பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்

அறிகுறிகள்
  • வேர் அழுகுவதால் இலைகள் மஞ்சளாகி  பின்னர் முழுமையாக உதிர்ந்து விடும் . வேர்கள் நொருங்கக் கூடிய நிலையில் பழுப்பு நிறத்தில் அலைகள் போல பூஞ்சானை  கொண்டிருக்கும்
  • புசெரியம் பூஞ்சான்  தாக்குதலில் இலைகள் திடிரென்று மஞ்சளாகி பின்னர் முழுமையாக உதிர்ந்து விடும். வேர்கள் பழுப்பு நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட செடிகளை எரித்துவிடவும். பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் குழி பறித்து உகுந்த மருந்தை அடிக்கவும்.  
  • பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி மண்ணில் ஒரு செடிக்கு 1 கிலோ சுண்ணாம்பு  வீதம் இட்டு மண்ணின் பி ஹச் மதிப்பை அதிகரிக்கவும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிலும் பிடிசிபி அல்லது 0.4 சதவீதம் ப்ராசிகாலை மண்ணில் இடவேண்டும்.
  • தாவரங்களை  வீரியமாக பராமரிக்கவும்.

Image Source:

http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php

 

 

வேர் அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015