பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

கோதுமை காப்பீடு

வெப்பநிலை மற்றும் அங்கக உயிர்ப்பொருள் பயிர்/ வீரியம்

பயிர் வீரியம் /அங்கக உயிர்ப் பொருள் (இயல்பான தவைழி வேறுபாட்டு குறியீடு (என்.டி.வி.ஐ) மற்றும் வானிலை / (வெப்பநிலை) அளவீடுகள் ஒன்றிணைந்த பொருளின் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட தனிப்பட்ட தொழில்நுட்பமே கோதுமை காப்பீடு ஆகும்.

காப்புறுதிப் பாதுகாப்பு

குறிப்பாக கோதுமையின் விளைச்சல் (அ) அங்கக உயிர்ப்பொருள் குறைவதால்/ பயிர் வீரியம் இயல்பான தழைவழி வேறுபாட்டு குறியீட்டுடன் ஒப்பிடும்போது அந்த தாலுக்கா அல்லது வட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் குறைந்திருந்தால் / (ஆ) அதிக வெப்பநிலை தொடர்ந்து மார்ச் 1 (அ) 2வது வாரங்களில் நிலவி விளைச்சல் குறைந்தால், வேளாண் காப்பீட்டு நிறுவனம் காப்பீடு பணத்தை, கொடுத்து ஈடு செய்கிறது. 

காப்பீட்டுக் காலம்

கோதுமை பயிரின் உச்சகட்ட வளர்ச்சி பருவத்தின் போது, குறிப்பாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் காப்பீடு செய்யப்படுகிறது.

காப்பீட்டுக் கட்டணம்

புவியியல் பகுதி, குறிப்பிட்ட புவியியல் பகுதியில் நிலவும் வெப்பநிலை அளவுகள் மற்றும் அங்கக உயிர் பொருளின் அளவுகளை பொறுத்து காப்பீட்டு கட்டணம் கணக்கிடப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013