பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி நோய்

நோய்க் காரணி செர்க்கோஸ்பொரா கனசன்ஸ்

அறிகுறிகள்

  • இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகள் தோன்றுகின்றன.
  • புள்ளிகள் சாம்பல் நிறமாக நடுவிலும். அதனைச் சுற்றி பழுப்பு நிற வளையத்துடனும் காணப்படும்.
  • இலைப்புள்ளிகள் நாளடைவில் ஒன்றொடொன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் காய்நது கருகி விழுந்துவிடும்.

பரவுதல்

  • நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவகிறது.

தடுப்பு முறைகள்

  • மான்கோசெப் எக்டருக்கு 1 கிலோ (அ) கார்பண்டாசிம் 200 கிராம் ஆகியவற்றைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019