பயிர் பாதுகாப்பு :: வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டுக்கூன் வண்டு : பெம்ஃபிருலஸ் அஃபினிஸ்

சேதத்தின் அறிகுறிகள்:
  • தண்டின் அடிப்பாகத்தில் வீக்கங்கள் இருக்கும்.
  • இளஞ்செடிகள் வாடிக் காய்ந்து விடும்.
  • முற்றிய செடிகள் - வீரியம் மற்றும் வலிமை குறைந்து விடும். காற்று வேகமாக வீசும் பொழுது கணுக்கள் ஒடிந்துவிடும்.
வண்டினப்புழு வண்டு

பூச்சியின் விபரம்:

  • வண்டினப்புழு : வெண்மையானது கால்களற்றது.
  • வண்டு : சிறியதாகவும், பழுப்பு நிறத்துடனும் முதுகு பகுதியில் சிறிய வெள்ளைக் கோடுடனும் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.
  • ஹெக்டேருக்கு கார்போஃபிரான் குறுனை 30 கிலோ (அ) ஃபோரேட் குறுனை 10 கிலோ மண்ணில் இடவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016