பயிர் பாதுகாப்பு :: வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவிணி : ஏஃபிஸ் காசிப்பை

சேதத்தின் அறிகுறிகள்:
  • இலையின் அடிப்பாகத்திலும், குருத்துப் பகுதிகளிலும் இலைச் சாற்றை உறிஞ்சி வாழும்
  • இலைகள் சுருங்கி, சுருண்டு விழுந்து விடும்
  • செடியின் வளர்ச்சிக் குன்றிவிடும்
  • பூச்சியில் இருந்து வெளியேறும் தேன் போன்ற திரவம் கரும்புகை பூசணம் ஏற்படுத்துகிறது

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சு: மஞ்சள் அல்லது பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
  • பூச்சி: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். மென்மையான உடலை உடையது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
  • பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்):
    • இமிடாகுளோஃபிரிட் 200 SL @ 100 மி.லி / ஹெக்டேர்
    • மீதைல் டிமீட்டான் 25 EC @ 500 மி.லி /  ஹெக்டேர்
    • டைமீதோயேட் 30 EC @ 500 மி.லி / ஹெக்டேர்
    • பாஸ்ஃபாமிடான் 40 SL @ 600 மி.லி / ஹெக்டேர்
    • வேப்பம் கொட்டை வடிநீர்  5 சதம்
  • இறக்கை உள்ள அசுவினிகளின் நடமாட்டத்தை அறிய மஞ்சள் வண்ண ஒட்டு பொறி வைக்கவேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016