பயிர் பாதுகாப்பு :: குளிர்மண்டல காய்கறிகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலை பிணைக்கும் புழு: குரோசிலோடோமிய பைனொட்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலைகளில் கூட்டமாக இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித்தின்னும்
  • இலைகளை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அதற்குள் இருந்து கொண்டு இலைகளைச் சேதப்படுத்தும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: தட்டையான முட்டைகளை இலைகளின்   அடிபரப்பில் குவியல் குவியலாக இடும்
  • புழு: இளம் பச்சையும் ஊதா நிறமும் கலந்த வண்ணமுடையது. தலை சிவப்பு நிறத்தில் இருக்கும். உடலின் பக்கவாட்டில் பழுப்புநிறக்கோடுகளுடன் சிறிய உரோமங்களுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு: கூட்டுப்புழுவானது இலைபிணைப்பிற்குள் காணப்படும்
  • பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக முன் இறக்கையில் அலையான கோடுகளுடளும், புள்ளிகளுடனும் காணப்படும். பின் இறகு – கண்ணாடி போன்ற பளபளப்பாக காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட இலைகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்
  • ஹெக்கருக்கு 1 விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • கோட்டிசா கார்க்கிடோலோமியே ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்
  • மாலத்தியான் 50 EC 0.1 சதம் அல்லது கார்பரில் 0.2 சதம் தெளிக்கவும்

இலைகள் ஒன்றாகச் சேர்தல் பச்சையத்தை சுரண்டித்தின்னுதல்

புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015