பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

உயிர் எரிபொருள் மர காப்பீடு

உலகத்தின் 80 எரிபொருள் தேவையான பாறைகளிலிருந்து கிடைக்கக்கூடிய எரிபொருள்களின் தேவை அதிகரிப்பதால் நாளுக்கு நாள் எரிபொருள்களின் அளவு குறைந்து கொண்டே இருக்கின்றது. இதை ஈடு செய்வதற்கான மாற்று எரிபொருள் தான் உயிர் எரிபொருளாகும். சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கும் எரிபொருளை உருவாக்குவதற்கு, அரசு பல்வேறு விதமான மானியங்கள் மற்றும் உதவித் தொகைகள் உயிர் எரிபொருள் மரம் வளர்ப்பவர்களுக்கு தருகிறது.

காப்பீடு பெறுவதற்கான தகுதி

உயிர் எரிபொருள் மரம் வளர்ப்பவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஏதாவது குறிப்பிட்ட காரணங்களால் இழப்பு ஏற்படும் போது வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டின் கீழ் பயன்பெறும் மரங்கள் ஜெட்ரோபா, புங்கம், வேப்பமரம், மகூவா, பொலங்கா, சைமருபா.

காப்பீட்டு பாதுகாப்பு

வெள்ளம், புயல், பனி, பூச்சி மற்றும் நோய்தாக்குதலால் மரங்களுக்கு ஏற்படும் மொத்தம் இழப்பு (அ) சேதத்தில், மரங்களுக்கு இடப்பட்ட இடுபொருள்களுக்கான செலவை ஈடுசெய்ய இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட உயிர் எரிபொருள் மரம் (அ) மொத்த மரங்கள் மடிவது (அ) பொருளாதார பயன் ஏதும் தராமல் இருப்பதே மொத்த இழப்பு என்பதாகும்.

காப்பீடு தொகை

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளரும் மரத்தின் தன்மை, மரத்தின் தன்மை, மரத்தின் வயது, அதற்கேற்ப ஆகும் இடுபொருள் செலவைப் பொறுத்து காப்பீடு தொகை அளிக்கப்படுகிறது. இடுபொருள்களுக்கு ஆகும். செலவில் 125% முதல் 150% வரை ப்ரிமியமாக செலுத்தப்படுகிறது. இந்த ப்ரிமியம் தொகை, மரத்தின் தன்மை இடர்பாடுகள் ஏற்படும் தன்மை, புவியியல் பரப்பு, காப்பீட்டாளர்களால் செலுத்தப்படும் தொகை, தள்ளுபடிகள், காப்பீடு செய்பவரின் செலவுகள் மற்றும் பல விதமான செலவுகளைப் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காப்பீட்டுக் காலம்

பொதுவாக ஒரு வருடம் காப்பீடு தரப்படுகிறது. சில சமயங்களில் 3 (அ) 5 வருடங்களுக்கு தரப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013