பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழுப்பு செதில் பூச்சி: செய்சீசியா காஃபியே

சேதத்தின் அறிகுறிகள்:

  • இலையின் அடிபகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • தேன் போன்ற கழிவுபொருள் கரும்புகை பூசணம் ஏற்படுத்துகிறது

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சு: மஞ்சள், பசுமை கலந்த பழுப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். தட்டையான, நீள்வட்ட வடிவில் இருக்கும். உடலில் 'H' வடிவ மஞ்சள் நிற அடையாளம் இருக்கும்
  • பூச்சி: பெண் செதில் பூச்சி அரைகோள வடிவில் இருக்கும், கடினமான பழுப்பு நிற உறை உடலின் மேலிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • எறும்புகளை கட்டுப்படுத்த மாவுப்பூச்சியில் உள்ளதை இணைக்கவும்
  • செதில் பூச்சிகள் இருக்கும் கிளைகளை வெட்டி எித்து விடவேண்டும்
  • குவினால்ஃபஸ் 120 மி.லி உடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்


Coffee


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015