பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கேரட
பஞ்சு போன்ற மென்மை அழுகல் நோய்/வெள்ளை பூசணம்: ஸ்கெலரோட்டினா ஸ்கெலரோடியேரம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகளில் நீர் நனைத்த, ஆலிவ் பச்சை புண்கள் சரிந்த திசுக்களுடன் இணைந்து இருக்கும்
  • புண்கள் முழு இலை மற்றும் காம்புகளில் வேகமாக பரவி இதழ் போன்ற அமைப்பில் பாதிக்கப்பட்ட திசுக்களை சூழ்ந்து  இருக்கும்
  • இலைகள் ஏராளமான பஞ்சுகள் மற்றும் வெள்ளை பூசனம் மூலம் மூடப்பட்டு இருக்கும்
  • மேம்பட்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட திசுக்கள் வெளிறிய  தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன மற்றும் எப்போதாவது முழு செடியும் சரியக்கூடும்
  • பெரிய கறுப்பு ஸ்க்ளிரோசியா (2 முதல் 20 mm) உட்புறமாக உள்ள இலைக்காம்புகள் அல்லது வெளிப்புறமாக பதிக்கப்பட்ட பூசணம் மூலம் தோன்றுகிறது
பாதிக்கப்பட்ட திசு பஞ்சுகள் போன்ற வெள்ளை பூசனம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கேரட் பாதிக்கப்பட்ட கேரட்

நோய் காரணி:

  • காரணிப்பொருளாக- மண் - ஸ்க்ளிரோசியா, மைசிலியா அல்லது அச்கொச்போர்கள் மூலம் ஏற்படும்
  • வெப்பநிலை-  12.9 முதல்  18.5°C
கட்டுப்படுத்தும் முறை:
  • சேமிப்பு- நல்ல காற்றோட்டம்
  • சுத்தமான கொள்கலன்கள் பயன்பாட்டு, 0 °C அருகே பராமரிப்பு
Source of Images:
http://www.gov.mb.ca/agriculture/crops/plant-diseases/print,sclerotinia-carrots.html
http://pnwhandbooks.org/plantdisease/carrot-daucus-carota-cottony-rot

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015