பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைக்கருகல் நோய் : லேசியோடிப்ளோடியா தியோபுரோமே

தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைக்கருகல் நோய் இளந்தென்னை நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னை மரங்களை தீவிரமாக தாக்கும்.
  • இந்த நோய் கிருமி இலை மற்றும் காய்களை பாதிக்கும்.
  • பொதுவாக முதிர்ந்த தென்னை ஓலைகளில் கீழாக வெளிசுற்றில் உள்ள இலைகளை பாதிக்கும்.
  • பாதிப்பிற்குள்ளான ஓலைகள் நுனியிலிருந்து கீழ்வரை கருக ஆரம்பிக்கும். இவை எரிந்து போன தோற்றத்துடன் காணப்படும்.
  • காய்களின் நுனிபகுதியிலிருந்து ஒழுங்கற்ற அலை வடிவிலான அடர் சாம்பலிருந்து பழுப்பு நிற புள்ளிகள் விளிம்புகளில் காணப்படும்.
  • பூஞ்சையானது தேங்காய் பருப்பினுள் நுழைவதால், விதை சூழ்தசை சேதமடைகிறது.
  • பாதிக்கப்பட்ட காய்கள் வறண்டு, சுருங்கி, சிதைந்து, முதிர்வுக்கு முன்பே விழுந்துவிடுகிறது. இதன் மூலம் 10 முதல் 25 சதவிகிதம் வரை காய்களின் மகசூல் குறைகிறது.
  • இந்த அறிகுறியானது வருடம் முழுவதும் காணப்பட்டாலும் கோடைக்காலங்களில் பெரிதளவு தென்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைப்பகுதிகளில் உள்ள பூசண வித்துக்கள் மேற்கொண்டு நோயை பிற பகுதிகளுக்கு பரப்புகின்றன.
 
நுனி இலைக்கருகல் எரிந்து போன தோற்றம் பாதிக்கப்பட்ட விதை சூழ்தசை பாதிக்கப்பட்ட தென்னை  
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்

  • தீவிரமான பாதிப்பிற்குள்ளான இலைகளை அகற்றி எரித்து நோய் பரவலை தடுக்கவும்.

உயிரியல் முறை

  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் 200 கிராம் உடன் 50 கிகி தொழு உரம் (சாண எரு) + 5கிகி வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு என்ற விதத்தில் அளிக்கவும்.

இரசாயன முறைகள்

  • 1% போர்டோ கலவை அல்லது 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளிக்கவும் (கோடைக் காலங்களில் 45 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவும்)
  • கார்பன்டசிம் 2 கிராம் அல்லது ஹெக்சாகோனசோல் / டிரைடிமார்ப் 2 மிலி + 100 மிலி தண்ணீர் கலந்து (3 மாதம் இடைவெளியில் 3 முறை) வேரின் மூலம் செலுத்தவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் 2 கிகி கூடுதலாக பொட்டாசியம் சத்து இடவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015