பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் நோய்கள்
தேமல்

அறிகுறிகள்

  • இலையின் அளவு குறையும், இலையின் வடிவம் உருமாறி முறுக்கிக் காணப்படும்
  • பாதிப்படைந்த செடிகளில், கிழங்கு பிளவும்பட்டுக் காணப்படும் மற்றும் செடியின் வளர்ச்சியும், விளைச்சலும் குறைந்துவிடும்
  • விதை காரணிகள்  மற்றும் வெள்ளை ஈ பெமிசியா டபாசி போன்றவையால் நச்சுயிரி பரவும்

கட்டுப்பாடு

  • நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதை காரணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்ப நிலையிலேயே அகற்ற வேண்டும்
  • வெள்ளை ஈ கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுபொறி மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் களை ஓம்புயிரி அகற்றுதல், வேப்ப எண்ணெய் 3% அளவில் தெளிக்கவும் அல்லது மீத்தேல் டேமட்டான் 2 மி.லி தெளிக்கவும்
  • டைமெத்தோயேட் 1 மி.லி. அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம்
  • தமிழ்நாடு மற்றும் கேரளா ஏற்ற நோய் எதிர்ப்புச்சக்தியான சிடிசிஆர்ஆர்ஐ கோ(டிபி) 5 - ஸ்ரீபத்பநாபா இரகங்களுக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015