மரக்கூழ் மரக் காப்பீடு 
                 
                காப்பீடு பெறுவதற்கான தகுதிகள் 
                 
                மரக்கூழ் மரம் வளர்ப்பவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணங்களால் மகசூல் பாதிக்கும் பொது அவர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காரங்களால் மகசூல் பாதிக்கும் போது அவர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட புவியியல் பரப்பில் போதுமான கட்டமைப்பு மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகள் மரக்கூழ் மரங்களுக்கு அளிக்கப்படுகிறது. காப்பீடு பெறும் மரங்கள் 
                1.யூகலிப்டஸ் 
                2.டாப்ளார் 
                3.சுபாபுல் 
                4.சவுக்கு 
                 
                காப்பீடு பாதுகாப்பு 
                 
                வெள்ளம், புயல். பனி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மரத்துக்கு மொத்த இழப்பு (அ) சேதம் ஏற்பட்டால் இடு பொருள்களுக்கு ஆகும் செலவை இந்த காப்பீடு தருகிறது. மரங்கள் இறப்பது (அ) பொருளாதார பயன் தராமல் இருப்பது போன்றவற்றால் மரங்களுக்கு ஏற்படும் இழப்பு (அ) சேதமே மொத்த இழப்பாகும். 
                 
                காப்பீடு தொகை 
                 
                மரத்தின் தன்மை, மரத்தின் வயதை பொருத்து, ஒரு யூனிட்பகுதிக்கு ஆகும் இடுபொருள் செலவைப் பொறுத்தும் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இடுபொருள்களுக்கு ஆகும் செலவில் 125% முதல் 150% வரை காப்பீடு தொகை அளிக்கப்படுகிறது. 
                 
                காப்பீட்டுக் கட்டணம் 
                 
                அ.மரத்தின் இடர்பாடுகள் 
                ஆ.மரத்திற்கு ஏற்படும் இடர்பாடுகள் 
                இ.புவியியல் பரப்பு 
                ஈ.இடர்பாடுகளுக்கான கட்டணம் 
                உ.தள்ளுபடிகள் 
                ஊ.காப்பீடு செய்பவரின் செலவுகள் மற்றும் இதர செலவுகளைப் பொறுத்து காப்பீட்டு  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
                 
                காப்பீட்டுக் காலம் 
                 
                பொதுவாக ஒரு வருடம்காப்பீடு தரப்படுகிறது. சில சமயங்களில் 5 வருடங்களுக்கு காப்பீடு தரும் வசதியும் உள்ளது. 
              |