பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காஃபி பழ வண்டு: அரேயிசெரஸ் ஃபாஸிகுளேட்டஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • இப்பூச்சியின் தாக்கம் சேமிப்புக்கிடங்குகில் கடும்சேதத்தை உருவாக்கும்
  • தாக்கப்பட்ட காஃபி பழங்களை சிறுசிறு துளைகள் காணப்படும்
  • தாக்கப்பட்ட பழங்கள் சுருங்கி கருகிவிடும்

பூச்சியின் விபரம்:

  • வண்டு: வெளிர் சாம்பல் நிற வண்டில் கரும்புள்ளிகள் இருக்கும். உடலில் மெல்லிய உரோமங்கள் இருக்கும். இறக்கைகள் வயிறு பகுதி முழுவதையும் மூடுவதில்லை

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • சேமிப்புகிடங்களில் சீரான வெப்பநிலை, ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • கோனிப்பைகளை மாலத்தியான் 10 மி.லி + 2 கிராம் பைரித்திரம் இரண்டையும் 1 லிட்டர் தண்ணீரில் கலந்த கரைசலில் நனைத்து உபயோகப்படுத்தவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015