பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அசுவினி: கிரியோசோமா லேனிஜிரம்

அறிகுறிகள்:

  • சாறு உறிஞ்சப்படுவதால் மரம் வளர்ச்சி குன்றிப் போகும். சில சமயம் வேர்களில் வீக்கங்கள் காணப்படும்.

பூச்சியின் விவரம்:

  • இளஞ்சிவப்பான சிறிய பூச்சிகள் பஞ்சு போன்ற வெள்ளை மெழுகால் மூடப்பட்டிருக்கும், மரங்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும்.

கட்டுப்பாடு:

  • அபிலினஸ் மேலி (Aphelinus mali) எனும் ஒட்டுண்ணியை மரத்திற்கு 1000 எனும் விகிதத்தில் விட்டால் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும்.
  • மிதைல் டெமிட்டான் (அ) டைமீதோயேட் 1 மிலி / 1லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.
  • வேரில் அசுவுணி தாக்கினால் பாராடைகுளோரோ பென்சஸின் குறுணைகள் மரத்திற்கு 30 – 110 கிராம் அளவில் மரத்தைச்சுற்றி மண்ணுக்குள் போடலாம்.
கிளைகளில் அசுவினி       
பஞ்சுப்பொதி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015