உயிரித் தொழில்நுட்பம் :: மரபுக் குறியீடு

ஒரு புதியவகை பயிரை மரபுவழிப் பயிர் பெருக்குதல் மூலமாக அடைவதற்கு 10 முதல் 15 வருடமாகிறது. ஆனால் உயிர் தொழில் நுட்ப முறைகளான மரபு குறியீடு மற்றும் மரபு பொறியியல் மூலமாக 7 முதல் 10 வருடத்திற்குள் புதிய வகைப் பயிரை உருவாக்கலாம். மரபுக் குறியீடு முறையானது மரபியல் நிபுணர்களின் ஒரு சிறந்த சாதனையாக நிகழ்கிறது. இந்த முறையின் மூலமாக திறனுடைய விரும்பத்தக்க மரபுகளை ஒன்றுசேர்த்து புதிய ரகத்தை உருவாக்கலாம். மூலக்கூறு உருவாக்கும் பண்பகம் ஒரு மரபியல் சார்ந்த பிணை. இதன் மூலமாக மரபமைவிலுள்ள குறிப்பிட்ட பகுதியிலுள்ள தோற்றவித தனிபண்பை கண்டறியலாம். குறியீடு (DNA தண்டு) மூலமாக தேவைப்படும் ஆர்வமுடைய பண்பகத்தை கண்டறியலாம்.  இதன் மூலமாக விஞ்ஞாநிகள் குறிப்பிட்ட பண்பகத்தை செடியில் உள்ளதா எனக் கண்டறிவர்.

மரபிணைவு மூலமாக விஞ்ஞாநிகள் நிறத்திரியிலுள்ள பண்பு அமைந்திருக்கும் இடத்தை கண்டறிவதுடன் அந்த பண்பின் நெருக்கமான பிணைவை கண்டறியலாம். இணக்கப்படம் மூலமாக தோற்றவிதக் குறியீடை கண்டறிதல் மட்டுமல்லாது அளவு முறை தன்மை வரைபடத்தையும் உருவாக்கலாம்.மரபியல் சார்ந்த வரைபடம் மூலமாக விஞ்ஞாநிகள் ஒரு பயிரிலுள்ள குறிப்பிட்ட பண்பகம் உள்ளதா என்பதற்கு தீர்வு கண்டறியலாம் அல்லது விதையிலிருந்து பிரிக்கப்பட்ட DNA  மூலமாகவும் கண்டறியலாம். மரபு குறியீடு மூலமாக கொடையாளி மூல உயிரியிடமிருந்து ஏற்பி உயிரிக்கு மரபனு மாற்றம் அடைந்ததைக் கண்டறியலாம். இம்முறையின் மூலமாக  அளவு முறை தன்மையை மூல உயிரியிடமிருந்து ஏற்பி உயிரிக்கு மரபனு மாற்றம் செய்யலாம். இம்முறையை "அளவு முறைத் தன்மை கூர்முனை கோபுரம்" என்றழைக்கப்படுகிறது.

மரபுக் குறியீட்டின் செயல்பாடுகள்

  • மரபியல் வேற்றுமை மதிப்பீடு மற்றும் பண்பக பண்ணையின் பண்புரு வருணணை
  • பயிர்வகைகளின் மூலக்கூறு ரேகை ஆய்வு.
  • தனிபண்பு மற்றும் அளவு முறை தன்மை கண்டறிதல்
  • மரபு குறியீடு தேர்வு செய்ய உதவுகிறது.
  • பண்பகத்தின் விசைப்படி கண்டறிதல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014