பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள்
இலைஅழுகல் நோய்: கொலிடோடிரைகம் கிளியோ ஸ்போரியாய்டஸ், எக்ஸெரோஹிலம் ரோஸ்டிரேடம் மற்றும் பியுஸேரியம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலை அழுகல் நோய் பொதுவாகஏற்கனவே வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களில் தோன்றுகிறது.  இந்நோயின் முதல் அறிகுறி,  நீரில் ஊறிய கரும்பழுப்புநிற புள்ளிகள் வேர் வாடல் நோய் பாதித்த குருத்திலைகளின் மீது தோன்றுவது ஆகும்.
  • மெதுவாக இந்த புள்ளிகள்பெரிதாகி,  ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தீவிரமாகி இளம் இலைகள் அழுகி விடுகின்றன.
  • ஒலைகள் விரியும் போது அழுகிய பகுதி காய்ந்து காற்றில் பறந்துவிடுகிறது.  இதனால் மீதம் உள்ள ஓலைகள் விசிறி போன்று தோன்றும். 
  • சில நேரங்களில் அறிகுறிகள் தீவிரமாகி குருத்துகள் விரியாமல் போகலாம்.
   
நீரில் ஊறிய பழுப்புநிற புள்ளிகள்   தீவிர இலை அழுகல்   ஓலைகள் விசிறி போன்று தோன்றும்
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • அழுகிய குருத்து மற்றும் அருகிலுள்ள இரண்டு ஓலைகளையும் அகற்றி விட வேண்டும்.

இரசாயன முறைகள்

  • பூஞ்சைகொல்லி ஹெக்சகோனசோல் - 2 மில்லி அல்லது மான்கோசெப் - 3 கி + 300 மில்லி தண்ணீர் கலந்து குருத்திலைகளின் அடியில் ஊற்ற வேண்டும்.  மித தொற்றுள்ள நேரங்களில் 2-3 முறை தெளிப்பது போதுமானது.
  • கொண்டை மற்றும் ஓலைகளுக்கு 1% போர்டோ கலவை அல்லது 0.5% காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.4% மான்கோசெப் மருந்தை ஜனவரி, ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் தெளிக்க வேண்டும்.  தெளிக்கும் போது குருத்திலைகள் மீது நன்குபடும்படி தெளிக்க வேண்டும். 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015