பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

அடிச்சாம்பல் நோய்: பெரானோஸ்போரா பாராஸ்டிகா

அறிகுறிகள்:

  • இளம் செடிகளைத் தாக்கும். விதை உற்பத்தியிலிருந்து வட இந்தியாவில் பொதுவாகத் தோன்றும். விதை உற்பத்தியின் போது அதிக ஈரப்பதம் நிலவினால் நோயின் தாக்கம் அதிகமாகும்.
  • இனம் நாற்றுகளில் நிறமாற்றம் ஏற்படும். தாக்கம் அதிகமாகும் போது மடிந்துவிடும்.
  • ஊதாநிறப்புள்ளிகள் (அ) மஞ்சள் கலந்த பழுப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் தோன்றும். இலையினட் அடிப்புறத்தில் வெள்ளை நிற சாம்பல் போன்ற பூசன வளர்ச்சி தோன்றும்.

கட்டுப்பாடு:

  • மெட்டாலாக்ஸில் (ஏப்ரான் மகராம்) / கிலோ விதை) என்ற அளவில் விதை நோர்த்தி செய்ய வேண்டும்.
  • மெட்டலாக்ஸில் (ரிடோனில் 0.4% ) தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015