. மூலக்கூறு குறியீடு பெருக்கம் மூலம் ஆற்றலை மேம்படுத்தி, வல்லுநர்கள் சரியான ஜீன் பொருத்தம் குறியீடு மூலம் குறிப்பிட்ட காரணிகளைத் தேர்ந்தெடுத்தல் பயிர்ப் பெருக்கத்தின் போது மேற்கொள்கிறார்கள்.
மூலக்கூறு குறியீடுகள் என்பன “ மரபியல் சார்ந்த அட்டைகள்” போன்று குறிப்பிட்ட இடத்தில் ஆகும். மரபியலில் வெளித்தோற்ற அமைப்பினை கண்டறியவும், காட்டவும் ஆகும். குறியீடுகள் என்பவை (உட்கரு அமிலப் பகுதிகள்) வேட்பு மரபணுக்கு அருகில் மற்றும் தேவைப்படும் காரணி / மரபணுக்கு அருகிலும் இருக்கக்கூடிய வகையில் இருப்பது மரபியல் இணைவு ஆகும். இவ்விணைவு ஆராய்ச்சியாளர்களுக்குக் குறிப்பிட்ட மரபணுவை உறுதி செய்து வருவதை உரைக்க பயன்படுகிறது.
மரபியல் இணைவு வரைபடம் உருவாக்குதலின் மூலம் ஆராயச்சியாளர்கள் மூலக்கூறு குறியீடுகள் இன இழையில் எங்கு உள்ளது என்பதை அறியவும், எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது. இணைவு வரைபடமானது “பண்பு சார்ந்த காரணிப் புள்ளி ” வரைபடமாகவும், கண்டறியவும் உதவும். இப்பண்பு சார்ந்த காரணப்புள்ளி குறிப்பிட்ட வெளித்தோற்றக் காரணிகளைக் கட்டுப்படுத்தவும் (அ) மூலக்கூறு குறியீட்டு இணைவுக் காரணிகளைச் சுட்டிக்காட்டவும் உதவுகிறது.
மரபியல் வரைபடம் கொண்டு ஓர் சந்தையில் உள்ளது விழைவு மரபணு உள்ளதா அல்லது உட்கரு அமில எடுக்கப்பட்டு உற்பத்தி செய்ததா என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்ய உதவுகிறது. மேலும் வெளித் தோற்றப் பண்புகளைக் கொண்டு சந்ததிகளை உருவாக்கும் போது நேரம் குறைகிறது. குறியீடுகள் மேலும் விழைவு மரபணு மண்டலத்தில் இருந்து, பெற்றோரின் மரபணுவிடம் இருந்து பெறப்படும் மரபணுபைக் கண்காணிக்கவும், உதவும். இச்செயல்முறை பல “பண்ணு சார்ந்த காரணப்புள்ளி” யில் பல அளிக்கும் மரபணுவில் இருந்து ஒர மரபணு ஏற்றுக்கொள்ளும்படி செய்வது “ பண்பு சார்ந்த காரணப்புள்ளி பிரமீடு ”எனப்படும். (கூர்முனைக் கோபுரம்)
மரபியல் குறியீடுகளின் பயன்கள்
- மரபியல் வேற்றுமை மற்றும் விதைக் கருவூலக் குணங்களை மதிப்பிடவும்.
- பயிர் இரகத்தில் மூலக்கூறு விரல் பதிவு தொழில்நுட்பம் பயன்படுத்துதல்
- ஒற்றை மரபணு மற்றும் பண்பு சார்ந்த காரணப் புள்ளிணைத் தேர்ந்தெடுத்தல்.
பயனுள்ள வேட்பு மரபணுவின் வரிசையைக் கண்டறியவும் உதவுகிறது. |