பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காட்லிங் வண்ணத்துப்பூச்சி : சிடியா போமானெல்லா

பூச்சியின் விவரம்:

  • பழுப்பு நிற இறக்கையின் அடிப்புறத்தில் சிவப்பு நிற அடையாளங்களைக் கொண்ட சிறிய அந்துப்பூச்சி தன் முட்டைகளை  சிறிய காய்களின் மீது வைக்கிறது.
  • அதிலிருந்து வெளிவரும் செந்நிற புழுக்கள் பழங்களின் உள்ளே சென்று தின்று சேதப்படுத்தி, பழங்களை உதிரச்செய்யும். கூட்டுப்புழுக்கள் தண்டுப்பகுதியில் மரப்பட்டைகளுக்கிடையில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • உதிர்ந்த பழங்களைப் பொறுக்கி எரித்தல்.
  • தண்டுப்பகுதியில் காணப்படும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்தல்.
  • கார்பரில் 50 சதம், 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கலந்து தெளித்தல்.
ஆப்பிளை சேதமடையச் செய்தல்  
சேதமடைந்த இடம்

 

 

 

 

 

 

 

புழு   
பூச்சி

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015