பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு

நாற்று கருகல்: பைட்டோதோரா கொலகேசியே
அறிகுறிகள்

  • இந்நோயினால் நாற்றுக்கள் இறந்துவிடுகின்றன.
  • இலையின் இரண்டு பாகத்திலும் வெளிர் பச்சை நிறத்தில் திட்டு திட்டாக பரவி காணப்படும். இவை இலையின் காம்பு வரையில் நீண்டு இலை தொங்கும் தோற்றத்தை அடைகிறது.
  • இதில் பறிக்கப்பட்ட இலையிலிருந்து தண்டிற்கு நோய் பரவுகிறது. வளரும் முளையில் இந்நோய் பரவுவதால் செடிகள் இறந்துவிடுகின்றன.
  • இளம் இலைகள் முதிர்ந்த செடிகளில் குறைந்த அளவே பாதிக்கின்றன.
  • இலைப்புள்ளி மஞ்சள் நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாறுகின்றது.
  • இவ்வகையான இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் காய்ந்துவிடுகின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடுகின்றன. ஈரப்பாமான நிலையில் வெள்ளைநிறப் பூசணம் இலையின் அடிப்புறத்தில் காணப்படுகின்றன.

கட்டுப்பாடு

  • தண்ணீர் வடியாத வயல்களிலும் குறைந்த தாழ்வான பகுதிகளில் ஆமணக்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும்.
  • விதையை 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 3 கிராம், மெட்டாலக்ஸில் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் அல்லது மெட்டலக்சில் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

 

Castro Castro