பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கண்ணாடி இறக்கை நாவாய் பூச்சி: ஸ்டேபாநி ஸ் ட்டிபிகா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஓலைகளின் மேற்பகுதியில் வெண்ணிறப் புள்ளிகள் .
  • இப்பூச்சிகள் ஓலைகளிலிருந்து சாறினை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. அதோடு இவை பைட்டோபிளாஸ்மா வேர் அழுகல் நோயினை பாதித்த மரங்களிலிருந்து நல்ல மரங்களுக்கு தொற்றுவிக்கும் காரணியாகச் செயல்படுகின்றன.
இலைகளில் வெண்ணிறப் புள்ளிகள்

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • இளம் பூச்சி: வெள்ளை நிற உடலில் அடர் நிற புள்ளிகள் உடையவை.
  • வளர்ந்த பூச்சி: வளர்ச்சியடைந்த பூச்சிகள் வெண்ணிறத்துடன், கண்ணாடி போன்ற வலையமைப்புடன் இறக்கைகள் கொண்டிருக்கும்.
ஸ்டேபாநி ஸ்ட்டிபிகா

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • இப்பூச்சி தாக்கப்பட்டுள்ள ஓலைகளை அகற்றி, அழிக்கவும்.

இராசயன முறை:

  • கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்:
    • மாலத்தியான் 50 EC - 2 மி.லி/ லி
    • டைமெத்தோயேட் 30 EC -1 மி.லி /லி
    • மெத்தில் டெமட்டான் 25 EC - 1 மி.லி / லி
    • பாஸ்போமிடான் 40 SL - 1.25 மி.லி / லி
    • 3% வேப்ப எண்ணெய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015