பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

திராக்ட்சா விமா /திராட்சை காப்பீடு

குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள திராட்சை உற்பத்தியாளர்களுக்கான ஒரு தனிப்பட்ட காப்பிடே திராட்சை காப்பீடு. மோசமான வானிலை மற்றும் பனிமழை பெய்யும் காலங்களில் ஏற்படும் இடர்பாடு இழப்புக்களை ஈடு செய்வதற்கு திராட்சை உற்பத்தியாளர்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீட்டு பாதுகாப்பு

ஒழுங்கற்ற பருவ மழை, பனி மழை குறிப்பிட்ட புவியியல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் பொழுது, திராட்சை மகசூல் குறைந்தால், இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீட்டு தொகை பெறுபவர்கள்

நாசிக், மகாராஷ்டிராவில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் திராட்சை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, வானிலை மாறுபாடுகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு காப்பீடு தரப்படுகிறது. 

காப்பீட்டுக் கட்டணம்

பயிர், இடஅமைப்பு, காப்பீடு பாதுகாப்பு கோருவது, முந்தைய ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெய்த முந்தைய பருவ மழையின் அளவு, பயிரிடப்படும் பகுதியைப் பொறுத்து காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013