பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வேர்ப்புழு: லூக்கோஃபோலிஸ் பர்மிஸ்டெரி
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வேர்களை கடித்து சேதப்படத்தும்
  • தாக்கப்பட்ட மரங்கள் நோய்வாய்ப்பட்டது போல் காட்சியளிக்கும்
  • இலைகள் மஞ்சளாகி விடும்
  • தண்டு சிறுத்து விடும், காய்கள் கொட்டி விடும்

பூச்சியின் விபரம்:

  • புழுக்கள்: வண்டின “C” வடிவப் புழுக்களின் தலை பழுப்பு நிறமாக இருக்கும்
  • வண்டுகள்: பழுப்பு நிறத்தில் காணப்படும் .
arecanut arecanut

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வண்டுகளை சேகரித்து அழிக்கவும்
  • மரத்திற்கு அடியில் உள்ள மண்ணை கிளரிவிடவேண்டும்
  • மண்ணில் கரிம உாபொருட்களையும், ஊண் தடுப்பான்களையும் (வேம்பு, புங்கம், பிண்ணாக்கு) இடவேண்டும்
  • ஃபோரேட் 10 சத குறுணையை ஒரு மரத்திற்கு 15 கிராம் வருடத்திற்கு இரண்டு முறை மண்ணில் இடவேண்டும். அதாவது தென்மேற்கு பருவ மழைக்கு (மே) முன்பும், வடகிழக்கு பருவ மழை பின்பும் (செப்படம்பர் - அக்டோபர்) இடவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015