பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நாவாய்ப்பூச்சி: கார்வல்ஹோயா அரிக்கே
சேதத்தின் அறிகுறிகள்:

  • நடுக்குறுத்து இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • இலைகள் காய்ந்து விழுந்துவிடும்
  • நடுக்குறுத்து வளர்ச்சி குன்றி சுருங்கி விரிய முடியாமல் போகும்

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சுகள்: கரு ஊதா நிறம் உடலில் தலைப்பகுதி இளம்மஞ்சளாகவும், சிவப்புநிற கண்களும் பெற்றிருக்கும்
  • வளர்ந்த புழுக்கள்: வயிற்றுப்பகுதியில் கருப்புநிறம் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • டைமீதோயேட் @0.05 சதத்தை தெளிக்கவும்
  • ஃபோரேட் 10 சத குறுணை 10 கிராம் அளவு ஒரு மரத்திற்கு நடுக்குருத்துப்பகுதியில் போட்டு வைக்க வேண்டும்
arecanut

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015