பயிர் பாதுகாப்பு :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெட்டுப்புழு :  அக்ரோடிஸ் இப்ஸிலான்

அறிகுறிகள்

  • புழுக்கள் 2-4 இன்ச் ஆழத்தில் மண்ணில் இருக்கும்
  • புழுக்கள் இளம் செடிகளின் அடிப்புறம், கிளைகள் அல்லது வளரும் செடிகளின் தண்டுகளை வெட்டும்.
  • வெட்டிய செடிப்பகுதிகளை மண்ணுக்குள் எடுத்துச் சென்று உண்ணும்.
  • புதைந்துள்ள தண்டு அல்லது கிளைகள் கண்டிப்பாகி புழுக்கள் மறைவதற்கான இடமாக இருக்கும்.

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் – மண்கட்டிகள், தண்டின் அடிப்பாகம், இலையின் இரண்டு பக்கமும் காணப்படும்.
  • புழுக்கள் – அடர் பழுப்பு நிறத்துடன் சிவப்பு நிற தலையுடன் காணப்படும்
  • கூட்டுப்புழு – மண் கூட்டுக்குள் வளரும்
  • தாய்ப்பூச்சி – பழுப்பு நிறத்தில், எண்ணற்ற அலை வரிகள் மற்றும் புள்ளிகளுடன் 3 – 5 செ.மீ அளவுக்கு இறக்கைகளின் குறுக்கே காணப்படும்.

கட்டுப்பாடு

  • ஆழமான வெயில் உழவு செய்ய வேண்டும்.
  • நன்கு மட்கிய அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
  • அக்டோபரின் கடைசி வாரத்தில் பருவத்துக்கு முன்னரே விதைக்க வேண்டும்.
  • கோதுமை அல்லது பின் விதை அல்லது கடுகு பயிருடன் இடைப்பயிரிட வேண்டும்.
  • ஆரம்பகாலத் தாக்குதலின் போது பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • தக்காளி அல்லது வெண்டைச் செடியை வயலின் அருகில் பயிரிடக் கூடாது.
  • துலுக்கமல்லி செடியை வரப்பு ஓரங்களில் பயிரிட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து தாய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • குயினல்பாஸ் 25 இ.சி 1000 மி.லி /  எக்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
  • அதிகத் தாக்குதலின் போது, ஸ்பார்க் 36 இ.சி 1000 மிலி / எக்டர் அல்லது ப்ரோபெனோபாஸ் 50 இ.சி 1500 மிலி /  எக்டர் என்ற அளவில் 500 – 600 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015