பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: ஆய்டியாப்சிஸ் டாரிகா

அறிகுறிகள்

  • செடியின் எல்லா வளர்ச்சி நிலையிலும் இந்நோய் பரவுகிறது.
  • இலையின் மேல் பகுதியில் வெள்ளைநிற பூசணம் படிந்திருக்கும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி பின்னர் இறந்துவிடுகின்றன.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள், தண்டுகள், காய்களில் பூசண வித்துக்கள் காணப்படுகின்றன.

கட்டுப்பாடு

  • வயல்களில் முந்திய பயிரின் கழிவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் அல்லது டைதேன் எம் – 45 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.



Powdery coating on leaflets

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015