பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சிகள்: பிளேனோகாக்கஸ் வகைகள்
பிளேனோகாக்கஸ் சிட்ரை
பிளேனோகாக்கஸ் லிலேசின்ஸ்

  • இளஞ்செடிகளை பூச்சிகள் விரைவாக தாக்கும்
  • செடிகளின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும்
  • வெண்ணிறப்புள்ளிகள் இலைகளில் தோன்றும்
  • சிறு காய்கள் தோன்றும்
  • பூச்சியிலிருந்து வெளிவரும் தேன் போன்ற கழிவுப் பொருள் கரும்புகை பூசணம் ஏற்பட வழிவகை செய்கிறது

பூச்சியின் விபரம்:

  • ஆண் - சிறியது, இறகுடையது
  • பெண் - இறகுற்றது, நீள்வட்டவடிவமுடையது

கட்டுப்படுத்தும் முறை:

  • தேவையான அளவு நிழல் தரும் மரங்களை நடவேண்டும்
  • சிவப்பு எறும்புகளின் கூண்டுகளை அழிக்கவும்
  • எறும்புகளை கட்டுப்படுத்த குவினால்ஃபஸ் தூள் 1.5 சதம் அல்லது மாலத்தியான் 5 சதம் தூள்களை காஃபி மரத்தின் / நிழல் தரும் மரத்தின் அடியில் தூவ வேண்டும்
  • தாக்கப்பட்ட இலைப்பகுதியில் குவினால்ஃபஸ் 300 மி.லி தெளிக்கவேண்டும்
  • மேலே பயன்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி கரைசலை வேர்கள் நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்
  • டைமீதோயேட் 3 மி.லி / லிட்டர் கரைசலை இளஞ்செடிகளின் வேருக்கு அடியில் ஊற்றவேண்டும்

Crop Protection coffee Crop Protection Coffee

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015