பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செதில் பூச்சிகள்: ஆஸ்பிடியோட்டஸ் டெஸ்ட்ரக்டர்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • செதில் பூச்சிகள் தென்னை ஓலை மற்றும் பாளைகளைத் தாக்குகின்றன.
  • இப்பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும்போது, அது பூம்பாளைகள், குரும்பைகளில் மற்றும் ஓலைகளின் அடிப்பகுதியில் சாறை உறிஞ்சி விடுவதால் ஒரு கடினத்தன்மை உருவாகிறது.
  • இப்பூச்சிகள் கட்டியான செதில் உறைகளை உருவாக்கி அதில் இருந்து கொண்டே மஞ்சள் நிறமாற்றத்தை இலைகளில் ஏற்படுத்துகின்றன.
  • இளம்பூச்சிகள், இக்கூட்டிற்குள் இருந்தே சாறை உறிஞ்சி வளர்ச்சியடைகின்றன.
  • தாக்கப்பட்ட மரத்தின் ஓலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி தொலைவிலிருந்து பார்க்கும்போதும் நன்கு வேறுபாடு தெரியும்.
  • அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களில் ஓலைகள் காய்ந்து விழுந்து விடுவதால் கொண்டைப்பகுதி முழுதும் பட்டுப்போய்விடுகிறது. அதோடு புதிய ஓலைகளின் வளர்ச்சி குன்றுதல், மகசூல் குறைதல் சில சமயங்களில் மரமே பட்டுப்போதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
  • செதில் பூச்சிகள் ஓலைகளின் அடியில் ஒட்டியிருக்கும் பகுதியில் மேலே மஞ்சள் நிறமாறுதல் தொடங்கி ஓலை முழுவதிற்கும் விரவிக் காணப்படும்.
இலைகளில் செதில்கள் தேங்காயில் செதில்கள் இலையில் மஞ்சள் புள்ளிகள்

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • முட்டை:இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்.
  • நிம்ப்: வட்ட வடிவ மெழுகுப் பொருளால் இளம் பூச்சிகள் சூழப்பட்டிருக்கும்.
  • முதிர்பூச்சி: வளர்ச்சியடைந்த பெண் பூச்சி வெளிர் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் உருண்டையாகவும், ஆண் பூச்சி நீள்வட்ட வடிவில் கட்டியான, சாம்பல் நிற உறைக்குள் காணப்படும். பெண்பூச்சிகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை, அதோடு அவை தமது வாழ்நாள் முழுவதும் உறைக்குள்ளேயே கழித்து விடுகின்றன. வளர்ந்த ஆண் பூச்சிகள் ஒரு ஜோடி இறக்கைகள் கொண்டுள்ளன. இவை உணவு உண்ணுவது இல்லை. பெண் பூச்சிகளைத் தேடி இனப்பெருக்கத்திற்காக அலைந்து கொண்டிருக்கும்.
புழு முதிர்பூச்சி

மேலாண்மை:

இராசயன முறை:

  • ரோயின் சோப் மீன் எண்ணெய் 2.5% (அ) மாலத்தியான் போன்ற ஏதேனும் ஒரு மருந்து தெளிக்கலாம். 20 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளித்தல் அவசியம்.

உயிரியல் முறைகள்:

  • பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் காக்சிநெல்லிட், சைலோகோரஸ் நைக்ரிடியஸ் போன்ற பூச்சிகளை தோப்பினுள் விடுவதால் செதில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015