வேர் வாடல்நோய்: ஃபைட்டோபிளாஸ்மா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • தண்டின் உச்சிப்பகுதி சாய ஆரம்பிக்கிறது.
  • இலை அளவு குறைகிறது.
  • ஓலைகள் முரண்பாடாக வளைந்து அல்லது மாட்டின் விலா எலும்புகளை போல் விலா வளைந்து காணப்படும்.
  • பூத்தல் தாமதமாவதுடன் மகசூலும் குறிப்பிட்ட அளவு குறைகிறது.
  • முக்கிய அறிகுறி இலைகளில் விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படுவதாகும். துவக்கத்தில் இலைகளின் மஞ்சள் நிறம் நுனி மற்றும் நடுப்பகுதிகளில் மட்டும் காணப்படும், இலைகள் கருகி வேர்ப்பகுதி அழுகி அழியத் தொடங்குவது மற்ற முக்கிய அறிகுறி் ஆகும். இலைகள் / ஓலைகள் உள்நோக்கி வளைந்து எலும்பு போன்று மாறும், குறும்பைகள் உதிர்தல் மற்றும் முதிர்ச்சி அடையாத காய்கள் உதிர்தலும் ஏற்படும்.
 
ஸ்டெபானிட்டிஸ் டைபிகா   பிரெளடிஸ்டா மொஎஸ்டா
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • நோய் முற்றிய, சரிவர மகசூல் தராத, வருடத்திற்கு 10 காய்கள் மட்டுமே தரும் மரங்களை வெட்டி அகற்றி விட வேண்டும்.
  • மரத்தை சுற்றி பசுந்தாள் உரங்களை வளர்க்கலாம்  - தட்டைப்பயிறு, சணப்பை, (குரோடலேரியா ஜன்சியா), மைமோஸா இன்விசா, கலபகோனியம் மியூகனாய்டஸ், பியுரேரியா பேசிலாய்டெஸ் முதலியவற்றை தென்னை சுற்றி வட்டப்பாத்தியில் ஏப்ரல் - மே மாதத்தில் விதைத்து செப்டம்பர் - அக்டோபரில் மண்ணுடன் கலந்து விட வேண்டும்.
  • ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் 250 லிட்டர் தண்ணீரை மரமொன்றிற்கு பாய்ச்ச வேண்டும்.
  • தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை பயிரியிட வேண்டும்.
  • போதுமான நீர்வடி வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

உயிரியல்முறை:

  • மரம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு  50 கிலோ தொழுஉரம் + 5 கிலோ வெப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும்.
  • பசுந்தாள் உரங்களான சணப்பை, தக்கைபூண்டு, தட்டைபயறு மற்றும் கலப்பகோணியம் போன்றவற்றை தென்னை மர குழிகளில் வளர்த்து மடித்து உழுதல் வேண்டும். இப்படி செய்வதால் வேர்வாடல் நோய்குறைந்து தேங்காய் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இரசாயன முறைகள்

  • ஆண்டுக்கு, பாதிப்புள்ள தோப்புகளில் மரம் ஒன்றுக்கு 1.3 கி.கி யூரியா, 2.0 கி.கி சூப்பர்பாஸ்பேட், 3.5 கி.கி பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
  • மரமொன்றிற்கு வருடத்திற்கு மக்னீசியம் சல்பேட் @ 500 கிராம் இடவேண்டும்.
  • பூச்சிகளை கடத்திகளை கட்டுப்படுத்த நுனிபகுதியிலுள்ள இரண்டு தென்னை  மட்டைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். 20 கிராம் போரேட் 10 G  உடன் 200 கிராம் மணல் கலந்து அல்லது வேப்பம் புண்ணாக்கு பவுடர்  250 கிராம் உடன் அதே அளவு மணல் கலந்து தென்னையின்  மரகுருத்தில்  இட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015