பயிர் பாதுகாப்பு :: வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தத்துப்பூச்சி : அம்ரேஸ்க்கா டிவாஸ்டென்ஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் இலைகள் மஞ்சளாக மாறிவிடும்
  • தாக்கப்பட்ட இலைகளின் ஓரங்கள் கீழ்நோக்கிச்சுருங்கி காணப்படும் அதன் உட்புறம் சிவப்பு நிறமாக மாறும்.
  • நாளடைவில் தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமாக நெருப்பால் தீயந்தது போன்று நிறமாற்றம் பெறும்
  • இலையை கசக்கும் பொழுது அதன் ஓரங்கள் பொடிபொடியாக நொறுங்கி விடும்
  • செடிகளின் வளர்ச்சிக்குன்றி காணப்படும்

குஞ்சுகள் பூச்சி

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள்: இளம் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • பூச்சி: வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்):
    • இமிடாகுளோஃபிரிட் @ 100 மி.லி / ஹெக்டேர்
    • மீதைல் டிமீட்டான் @ 500 மி.லி /  ஹெக்டேர்
    • டைமீதோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
    • பாஸ்ஃபாமிடான் @ 600 மி.லி / ஹெக்டேர்
    • வேப்பம் கொட்டை வடிநீர் @ 5சதம்.
அறிகுறி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016