பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழதுரு இலைப்பேன்: கேட்டனாபோதிரிப்ஸ் ஸிக்னிபெனிஸ்

சேதத்தின் அறிகுறி:

  • முதலில் காய்களின் தோலில் நீ‌ரில் நனைத்த புள்ளிகள் போ‌ன்று ஆங்காங்கு தோன்றும். இப்பேன்கள் இரண்டு ஒட்டிய காய்களுக்கு இடையே இருந்து சாற்றை உருஞ்சும்.
  • பின்பு இவை காய்களில் துருப்போன்ற செந்நிற, பழுப்பு நிறத்தில் சொரசொரப்பான கோடுகள் காணப்படும்.
  • இத்துருப் போன்ற கோடுகள் மேலும் அதிக‌ரிப்பதோடு, இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
  • தோலின் உள்ளே உள்ள சதையின் சுவை மற்றும் தன்மை மாறாது.
  • பேன்களின் தாக்குதல் முற்றும் போது, காய்களில் ‌வெடிப்புகள் ‌தோன்றும்.
காய்களில் துருப்போன்ற செந்நிற புள்ளிகள் காணப்படும் காய் தோலில் துருப்போன்ற செந்நிறக் கோடுகள் பரவும் பழத்தில் வெடிப்புகள் காணலாம் இலைகள் மஞ்சளாகும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை : பேன் முட்டைகள் சாதாரணமாக கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தண்டின் மேற்பகுதி அல்லது காய்களுக்கு அடியிலோ இடப்படுகின்றன. கோடையில் முட்டைகள் 8 நாட்களில் பொரிந்து விடும்.
  • புழுக்கள் : இறக்கைகள் அற்ற வெண்மை நிற சிறிய புழுக்கள் பெரிய பேன்களைப் போன்ற அதே வடிவத்தைக் கொண்டிருக்கும். புழுக்காலம் 8-10 நாட்கள் ஆகும்.
  • கூட்டுப்புழு : வெண்மை நிற புழுக்களைப் போன்ற நகரக் கூடிய இவை 1 மி.மீ நீளமுடையவை.
  • பேன் : முதிர்ந்த பேன் 1.5 மி.மீ. நீளத்தில் மெல்லிய உடலுடன் மஞ்சள் முதல் தங்கப் பழுப்பு நிறத்தில் இறகு போன்ற இறக்கைகளை கொண்டுள்ளன. இறக்கையின் முன் பகுதி கருமை நிற முடிகளால் மென்மையாகக் காணப்படும். இவை முதிர்ந்த பேன்களுக்கு நடு வயிற்றுப் பகுதியில் நீண்ட கரு நிற தன்மையைக் ‌‌கொடுக்கின்றது. துருக்காய்ப் பேன்களில் இறக்கையின் அடிப்பகுதியில் இரு கண் போன்ற புள்ளிகள் காணப்படும். இதன் மூலம் பூக்களைத் தாக்கும் சிறு ஆண் பேன்களிலிருந்து, துருக்காய் பேன்களை பிரித்தறிய ஏதுவாகும்.
முட்டை புழு கூட்டுப்புழு இலைப்பேன்

கட்டுப்படுத்தும் முறை:

  • தானாக தோன்றிய தாவரங்களையும், உதாசீனப்படுத்திய தோட்டத்தையம் அழித்துவிடவேண்டும்
  • நடுவதற்கு பூச்சி தாக்காத மற்றும் நல்ல கன்றுகளை தேர்வு செய்யவும்
  • நடுவதற்கு முன்னால் வெண்ணீர் முக்கி எடுக்க வேண்டும்
  • முன்னதாகவே குலைகளை மூடிவிடவேண்டும்
  • மூடிய குலைகளுக்குள் ஏதாவது சேதம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கவும்
  • குளோர்பைரிபாஸ் மருந்தினை குலைகள், தண்டுகள் மற்றும் கன்றுகள் மீது தெளிக்கலாம்
  • பைப்ரோனில் மற்றும் பைபென்த்ரின் மருந்தினை மரத்தின் அடியில் உள்ள மண்ணில் தெளிக்கலாம்
  • க்ரைசோபா மற்றும் பொறிவண்டுகளை விட்டு அழிக்கலாம்.
  • கண்ணாடி இறக்கை பூச்சி, பொறி வண்டு போன்ற காக்சினெலட் உண்ணிகளை தோட்டத்தில் விடுவதன் முலம், துருக்காய் பேன்களை கட்டுப் படுத்தலாம்.
  • எறும்புகள் கூட மண்ணிலிருந்து கூட்டுப்புழுக்களை அகற்றுவதில் உதவி செய்கின்றன.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015